பங்குச்சந்தையில் இப்ப முதலீடு செய்வது சரியா??

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்தே சென்செக்ஸ் உசைன் போல்டை போல ஒட துவங்கியது இதனால் 18,000 புள்ளிகள் என்ற அளவில் இருந்த மும்பை பங்குசந்தை 27,000 புள்ளிகளாக உயர்ந்தது. இதன் மூலம் இந்திய நிறுவனகளின் பங்குகளின் விலை மிகவும் அதிகரித்தது.

நல்ல விஷயம் தானே, அதாவது ஆச்சரியப்பட வைக்கும் வகையில் கடந்த ஒரு வருடத்தில் சுமார் 9000 புள்ளிகள் அல்லது 50 சதவீதம் அளவிற்கு பங்குச்சந்தை வளரச்சியை சந்தித்துள்ளது. பங்குகளின் விலை அதிகரித்தால் சில்லறை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகளவில் குறைந்துள்ளது. நம் நாட்டில் பங்குசந்தை வலுவாகவும் விரைவாகவும் வளர்வதற்கான முக்கிய காரணம் சில்லறை முதலீட்டாளர்கள்.

 இப்ப என்ன சொல்ல வரிங்க...

இப்ப என்ன சொல்ல வரிங்க...

இந்த கட்டுரையில் பங்குகளை வாங்க வேண்டாம் என்று நாங்கள் சொல்ல விரும்பவில்லை. மாறாக, சந்தைகளிலுள்ள பங்குகளின் மதிப்புகள் என்றாவது ஒருநாள் வீழ்ந்து தான் ஆக வேண்டும் என்பதை நினைவில் வைக்கும் படியே சொல்கிறோம். இதோ அதற்காகவே, பங்குகளை வாங்குவதை தவிர்ப்பதற்கான 7 காரணங்களை உங்களுக்கு பரிந்துரைக்கிறோம்.

மிகவும் விலை அதிகமுள்ள சந்தை

மிகவும் விலை அதிகமுள்ள சந்தை

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடத்தில் 20 முறை அதிகப்படியான அளவை தொட்டுள்ளன. இதன் மூலம் பங்குகளின் விலைகள் இப்போதைய நிலையிலிருந்து குறைந்த பட்சம் அதிகரிக்கும். BRIC நாடுகள் அனைத்தும் மற்றும் இதர வளர்ந்து வரும் சந்தை பொருளாதாரங்களும் இந்திய பங்குகளின் மதிப்புகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவான விலையில் கிடைக்கின்றன.

ஜிடிபி

ஜிடிபி

மொத்த தேசிய உற்பத்தியில் இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் பங்கு மதிப்புகளும் கடந்த மூன்று ஆண்டுகளை விட சற்றே அதிகமாக உள்ளன. இதற்கான சந்தை மதிப்பு மொத்த தேசிய உற்பத்தியில் ரூ.93 இலட்சம் கோடி அல்லது கிட்டத்தட்ட 86 சதவீதமாக உள்ளது. இதன் மூலம் சந்தைகள் நியாயமான மதிப்பை அடைந்துள்ளதையும் மற்றும் இதிலிருந்து உயர்ந்து செல்வது அந்த மதிப்பை நீட்டிச் செல்வதாகவும் இருப்பதை உணர முடிகிறது.

நீட்டப்பட்ட மதிப்பீடுகள்

நீட்டப்பட்ட மதிப்பீடுகள்

பெரும்பாலான பங்குகளின் மதிப்புகள் கடந்த ஒரு ஆண்டில் இருந்ததை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகரித்துள்ளன. எனினும், இந்திய நிலக்கரி நிறுவனம் போன்ற சிலவற்றில் மட்டும் பங்கு மதிப்புகள் உயர்ந்து செல்லவில்லை.

வேகமாக வளர்ந்து வரும் காரணிகள்

வேகமாக வளர்ந்து வரும் காரணிகள்

பொருளாதாரத்தை குறித்த அனைத்து நற்செய்திகளும் இந்திய சந்தைகளுக்கு சாதகமாகவே உள்ளது. மேலும் நிலையான அரசாங்கம், மேம்பட்டு வரும் நடப்பு கணக்கு பற்றாக்குறை மற்றும் குறைந்து வரும் பணவீக்கம் ஆகியவற்றை முக்கிய காரணியாக உள்ளது.

அமெரிக்காவின் வட்டி விகிதத்தின் பயம்

அமெரிக்காவின் வட்டி விகிதத்தின் பயம்

அமெரிக்காவின் வட்டி விகிதங்கள் உயரும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், சந்தைகள் வீழ்ச்சியடையலாம் மற்றும் அது தான் முதலீட்டாளர்களுக்கான சரியான நுழைவாயிலாகவும் இருக்கும்.

பஃபெட் கோட்பாடு என்ன சொல்கிறது?

பஃபெட் கோட்பாடு என்ன சொல்கிறது?

'அனைவரும் பயந்து கொண்டிருக்கும் போது பேராசையோடிருங்கள் மற்றும் அனைவரும் பேராசையோடு இருக்கும் போது பயத்துடன் இருங்கள்' என்று பங்குகளைப் பற்றி குறிப்பிடுகிறார் வாரன் பஃபெட். இந்நேரத்தில் யாரும் பயத்துடன் இருப்பதை நாம் பார்க்க முடியவில்லை.

குறைந்த பங்குகளின் அதிகரிப்பு

குறைந்த பங்குகளின் அதிகரிப்பு

மோசமான அடிப்படைகள் மற்றும் மிகவும் அதிகமான இழப்புகளை கொண்ட பங்கு விற்பனை அதிகரித்து வருகின்றன. 2008ஆம் ஆண்டின் ஏற்றத்தின் போது இவ்வாறு நடந்தது. ஆனால் அதற்குப் பின்னர் பங்கு விற்பனை வீழ்ந்து விட்டன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

7 reasons why shares in India may not be a great bet now

Since Sept 2013, the Sensex has rallied from 18,000 points to 27,000 points, making shares in India very expensive. Those who had not invested last year are a disappointed lot and those who would be buying now, would be doing so at horribly expensive rates. We are not suggesting you do not buy shares. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X