'க்விக்கா' கல்லாகட்டிய குவிக்கர்.. ரூ.900 கோடி நிதி திரட்டல்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஆன்லைன் விற்பனை தளமான குவிக்கர், தனது நிறுவன வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்காக முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 150 மில்லியன் டாலர் ஆதாவது 900 கோடி ரூபாய் நிதித் திரட்டியுள்ளது.

 

இத்தொகையை மொபைல் தளத்திலும், பிற சேவைகளை மேம்படுத்தவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மொபைல் வர்த்தகம்

மொபைல் வர்த்தகம்

இந்தியாவில் மொபைல் வர்த்தகம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் பன்னாட்டு மற்றும் இந்திய முதலீட்டாளர்கள், மொபைல் மற்றும் இண்டர்நெட் நிறுவனங்களில் கண்களை மூடிக்கொண்டு காசை கொட்டுகின்றனர்.

குவிக்கர்

குவிக்கர்

இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ( Second handed products) மற்றும் புதிய பொருட்களை ஆன்லைனில் விற்கும் தளமான குவிக்கர் நிறுவனத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் சுமார் 900 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

இந்நிறுவனத்தில் ஏற்கனவே முதலீடு செய்திருந்த டைகர் குளோபல் மேனேஜ்மென்ட், இன்வெஸ்ட்மென்ட் ஏபி கெனிவிக் மற்றும் புதிதாக இம்முறை இணைந்த ஸ்டீட்வியூவ் கேப்பிடல் ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது.

பிரனாய் சுலெட்
 

பிரனாய் சுலெட்

குவிக்கரின் தலைமை நிர்வாக அதிகாரியான பிரனாய் சுலெட் கூறுகையில், 'வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் அளித்த சேவைகள் மற்றும் மாற்றங்கள் அதிகளவில் பயன் அளித்துள்ளது. மேலும் அதிக வாடிக்கையாளர்களைப் பெற நிறுவனம் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது,' என்றார்.

வாடிக்கையாளர்கள்

வாடிக்கையாளர்கள்

இந்நிறுவனம் இந்தியாவில் 1000 நகரங்களில் 30 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

நிறுவன விரிவாக்கம்

நிறுவன விரிவாக்கம்

கடந்த வருடத்தில் நிறுவன விரிவாக்கத்திற்காகச் சுமார் 60 மில்லியன் டாலர் முதலீடு செய்தது குவிக்கர் என்பது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Quikr raises Rs 900 cr in funding to invest in mobility

Online classifieds portal Quikr today said it has raised USD 150 million (about Rs 900 crore) from investors, including existing ones.
Story first published: Wednesday, April 8, 2015, 13:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X