ஜப்பானுக்கு போட்டியாக இந்தியாவில் முதலீடு செய்யும் சீனா!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஜப்பான் இந்தியாவில் அடுத்த 5 வருடத்தில் 35 பில்லியன் டாலருக்கு மேல் முதலீடு செய்வதாக அறிவித்த மறுநாளே சீனா, மஹாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் இரண்டு தொழிற்நுட்ப பூங்காக்களை அமைக்க சுமார் ஐந்து பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

 

(READ: Gold "zero" returns in last one year, shares gain 50%; What to buy now?)

முதல் கட்டமாக சீனா, புனேயில் உள்ள தொழிற்நுட்ப பூங்காவில் சுமார் ஐந்து பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது, இதன் மூலம் ஆட்டோமொபைல் தயாரிப்புப் பணிகளில் அதிகப்படியான கவனத்தை செலுத்தவும் முடிவு செய்துள்ளது.

சீன அதிபர் வருகை

சீன அதிபர் வருகை

இதற்கான ஒப்பந்தம், இந்தமாதம் இந்தியாவிற்கு வருகை தரவுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வருகையின் போது கையெழுத்திடப்படும் என டெல்லியில் உள்ள சீனத் தூதர் லியு யூஃபா தெரிவித்தார்.

தொழிற்நுட்ப பூங்கா

தொழிற்நுட்ப பூங்கா

புனேயில் உள்ள தொழிற்நுட்ப பூங்கா 6 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலும், அஹமதாபாத்தில் அமையவுள்ள தொழிற்நுட்ப பூங்கா 10 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலும் சுமார் ஆறாயிரம் கோடி செலவில் கட்டப்படவுள்ளன.

லியு யூஃபா

லியு யூஃபா

அஹமதாபாத் தொழிற்நுட்ப பூங்காவில் மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கருவிகளைத் தயாரிக்கும் பணிகளில் கவனம் செலுத்தும் என தென்னிந்திய மில் கூட்டமைப்பு நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யூஃபா தெரிவித்தார். புனே தொழிற்நுட்ப பூங்காவின் முதல் கட்டம் சுமார் 3000 கோடி ரூபாய் முதலீட்டில் மூன்று வருடங்களில் கட்டி முடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஸ்மார்ட் சிட்டி
 

ஸ்மார்ட் சிட்டி

"இத்தொழிற்நுட்ப பூங்கா ஒரு நவீன நகரமாக (ஸ்மார்ட் சிட்டி) இருக்கும். இங்கு வங்கிகள், ஹோட்டல்கள், பள்ளிகள், பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் பிற அம்சங்களைக் கொண்டவையாக இவை இருக்கும்" என யூஃபா மேலும் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

புனே தொழிற்நுட்ப பூங்கா ஒட்டுமொத்தமாக சுமார் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதுடன் பல ஆயிரம் கோடிகளை வருமானமாக ஈட்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

முதலீடு

முதலீடு

இந்த தொழிற்நுட்ப பூங்கா, 15 நிறுவனங்களைக் கொண்டிருப்பதுடன் ஒரு பெரும் முதலீட்டையும் சீன நிறுவனங்களிலிருந்து பெறும் என அவர் கூறினார்.

முதலீட்டில் வித்தியாசம்

முதலீட்டில் வித்தியாசம்

சீனா இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்க ஆர்வம் காட்டிவந்தாலும் சில காரணங்களால் அது நிறைவேறுவதில் சிக்கல் நீடிக்கின்றது. இந்திய நிறுவனங்கள் சீனாவில் செய்துள்ள முதலீடுகள் 24,000 கோடிகளைத் தாண்டியுள்ள நிலையில், இந்தியாவில் சீனாவின் முதலீடு சுமார் 6 ஆயிரம் கோடி மட்டுமே என அவர் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China to invest over $5 billion in 2 IT parks in Maharashtra, Gujarat

A day after Japan announced investments to the tune of $35 billion in India, China has said that it would set up two industrial parks—one each in Maharashtra and Gujarat involving investments in excess of $5 billion.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X