3 மாத விலை குறைவை பதிவு செய்த தங்கம்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: சில மாதங்களுக்கு முன்பு தங்கத்தின் விலையை பார்த்து மிரன்ட மக்கள் ஏராளம். ஆனால் இன்று தங்க விலை சுமார் 3 மாத சரிவை எட்டியுள்ளது. இதற்கு முக்கிய கராணம் அமெரிக்க அரசு வட்டி விகிதம் உயர்த்துவுதாக வெளிவந்த செய்திகள் மற்றும் உக்ரைன் பிரச்சனைகள் தான்

 

இதுமட்டும் அல்லாமல் உலக நாடுகளின் டாலர் வர்த்தகம் சுமார் 14 மாத உயர்வை தொட்டுள்ளது. உலக சந்தைகளில் ஒரு அவுன்ஸ் (28.34 கிராம்) தங்கத்தின் விலை 0.1 சதவீதம் குறைந்து 1,247.10 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது.

ஆசிய சந்தைகள் உச்சத்தை எட்டி வரும் டாலர் வர்த்தகத்தை குறைக்க சொத்துக்களை விற்க திட்டமிட்டுள்ளது. இதன் படி தங்க இருப்புகள் அதிகம் கொண்ட நாடுகள் அனைத்தும் தனது இருப்பை குறைக்க துவங்கியுள்ளது.

ஒரு வாரத்திற்கு தங்கம் டான்ஸ்...

ஒரு வாரத்திற்கு தங்கம் டான்ஸ்...

அடுத்த வாரம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி, 2 நாள் திட்டக் குழு கூட உள்ளது. அது வரை தங்கம் மீதான வர்த்தகத்தில் நிலையற்ற தன்மை மட்டுமே இருக்கும். மேலும் திட்ட குழு முடிவில் வட்டி வகிதங்கள் மாற்றத்தின் அடிப்படையில் தங்கத்தில் விலை மாற்றம் இருக்கும் என சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா

இந்தியா

நேற்று வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்க இறக்குமதி வரியில் எந்த விதமான தளர்வுகளும் இருக்காது என தெரிவித்தார். உலக நாடுகள் அனைத்தும் தங்க இருப்பை குறைத்துக்கொள்ளும் நிலையில் இந்தியா அதிகப்படியாக தங்கம் இறக்குமதி செய்தால் நிலைபெற்றிருக்கும் இந்திய பொருளாதாரம் நிலையற்று போகும்.

சீனா
 

சீனா

தங்க இறக்குமதியில் இந்தியாவிட பெரிய நாடு என்றால் அது சீனா தான். ஹாங்காங் சந்தையின் நிலவரப்படி சீனாவில் தற்போது தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளது.

தங்கம்

தங்கம்

ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதியில் இருந்து இந்தியாவில் தங்கம் விலை தொடந்து குறைந்து வருகிறது. இதன் படி நேற்றைய வர்த்தகத்தில் 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 19 ரூபாய் குறைந்து ரூ.2,749 ஆக இருக்கிறது, அதேபோல் 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 19 ரூபாய் குறைந்து ரூ.2,570 ஆக உள்ளது.

வெள்ளி

வெள்ளி

ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 332 ரூபாய் குறைந்து 41,244 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

டாலர் - ரூபாய்

டாலர் - ரூபாய்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு மாத காலமாக 60.20 முதல் 60.50 ரூபாய் வரையில் வர்த்தகம் செய்யப்படுகிறது. ஆனால் இன்று இதன் மதிப்பு 60.82 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

இனி 10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரத்தை இந்தியாவின் முக்கிய நகர வாரியாக பார்க்கலாம்.

ஹைதராபாத்

ஹைதராபாத்

ஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.25,750

பெங்களூரு

பெங்களூரு

பெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.25,740

கொல்கத்தா

கொல்கத்தா

கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.25,740

டெல்லி

டெல்லி

தலைநகரமான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.25,620

சென்னை

சென்னை

நமது சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.25,700

மும்பை

மும்பை

மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.25,650

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold near 3-month low on dollar strength, rate hike fears

Gold was trading near a three-month low on Thursday, hit by fears of an early hike in US interest rates, a stronger dollar and an apparent easing of tensions over Ukraine.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X