முதலீட்டு ஆதாய வருவாயை குறியீட்டின் படி கணக்கிடுவது எப்படி?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: நீங்கள் ஒரு சொத்தை வாங்கிய மூன்று வருடங்கள் கழித்து லாபத்திற்கு அதனை விற்றால், நீங்கள் அந்த லாபத்திற்கு நீண்ட கால முதலீட்டு ஆதாய வரியை செலுத்தவேண்டியிருக்கும்.

 

உதாரணமாக நீங்கள் 2003 ஆம் ஆண்டில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு சொத்தை வாங்கி அதனை 2013 ஆம் ஆண்டு 40 லட்சம் ரூபாய்க்கு விற்றால், உங்களுக்கு லாபமாகக் கிடைத்த 20 லட்சம் ரூபாய்கு முதலீட்டு ஆதாய வரியை செலுத்த வேண்டும்.

இதன் தற்போதைய வரி விகிதம் குறியீட்டின் படி 20 சதவிகிதம் ஆகும். எனவே மேற்கூறிய உதாரணத்தின் படி நீங்கள் 20 லட்சத்தில் 20 சதவிகிதம் என்று இல்லாமல் குறியீட்டின் படியும் கணக்கிடவேண்டும்.

முதலீட்டு ஆதாய வருவாயை குறியீட்டின் படி கணக்கிடுவது எப்படி?

குறியீட்டின்படி முதலீட்டு ஆதாயம் என்றால் என்ன?

பொதுவாகவே பணவீக்கம் நமது லாபங்களைப் பதம் பார்ப்பதால், அரசு குறியீட்டின்படி சில சலுகைகளை வழங்குகிறது. இது செலவு பணவீக்க விகிதம் என்று அறியப்படுகிறது. இந்தக் குறியீடு ஒவ்வொரு ஆண்டின் நடுவில் வெளியிடப்படுகிறது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள பட்டியல் உங்களுக்கு இதைப் பற்றிய தகவல்களைத் தரும்.

முதலீட்டு ஆதாய வருவாயை குறியீட்டின் படி கணக்கிடுவது எப்படி?

எனவே மேற்கூறிய எடுத்துக்காட்டில், குறியிடப்பட்ட கொள்முதல் விலை என்பது உண்மையில் கொடுக்கப்பட்ட விலையை அந்த வருடத்தின் குறியீட்டு விகிதத்துடன் பெருக்கி அதனை விற்கப்படுகின்ற வருடத்தின் குறியீட்டுடன் வகுக்க வேண்டும்:

விலை= உண்மை விலை x விற்ற ஆண்டின் குறியீட்டு விகிதம் / வாங்கிய ஆண்டின் குறியீட்டு விகிதம்

எனவே குறியீட்டின்படி வாங்கப்பட்ட விலை என்பது
20 லட்சம் x 852 / 447 = ரூபாய் 38,12,080.
எனவே, நீங்கள் வரியை பின்வருமாரு செலுத்த வேண்டும்

விற்கப்பட்ட விலை - குறியீட்டின்படி விலை
= ரூ 40,00,000 - ரூ.38,12,08 = ரூ 1,97,820
எனவே முதலீட்டு ஆதாய வரி ரூபாய் 1,97,820-ல் 20 சதவிகிதம் அதாவது ரூ 39,564.

 

என்ன இப்ப புரிஞ்சுதா!

முதலீட்டு ஆதாய வரியைத் தவிர்ப்பது எப்படி?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to calculate long term capital gains with indexation?

If you buy a property and sell it after three years at a profit, you would have to pay long term capital gains tax
Story first published: Friday, September 4, 2015, 15:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X