பொருளாதார வளர்ச்சியில் உண்மையிலேயே சீனாவை இந்தியா முந்துகிறதா?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பல புதிய வளர்ச்சி மற்றும் தொழிற்துறை உற்பத்தி திட்டங்களைச் செயல்படுத்தி வரும் மத்திய அரசு ரயில், சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களில் மெத்தனம் காட்டி வந்தது.

 

கடந்த ஒரு வருடத்தில் பிற அனைத்து துறைகளிலும் குறிப்பிடத்தக்க அளவிலான வளர்ச்சியைக் மத்திய அரசு கண்டுள்ளது. மேலும் தற்போது செயல்படுத்தியுள்ள திட்டங்களுக்கும், இனி செயல்படுத்தப்போகும் திட்டங்களுக்கு உள்கட்டமைப்பு வசதி மிகவும் குறைவாகவே உள்ளது.

இதனைக் கூடிய விரைவில் மேம்படுத்தும் நிலையில் இந்திய பொருளாதார வளர்ச்சியில் சீனாவை கண்டிப்பாகப் பின்னுக்குத் தள்ளும்.

சீனாவும் இந்தியாவும்..

சீனாவும் இந்தியாவும்..

சீனாவின் பொருளாதார நிலை மோசமாக உள்ளதால், இந்தியாவின் ஆரம்பக் கட்ட வளர்ச்சிக்கு ஈடுகட்ட முடியவில்லை. எனவே தான் மார்ச் மாதம் முடிந்த காலாண்டில் இந்தியா 7.3 சதவீத வளர்ச்சியும், சீனா 7 சதவீத வளர்ச்சியும் பதிவு செய்திருந்தது.

உள் கட்டமைப்பு

உள் கட்டமைப்பு

2015-16ஆம் ஆண்டுக்கான திட்டத்தில் சாலை மற்றும் பாலம் கட்டுவதற்கான செலவீனத்தை மத்திய அரசு இரட்டிப்பு செய்துள்ளது. இதேபோல் ரயில் போக்குவரத்து மேம்பாட்டிற்கான செலவீனத்தை 3 மடங்கு அதிகரித்துள்ளது.

தற்போது இத்திட்டங்களுக்கான செயல்பாடு துவங்கியுள்ளதாக இத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே கூடிய விரைவில் இந்தியா சீனாவிற்கு நிகரான இடத்தைப் பிடிக்கும் என உலக நாடுகள் நம்புகிறது.

 

முதலீடு
 

முதலீடு

இத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், பொருளாதார வளர்ச்சியில் எருமை இல்லை ஒரு மிகப்பெரிய யானை ஒன்று டான்ஸ் ஆடத் துவங்கும் எனக் கட்டுமான நிறுவனத்தின் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

38 பில்லியன் டாலர்

38 பில்லியன் டாலர்

மேலும் மத்திய அரசு அதிகாரிகள் நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள 38 பில்லியன் டாலர் முதலீட்டை எப்படிப் பயன்படுத்த உள்ளனர் என்பதைப் பொறுத்தே, நாட்டின் நிலைப்பாடு உள்ளது.

தனியார் முதலீடுகள் குறைவு

தனியார் முதலீடுகள் குறைவு

கடந்த ஒரு வருடத்தில் மத்திய அரசு அறிவித்த திட்டங்கள் பெரும்பாலனவை செயல்படுத்த துவங்கிய நிலையில், உள்கட்டமைப்புத் திட்டங்கள் மட்டும் தூசி படிந்து காணப்பட்டது.

இதற்கு முக்கியக் காரணம் இத்துறையில் தனியார் நிறுவனங்களின் முதலீடு மிகவும் குறைவாக இருந்தது. இதன் காரணமாகத் தான் இத்திட்டங்களில் செயல்பாடு மந்தமாக இருந்தது.

 

10,000 கிலோமீட்டர் சாலை

10,000 கிலோமீட்டர் சாலை

மத்திய அரசு அறிவித்துள்ள படி 10,000 கிலோமீட்டர் சாலை திட்டத்தில் 2015-16ஆம் ஆண்டு முடிவில் சுமார் 25 சதவீத முடிவடையும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதலீட்டுச் சூழ்நிலை

முதலீட்டுச் சூழ்நிலை

இந்தியாவில் அனைத்து வளங்களும் உள்ள நிலையில் முதலீட்டுக்கான சூழ்நிலையை உருவாக்க மத்திய அரசு போராடி வருகிறது. இதற்காகப் பிரதமர் மோடி இந்தியாவிற்கு ஆதரவும் அளிக்கும் அனைத்து நாடுகளுக்கும் பயணித்து முதலீட்டுக்கான ஆதரங்களைச் சேகரித்து வருகிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Faster than China? India's road, rail drive could lay doubts to rest

Prime Minister Narendra Modi's reformist, but hard-up government has begun a splurge on road and rail building that analysts say could remove doubts over whether economic growth in India really is overtaking China.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X