கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்ற புது வழி: வைரக் கற்கள்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வைர வணிக கணக்குகள் மூலமாக சட்டத்துக்கு விரோதமான பல லட்சம் ரூபாய்களை நாட்டிற்குள் கொண்டு வரும் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று என குளோபல் ஃபினான்ஷியல் கிரைம்ஸ் கோம்பேட்டிங் பாடி சமர்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

சட்டத்துக்கு விரோதமான நிதி மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்குவதை கட்டுப்படுத்த வரையரைகள் நிர்ணயித்துள்ள ஃபினான்ஷியல் ஆக்ஷன் டாஸ்க் ஃபோர்ஸ் என்ற பாரிஸை சார்ந்த உலகாளவிய அமைப்பின் அறிக்கைப்படி, சட்டத்துக்கு விரோதமாகவும் சந்தேகப்படும் வழிகளிலும் பணத்தை கையாளுவதற்காக, இந்தியாவில் வைரங்கள் அதிக விலையில் வணிகம் செய்யப்பட்டது.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

இந்தியாவில், வைரத்திற்கான விலையை நிர்ணயிப்பதில் எந்த வித வரையேடுகளும் இல்லாததால், விலை மதிப்பில்லாத இந்த கல்லின் விலையை தரகர்கள் அளவுக்கு அதிகமாக உயர்த்துகின்றனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. இப்படிப்பட்ட ஒரு முக்கிய நிகழ்வை நிதி சார்ந்த அமலாக்க ஏஜென்சிகளின் கண்காணிப்பில் உள்ளது.

சட்ட விரோதமான செயல்

சட்ட விரோதமான செயல்

உலகளாவிய வைர தொழிலின் பொதுவான மீள்பார்வை, அதன் செயல்பாடு மற்றும் ஒரு விற்பனைப் பொருளாக வைரத்தின் இயல்புகள் போன்றவைகளை பற்றி சட்டத்துக்கு விரோதமாக நடக்கும் பணம் கையாளுதல் மற்றும் தீவிரவாதத்துக்கு நிதி அளிப்பதை எதிர்க்கும் கண்ணோட்டத்தோடு விளக்கும் குறிக்கோளோடு தான் இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டது.

விலை உயர்வு..
 

விலை உயர்வு..

"உண்மையான விலையை விட பல லட்சம் அமரிக்க டாலர் அதிகமாக விலை நிர்ணயிக்கப்பட்டு, இந்தியாவில் வைரங்கள் எப்படி ஏற்றுமதி செய்யப்பட்டது என்பதை இந்த அறிக்கை தெளிவாக்கும்". மேலும் "வைர வணிகத்தின் மூலம் சட்டத்துக்கு விரோதமான செலாவணி மற்றும் தீவிரவாதத்திற்கு நிதி அளித்தலை ஊக்குவிப்பதை" பற்றிய FATF அறிக்கை கூறியுள்ளது.

4 நாடுகள்..

4 நாடுகள்..

இவ்வகையான நிகழ்வுகள் இன்னும் நான்கு நாடுகளிலும் நடக்கிறது. அவை இஸ்ரேல், பெல்ஜியம், கனடா மற்றும் அமெரிக்கா. வைர வணிகம் பெருவாரியாக நடந்து வரும் மிகப்பெரிய சந்தைகளாக விளங்குவது சீனாவும், இந்தியாவும் தான்.

சூரத், மும்பை

சூரத், மும்பை

இந்த அறிக்கை கண்டுபிடிக்கப்படாத குற்றம் ஒன்றினையும் குறிப்பிட்டுள்ளது. அதன் படி, சூரத் மற்றும் மும்பை நகரங்களை சேர்ந்த இறக்குமதியாளர்கள், ஹாங்காங் மற்றும் சீனாவில் இருந்து வைரங்களை இறக்குமதி செய்கின்றனர். அப்படி செய்யும் போது, வைரத்தின் விலையை ஒரு காரட்டுக்கு 544.8631 அமேரிக்க டாலராக விலை உயர்த்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's diamond trade being used for money laundering: Report

India is one of the five countries where instances have been found that trade accounts of diamond business are being used to launder illegal funds to the tune of millions of dollars.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X