இந்தியாவில் சிறு, குறு தொழில்களை உக்குவிக்க களமிறங்கும் கூகுள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலகில் அதிகளவில் பயன்படுத்தப்படும் தேடுதல் இணைய தளமான கூகுள், இந்தியாவில் உள்ள 5 லட்சத்திற்கு அதிகமான சிறிய மற்றும் நடுத்தர தொழில்களின் வரத்கத்தை ஆன்லைனுக்கு எடுத்து செல்ல உதவி புரிய திட்டமிட்டுள்ளது.

 

2015ஆம் ஆண்டில், இணைய தள சந்தையில் அமெரிக்காவை முந்தி உலகின் இரண்டாவது பெரிய இணைய தள சந்தையாக இந்தியாவை உருவாக்க, கூகுள் இந்தியாவை முக்கிய சந்தையாக கொண்டு, உலகளாவிய வருவாயில் முக்கிய பங்கு வகிக்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்களின் மீது கவனம் செலுத்தி வருகிறது.

கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனத்திற்கான சிறிய மற்றும் நடுத்தர தொழில்களின் உலக தலைவரும் துணை அதிபருமான ஆலன் திகேசென் கூறுகையில், "சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் வாடிக்கையாளர்களை சென்றடைய செலவு குறைந்த வழியை ஏற்படுத்தி தருவதற்கான ஆரம்பகட்ட முயற்சியை நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டது" என்று அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இந்திய சந்தை

இந்திய சந்தை

உலகின் சிறந்த 20 சந்தைகளில் வேகமாக வளர்ந்து வரும் இந்திய சந்தையில் ( வளரும் சந்தையா இல்லை ஏமாறும் மக்களா?? ) இது முக்கிய வளர்ச்சிக்கான ஒரு சிறந்த முயற்சி என அவர் தெரிவித்தார்.

புதிய தயாரிப்புகள்
 

புதிய தயாரிப்புகள்

சிறிய மற்றும் நடுத்தர தொழில்களின் துறையில் எண்ணிக்கையை அதிகரிக்கவும் புதிய தயாரிப்புகளை உருவாகி வளர்ச்சியை மேம்படுத்தவும் கூகுள் நிறுவனம் கணிசமான முதலீட்டை இந்தியாவில் செய்துள்ளது. மேலும் இது தனது சேவையை ஆங்கிலத்திலும் மற்றும் இந்தியாவில் உள்ள 9 மண்டல மொழிகளிலும் வழங்கி வருகிறது.

1,200 பங்குதாரார்கள்

1,200 பங்குதாரார்கள்

சிறிய மற்றும் நடுத்தர தொழில் புரிவோர் தங்கள் தொழிலை நிர்வகிக்க உதவும் பொருட்டு நாடு முழுவதும் 1,200 பங்குதாரார்களை கூகுள் நிறுவனம் கொண்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக இந்த நிறுவனம் இந்தியாவில் 30,000 சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் வர்த்தகத்தை ஆன்லைனுக்கு எடுத்து சென்றுள்ளது.

65 நகரங்கள்

65 நகரங்கள்

இந்தியா முழுவது 65 நகரங்களில் தனது பங்குதாரர்களை கொண்டுள்ள இந்நிறுவனம், நடப்பு நிதியாண்டில் இந்த நிறுவனம் 100 நகரங்களில் தனது பங்குதாரர்களை கொண்டு செயல்பட திட்டமிட்டுள்ளது.

இன்டர்‌நெட் பயன்பாட்டாளர்கள்

இன்டர்‌நெட் பயன்பாட்டாளர்கள்

சுமார் 200 மில்லியனுக்கும் அதிகமான இன்டர்‌நெட் பயன்படுத்துபவர்களை கொண்டுள்ள இந்தியா,சீனாவை அடுத்து உலகின் இரண்டாவது இணைய தள சந்தையாக உருவெடுக்கும் வழியில் சென்று கொண்டுள்ளது.

ஈ-காமர்ஸ்

ஈ-காமர்ஸ்

கூகுள் இந்தியாவின் சிறிய மற்றும் நடுத்தர தொழில் தலைவரான, கே.சூர்ய நாராயணா இது குறித்து கருத்து தெரிவிக்கையில் மலிவு விலை ஸ்மார்ட் போன் வருகையால் அதிகமான ஆன்லைன் பயனாளர்களை கொண்டு இந்திய செயல்படுகிறது என்று கூறினார்.மேலும் 2013ஆம் ஆண்டில் 10 பில்லியன் டாலரைக் கொண்டு செயல்பட்டு வந்த ஈ-காமர்ஸ் தொழில்கள் 2020ஆம் ஆண்டிற்குள் 80- 100 டாலரை தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

5% மட்டுமே!!

5% மட்டுமே!!

இந்தியாவில் உள்ள 50 மில்லியனுக்கும் அதிகமான சிறிய மற்றும் நடுத்தர தொழில்களில் 5% மட்டுமே ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Google to focus on SMBs in India

The world's most-used web search engine Google plans to help half a million Small and Medium Businesses (SMBs) in India to go online by the end of next year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X