தங்கத்தின் விலை குறைவால் கோல்டு ஈடிஎஃப்களின் பரிதாப நிலை!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோல்ட் எக்ஸ்சேஞ்ச் ட்ரேட்டெட் ஃபண்ட்டுகள், தங்க விலையின் அடிப்படையில் செயல்படுகின்றன. தங்கத்தின் மீது முதலீடு செய்தவர்களுக்கு, இந்த ஆண்டு மகிழ்ச்சியானதாக இல்லை. பொருளாதாரம் நல்ல நிலைக்கு திரும்பியதைத் தொடர்ந்து, முதலீட்டாளர்கள் ஈக்யூட்டியை விட்டு விலகியதால், விலைஉயர்ந்த பொருளான தங்கம், 12 வருட காலத்தில் காணாத விலை வீழ்ச்சியை முதல் முறையாக எதிர்நோக்கியுள்ளது. கடந்த வருடத்தில், கோல்ட் ஈடிஎஃப்களின் செயல்பாடு எப்படி இருந்தது என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.

ஆக்ஸிஸ் கோல்ட் ஈடிஎஃப்

ஆக்ஸிஸ் கோல்ட் ஈடிஎஃப்

நேரடியாக தங்கத்தை கொள்முதல் செய்து கையில் வைத்திருக்காமல், பணவீக்க தாக்கத்தை வெற்றி கொள்ளக் கூடிய அளவில் தங்கத்தின் மீது முதலீடு செய்து ஈட்டம் பெறும் ஒரு திட்டம் இந்த ஈடிஎஃப். சர்வதேச சந்தையில், தங்க விலை அடிப்படையில், இந்த திட்டம் கடந்த ஆண்டில் -7.63% ஈட்டியுள்ளது. இருப்பினும், சர்வதேச சந்தையில், தங்க விலைக்கீடாக, செப்டம்பர் 10, 2013 இல், இந்த திட்டம் 52-வார உயர்வைத் தொட்டது.

கோல்ட் பீஎஸ்

கோல்ட் பீஎஸ்

கோல்ட் பீஎஸ், கோல்ட்மேன் சாக்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும், ஒரு எக்ஸ்சேஞ்ச் ட்ரேட்டெட் திட்டமாகும். ஃபிசிக்கல் கோல்ட் வருவாயுடன் தொடர்பு படுத்திப் பார்கையில், சர்வதேச சந்தையில், தங்க விலை வீழ்ச்சி காரணமாக, கடந்த வருடத்தில் இந்த திட்டம் -7.24% எதிர்மறை ஈட்டம் அளித்துள்ளது.

எஸ்பிஐ கோல்ட் ஈடிஎஃப்

எஸ்பிஐ கோல்ட் ஈடிஎஃப்

இது எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிர்வகிக்கப்படும் கோல்ட் ஈடிஎஃப் திட்டமாகும், இதுவும் மற்றவைகளை ஒத்ததாக, கடந்த வருடத்தில் -7.41% எதிர்மறை ஈட்டம் அளித்துள்ளது.

கோட்டக் கோல்ட் ஈடிஎஃப்

கோட்டக் கோல்ட் ஈடிஎஃப்

ஒரு ஓப்பன்-என்டெட்(திறந்த முனை) ஈடிஎஃப் திட்டமான இது, உள்நாட்டு சந்தையில், நேரடி தங்க விலை அடிப்படையில் செயல்படுகிறது. கடந்த ஒரு வருட காலத்தில் இந்த திட்டம் -7.60% ஈட்டியுள்ளது.

ஐடிபிஐ கோல்ட் ஈடிஎஃப்

ஐடிபிஐ கோல்ட் ஈடிஎஃப்

உள்நாட்டு சந்தையில், நேரடி தங்கவிலையின் வீழ்ச்சி காரணமாக, இந்த ஓப்பன்-என்டெட் (திறந்த முனை) திட்டம், உள்நாட்டு தங்கவிலை அடிப்படையில், கடந்த ஓராண்டில் -8.03% ஈட்டம் அளித்துள்ளது.

ரெலிகேர் கோல்ட் ஈடிஎஃப்

ரெலிகேர் கோல்ட் ஈடிஎஃப்

ஃபிசிகல் கோல்ட் முதலீட்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஓராண்டு காலத்தில், இந்த திட்டம் -7.52% எதிர்மறை ஈட்டம் பெற்றுள்ளது. இந்த திட்டம் சமீபத்தில், செப்டம்பர் 19, 2013 இல், 52-வார 3,392 உயர் விலையைத் தொட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold ETFs in India: Tracking their 1 year performance

Gold Exchange Traded Funds, track gold rates and its not been a happy year for investors in gold.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X