ரியல் எஸ்டேட் துறையில் 100% அன்னிய முதலீட்டிற்கு ஒப்புதல்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மத்திய அரசு அன்னிய நேரடி முதலீடுகளை அதிகரிக்க பல துறைகளில் அதன் அளவீடுகளை உயர்த்தியது. இதனால் கடந்த 4 மாதங்களில் இந்திய முதலீட்டுச் சந்தையில் அதிகளவிலான முதலீடு குவிந்தது.

தற்போது நாட்டின் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளை மேம்படுத்த, இத்துறையில் முதலீடுகளை அதிகரிக்க ரியல் எஸ்டேட் துறையில் அன்னிய முதலீட்டுக்கான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.

100% அன்னிய முதலீடு

100% அன்னிய முதலீடு

இந்திய கட்டுமானத் துறையில் புதிய நகரங்கள்ஷ மருத்துவமனை மற்றும் விடுதிகளை உருவாக்க இத்துறையில் 100 சதவீத அன்னியமுதலீட்டிற்கு மத்திய அரசு பரிந்துரை செய்யதது. இதற்கு அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.

மத்திய தொழில் கொள்கை அமைச்சகம்

மத்திய தொழில் கொள்கை அமைச்சகம்

தளர்த்தப்பட்ட விதிமுறைகளை மத்திய தொழில் கொள்கை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த துறையில் 100 சதவீத அளவுக்கு அன்னிய முதலீடுகள் அனுமதிக்கப்படும் என விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய முதலீடுகள்

புதிய முதலீடுகள்

மத்திய அரசு அறிவித்த தளர்த்தப்பட்ட விதிகளால் கட்டுமானத் துறையில் அன்னிய நேரடி முதலீடு அதிகரிக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது. இது தவிர புதிய துறைகளான வீட்டுமனை, வீடு உள்ளிட்டவற்றிலும் முதலீடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இத்துறை அடுத்த 10 வருடத்தில் சுமார் 200 சதவீதம் வரை உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அனைவருக்கும் வீடு

அனைவருக்கும் வீடு

மேலும் சிறிய நகரங்களில் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு மலிவு விலையில் வீடுகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீடு

இத்துறையிலவ் 2006ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அதிகரித்து வந்த அன்னிய நேரடி முதலீடு, கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து சரிய துவங்கியது. இத்திருத்தப்பட்ட கொள்கை அறிவிப்பு நடப்பு நிதி ஆண்டில் பட்ஜெட் அறிவிப்பை ஒட்டி மேற்கொள்ளப்பட்டதாகும்.

10 ஆண்டுகள்

10 ஆண்டுகள்

ஒரு திட்டப்பணி தொடங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட காலத்திலிருந்து 10 ஆண்டுகள் வரை அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்ககலாம். திட்டப்பணி முடியும் காலம் வரையில் முதலீடுகளை தொடர்ந்து பெறலாம் என்றும் புதிய விதிமுறை தெரிவிக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Easy exit norms for foreign investors in construction sector

To help attract foreign funds in construction of townships, hospitals and hotels, the government on Wednesday relaxed the FDI policy for this sector by easing exit norms and reducing built-up area and capital needs.
Story first published: Thursday, December 4, 2014, 16:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X