இந்தியாவில் முதலீடு செய்ய காத்துக்கிடக்கும் உலக நாடுகள்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தூர்: இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகள் காத்துக்கிடக்கிறது, வாய்ப்புகளை சரியாக கைபற்ற வேண்டியது மாநில அரசின் பணி என்று வியாழக்கிழமை இந்தூரில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தாக். இம்மாநாட்டில் இந்தியவின் முக்கிய தலைகள் பலரும் கலந்துகொண்டனர அதில் முக்கியமாக கவுதம் அதானி, முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, சைரஸ் மிஸ்திரி அவர்களுடன் 28 நாடுகளின் தூதர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.

 

இந்தியாவை வர்த்தகம் செய்யும் இடமாக பார்க்காமல் உற்பத்தி தளமாக பார்க்கவ வேண்டும் இதன் மூலம் நாட்டின் வர்த்தக நிலைகளை வேகமாகவும் வலிமையாகும் வளர வழிவகுக்கும் என்று இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

100 பில்லியன் டாலர் முதலீடு

100 பில்லியன் டாலர் முதலீடு

ஜப்பான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு சுமார் 100 பில்லியன் டாலர் அளவு முதலீடு செய்வதற்கு அனுமதி கோரியிருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி நாட்டின் உற்பத்தியை உயர்ந்த அனைவரும் செயல்பட வேண்டும்.

உற்பத்திக்கும் விதை

உற்பத்திக்கும் விதை

மத்திய அரசின் தேர்தல் வாக்குறுதியில் ஒன்று இந்தியாவை உலகளாவிய தயாரிப்பு மையமாக மாற்றுவது. இதன் துவக்கும் தான் 'மேக் இன் இந்தியா' திட்டம்.

முதலீடு

முதலீடு

பிரதமரின் ஜப்பான் மற்றும் அமெரிக்கா பயணம் நாட்டின் முதலீட்டுக்கும் முக்கியமாக அமைந்துள்ளது. அதேபோல் இரண்டாவது வல்லரசு நாடாக வளர்ந்து வரும் சீனாவும் இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது குறிப்பிடதக்கது.

மாநிலத்தின் திறன்
 

மாநிலத்தின் திறன்

இந்தியாவில் குவிய உள்ள முதலீட்டை மாநில அரசுக்கு வருவாய் அளிக்கும் வகையில் நிறுவனங்களுக்கும் ஏற்ற வகையில் திட்டங்களை அமைத்து தருவது மாநில அரசின் முக்கிய பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

முக்கிய துறைகள்

முக்கிய துறைகள்

விவசாயம், உற்பத்தி துறை, சேவை துறைகளை ஊக்குவித்து, கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்து வருகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதே எங்கள் வளர்ச்சித் திட்டத்தின் முதன்மையான நோக்கம் ஆகும். இந்தியா இளைஞர்களின் தேசம். எனவே அனைத்து முதலீட்டு நடவடிக்கைகளிலும், வேலை வாய்ப்பை உருவாக்குவதுதான் அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

$100 billion foreign investments knocking at India's doors: PM Narendra Modi

Prime Minister Narendra Modi today said $100 billion worth of foreign investments is knocking at the doors of India and it is up to the states to lap up as much as they can.
Story first published: Saturday, October 11, 2014, 16:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X