சுவிட்சர்லாந்தில் இருந்து இந்தியாவிற்கு ரூ.10,000 கோடி மதிப்பிலான தங்கம் இறக்குமதி!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கருப்பு பணத்தை, வெள்ளையாக மாற்ற புல்லியன் சந்தை சிறப்பாக பயன்படுகிறது என கருப்பு பணத்தை ஒழிக்கும் மத்திய அமைச்சகத்தின் சிறப்பு குழு வெளியிட்ட பல அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.

 

இச்செய்தியை உண்மையாக்கும் விதமாக 2014ஆம் ஆண்டில் மட்டும் சுவிட்சர்லாந்தில் இருந்து இந்தியாவிற்கு, சுமார் 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை ஏற்றுமதி செய்துள்ளது. மேலும் கடந்த அக்டோபர் மாதம் (இந்தியாவில் தங்க இறக்குமதிக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்த நேரம்) மட்டும் சுவிஸ் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு சுமார் 2.8 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை ஏற்றுமதி செய்துள்ளது, அது கடந்த வருடம் 2.2 பில்லியன் டாலராக இருந்தது.

1 டிரில்லியன் டாலர்

1 டிரில்லியன் டாலர்

2014ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் 14.2 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை சுவிஸ் நாட்டில் இருந்து இறக்குமதிப்பு செய்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பின் படி 93,000 கோடி ரூபாய் ஆகும்.

கருப்பு பணம்

கருப்பு பணம்

இத்தகைய பரிமாற்றம் கருப்பு பணத்தை வெண்மையாக்கும் திட்டமா என மத்திய அரசு சந்தேகிக்கிறது. இது குறித்து கேள்விகளை மத்திய அரசு சுவிஸ் நாட்டின் அதிகாரிகளை கேட்டுள்ளது. ஆனால் இதுவரை சுவிஸ் அரசு எந்தவிதமான பதில்களையும் கேட்டுள்ளது.

70 சதவீதம் தங்கம்
 

70 சதவீதம் தங்கம்

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தங்க இறக்குமதிக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையிலும், தங்க இறக்குமதி செப்டம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் 28 சதவீதம் அதிகமாக இருந்தது. கடந்த 5 மாதங்களில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தில் 70 சதவீதம் சுவிஸ் நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது.

உலக நாடுகளின் அழுத்தம்

உலக நாடுகளின் அழுத்தம்

சுவிஸ் நாட்டில் அதிகாளவில் கருப்பு பணம் புழங்குவதால், உலக நாடுகள் இந்நாட்டை இக்கட்டான சூழ்நிலைக்கு உட்படுத்தி வருகிறது. இதனால் சுவிஸ் நாட்டின் வர்த்தக அறிக்கையை ஆண்டுதோறும் வெளிட்டு வருகிறது. இம்மாத முடிவில் இதற்கான அறிக்கையை வெளியிடும் என தெரிகிறது.

வர்த்தக தகவல்கள்

வர்த்தக தகவல்கள்

மேலும் இந்தியாவில் தங்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான 2013ஆம் ஆண்டின் தகவல்கள் மட்டுமே உள்ளது, 2014ஆம் ஆண்டின் முழுமையான தகவல்கள் இன்னும் திரட்டப்படவில்லை.

வர்த்தக அறிக்கை

வர்த்தக அறிக்கை

மேலும் இந்தியா மற்றும் சுவிஸ் நாட்டின் வர்த்தக அறிக்கையை ஒப்பிடும்போது உண்மையான நிலையும், மத்திய அரசு எடுக்க வேண்டிய முடிவுகளை உறுதி செய்ய முடியும்.

கருப்பு பணம்

கருப்பு பணம்

மேலும் சமீபத்தில் சுவிஸ் வங்கி வெளியிட்ட தகவலின் படி 2013ஆம் ஆண்டின் இறுதியில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் சுமார் 14,000 கோடி ரூபாய் உள்ளதாக தெரிவித்துள்ளது. இது 2012ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 42 சதவீதம் அதிகமாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amid concerns of bullion trade being used for routing of black money, Switzerland’s gold exports to India have risen further and fast approaching Rs. 1 trillion mark for the entire 2014.Amid concerns of bullion trade being used for routing of black money, Switzerland’s gold exports to India have risen further and fast approaching Rs. 1 trillion mark for the entire 2014.Amid concerns of bullion trade being used for routing of black money, Switzerland’s gold exports to India have risen further and fast approaching Rs. 1 trillion mark for the entire 2014.Amid concerns of bullion trade being used for routing of black money, Switzerland’s gold exports to India have risen further and fast approaching Rs. 1 trillion mark for the entire 2014.

Amid concerns of bullion trade being used for routing of black money, Switzerland’s gold exports to India have risen further and fast approaching Rs. 1 trillion mark for the entire 2014.
Story first published: Monday, December 15, 2014, 12:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X