தங்கம் மற்றும் வெள்ளியின் மீதான இறக்குமதி வரி குறைந்தது..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலக சந்தையில் தங்கம் வெள்ளி ஆகியவற்றின் ஸ்திரமற்ற விலை நிலவரத்தை கருத்தில் கொண்டு,தங்கம் மற்றும் வெள்ளியின் மீதான இறக்குமதி வரி முறையே 10 கிராம் அளவிற்கு 404 டாலர் ஆகவும்,1 கிலோவிற்கு 635 டாலர் ஆகவும் குறைக்கப்படுவதாக அரசு கடந்த திங்களன்று அறிவித்தது.

 

விலைபட்டியலுக்கு உட்படாமல் அயல்நாட்டிலிருந்து பொருட்கள் நமது நாட்டிற்குள் வருவதை தடுக்கும் நோக்கத்துடன் இறக்குமதி வரி அடிப்படை விலையாகிறது. உலக சந்தை விலை நிலவரத்தை ஆராய்ந்த பின்னர் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இறக்குமதி வரி திருத்தி அமைக்கப்படுகிறது.

இறக்குமதி வரி..

இறக்குமதி வரி..

கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 10 கிராம் அளவிற்கு 407 டாலர் ஆகவும் வெள்ளியின் மீதான இறக்குமதி வரி 1 கிலோவிற்கு 663 டாலர் ஆகவும் இருந்தது. இது சம்பந்தமான அறிவிப்பு மத்திய கலால் மற்றும் சுங்க துறை அமைப்பினரால் கடந்த திங்களன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

பித்தளை, சோயா விதை, கச்சா எண்ணெய்

பித்தளை, சோயா விதை, கச்சா எண்ணெய்

மதிப்பு மிக்க உலோகங்களை போலவே, உபயோகமற்ற பித்தளை மீதான இறக்குமதி ஒரு டன்னுக்கு 3,995 டாலரிலிருந்து 3,959 டாலராக வரி குறைக்கப்பட்டுள்ளது. மேலும் சோயா விதை, கச்சா எண்ணெய் மீதான இறக்குமதி வரி 944 டாலரிலிருந்து 917 டாலராக குறைக்கப்பட்டுள்ளது.

பாமாயிலின்
 

பாமாயிலின்

அதே போல் ஆர்பிடி பாமாயிலின் (RBD palmolein ) மீதான இறக்குமதி வரி ஒரு டன்னுக்கு 902 டாலரிலிருந்து 898 டாலராகவும், கச்சா பாமாயிலின் மீதான இறக்குமதி வரி ஒரு டன்னுக்கு 877 டாலரிலிருந்து 857 டாலராகவும் குறைக்கப்பட்டுள்ளது

லண்டன்

லண்டன்

லண்டனில் தங்கத்தின் விலை ஒரு அவுன்சிற்கு 0.33% ஆக வீழ்ச்சி அடைந்து 1241.80 டாலர் ஆக இருந்தது. வெள்ளியின் விலை,ஒரு அவுன்சிற்கு 0.23% கீழே இறங்கி 19.12 டாலர் ஆக இருந்தது. பலவீனமடைந்த உலக சந்தை விலை நிலவரத்தால், வெள்ளி மற்றும் தங்கத்தின் உள்நாட்டு விலையும் சரிவடைந்தே காணப்பட்டது.

தங்க இறக்குமதி குறையும்

தங்க இறக்குமதி குறையும்

பெட்ரோலியத்துக்கு அடுத்து இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்யும் இரண்டாவது பொருள் தங்கம். இந்திய அரசு நடப்பாண்டில் உயர்வடைந்து வரும் பற்றாக்குறையை ஒழுங்குப்படுத்தும் நோக்கில், ஏற்றுமதியை கட்டுப்படுத்த பல நடவடிக்கைக்ளை எடுத்து வருவதால், இந்த ஆண்டு தங்கத்தின் இறக்குமதியும் குறையும் என்று எதிர் பார்க்கபடுகிறது.

500 டன் மட்டுமே

500 டன் மட்டுமே

சென்ற நிதியாண்டில் 845 டன்களாக இருந்த தங்க இறக்குமதி இந்த நிதி ஆண்டில் 500 டன்களுக்கும் குறைவாகவே இருக்கும் என்று தங்க நகை விற்பனையாளர்கள் அமைப்பு தெரிவித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt cuts import tariff value of gold & silver

Government on Monday slashed the import tariff value on gold and silver to $404 per ten grams and $635 per kg, respectively, taking into account the volatility in the global prices.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X