இந்தியாவில் இரண்டாவது தொழிற்சாலையை துவங்கும் மெர்சிடஸ்-பென்ஸ்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடஸ் பென்ஸ், இந்தியாவில் தனது இரண்டாவது உற்பத்தி தொழிற்சாலையை விரைவில் துவங்க உள்ளது. இந்நிறுவனத்தின் உற்பத்தி அளவை இது இரண்டு மடங்காக அதிகப்படுத்தும் என்கிறார் இந்நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி.

 

'இரண்டாவது உற்பத்தி தொழிற்சாலை இறுதிக்கட்ட நிலையில் உள்ளது மற்றும் அனுமதிகளைப் பெற முயன்று வருகிறது. இந்த தொழிற்சாலை விரைவில் தயாராகி விடும்,' என்கிறார் மெர்சிடஸ்-பென்ஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் நெட்வொர்க் வளர்ச்சிப் பிரிவின் துணைத்தலைவராக இருக்கும் திரு.போரிஸ் பிட்ஸ்.

முதல் தொழிற்சாலை

முதல் தொழிற்சாலை

2009-ம் ஆண்டு, புனே அருகிலுள்ள சகானில் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தின் முதல் தொழிற்சாலை, ஒரு ஆண்டுக்கு 10,000 கார்களை தயாரிக்கும் திறன்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

உற்பத்தி அதிகரிப்பு

உற்பத்தி அதிகரிப்பு

இரண்டாவது தொழிற்சாலையின் துவக்கத்திற்குப் பின்னர், இந்நிறுவனத்தின் உற்பத்தித் திறன் 20,000 கார்களாக, உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரிக்கும்.

விற்பனை

விற்பனை

கடந்த ஆண்டு, மெர்சிடஸ்-பென்ஸ் 9,000 கார்களுக்கும் அதிகமான விற்பனையை பதிவு செய்திருக்கிறது. 'இந்த ஆண்டில் நாங்கள் இரட்டை இலக்கத்திற்கு வளருவோம் என்று எதிர்பார்க்கிறோம்,' என்று ஸ்பெஷல் வகை யு-கிளாஸ் மற்றும் டீ-கிளாஸ் காம்பேக்ட் கார்களை இன்று அறிமுகப்படுத்திய போது திரு.பிட்ஸ் பத்திரிக்கையாளர்களிடம் தொவித்தார்.

ஆடம்பர கார்கள்
 

ஆடம்பர கார்கள்

'சாதாரண பயணிகள் கார் சந்தையை ஒப்பிடும் போது அதிகமான வளர்ச்சியைப் பெறுவது ஆடம்பர கார் சந்தை இருக்கும் என்பதால், எதிர்காலத்திற்கு-தயாராக இருக்கச் செய்ய இந்த புதிய தொழிற்சாலை உதவும்,' என்கிறார் அவர்.

அதித வரவேற்பு

அதித வரவேற்பு

இப்பொழுது, நாட்டின் மொத்த கார் சந்தையில் ஆடம்பர கார்கள் பிரிவு 1.5 சதவீத இடத்தையே பெற்றுள்ளது. '2022ஆம் ஆண்டு வாக்கில், 4 சதவீதமாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்படும் இந்த சந்தையில், 5.5. இலட்சம் யூனட்கள் தேவைப்படும்' என்கிறார் பிட்ஸ்

முதலீடு

முதலீடு

இரண்டாவது தொழிற்சாலையை துவக்குவதுடன் சேர்த்து, இந்தியாவில் செய்யப்பட்டுள்ள மொத்த முதலீடு ரூ.850 கோடிகளைத் தொடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mercedes-Benz India to start second plant soon

Luxury car maker Mercedes-Benz would start manufacturing at its second plant shortly, which would help the company double its production capacity in India, an official of the company said. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X