'தமிழ்நாடு தான் பெஸ்ட்'.. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மார்தட்டும் தமிழகம்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவிலேயே தொழில்துறை வளர்ச்சியிலும், முதலீட்டைக் கவர்வதிலும் தமிழ்நாடு முன்னோடியாக இருக்கிறது.

 

இந்நிலையில் சென்னையில் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைப்பெறுவரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலீட்டாளர்களுக்கும், தொழிற்துறைக்குச் சிறந்தது என்பதை விவரிக்கும் வகையில் 10 காரணங்கள் உள்ளது.

ஜிடிபி-யில் 2வது..

ஜிடிபி-யில் 2வது..

இந்தியாவின் ஜிடிபி உயர்விற்கு முக்கியப் பங்கு வகிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது. சுமார் 8.4 சதவீத ஜிடிபியை இந்திய சந்தைக்குத் தமிழ்நாடு அளிக்கிறது. இதில் 93 சதவீதம் தொழில்துறை மற்றும் சேவைத்துறையில் இருந்து கிடைக்கிறது.

இது இந்தியாவில் புதிய தொழிற்துறைகளை அமைக்கும் ஒரு நிறுவனத்திற்கு முக்கியக் காரணியாகும்.

தொழிற்துறைகள்

தொழிற்துறைகள்

இந்தியாவில் உள்ள பல துறை சார்ந்த தொழிற்துறைகளில் தமிழ்நாடு 16 சதவீதத்தைக் கொண்டு மிகவும் லாபகரமான சூழலில் செயல்பட்டு வருகிறது. மேலும் நிறுவனங்களின் வரிவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் தமிழக அரசு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கிறது.

உற்பத்தி தளம்

உற்பத்தி தளம்

இந்தியாவில் பல லட்சம் உற்பத்தி நிறுவனங்கள் உள்ள நிலையில் தமிழ்நாடு என்னும் சிறு மாநிலம், 17% உற்பத்தி நிறுவனங்களைக் கொண்டு நாட்டின் மொத்த உற்பத்தி அளவில் 10 சதவீதத்தை அளிக்கிறது.

 துறைமுகம்
 

துறைமுகம்

இந்தியாவில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு ஏற்றப் போக்குவரத்தாகக் கப்பல் போக்குவரத்து இருக்கும்போது, தமிழ்நாடு மொத்த கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுகத்தில் 15 சதவீத பங்கீட்டை அளிக்கிறது.

உள்கட்டமைப்பு..

உள்கட்டமைப்பு..

தமிழ்நாட்டில் தொழிற்துறை பூங்கா, காம்பிளக்ஸ் என 42,000 ஏக்கர் பரப்பளவில் மாநிலத்தின் உள்கட்டமைப்பு விரிவாக்கம் அடைந்துள்ளது.

இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் முதலீட்டுச் சந்தை அளவுகள் மட்டும் 17 பில்லியன் டாலர்.

புதுப்பிக்கத்தக்க சக்தி

புதுப்பிக்கத்தக்க சக்தி

இந்தியாவிலேயே அதிகளவிலான புதுப்பிக்கத்தக்க சக்தி உருவாக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. இது வளர்ந்து வரும் தொழிற்துறை கலாசரத்திற்கு ஏற்ற ஒரு சான்று.

தமிழ்நாட்டில் வருடத்திற்கு 8,000 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

நகர்ப்புற மற்றும் சமூக உள்கட்டமைப்பு

நகர்ப்புற மற்றும் சமூக உள்கட்டமைப்பு

இந்தியாவிலேயே பல தரப்பட்ட சமுகத்தினர் ஒன்றுடன் வாழும் மாநிலத்தில் தமிழ்நாடு முதன்மையாக உள்ளது. இதில் உள்நாட்டு மக்கள் மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் உள்ள மக்களும் அடங்குவர்.

இந்நிலையில் உலகில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்கள் எனப் போர்ப்ஸ் நிறுவன பட்டியலில் சென்னை இடம்பெற்றுள்ளது.

சுகாதாரத்தின் தலைமை

சுகாதாரத்தின் தலைமை

இந்தியாவில் ஹெல்த்கேர் சேவைகளில் தமிழ்நாடு தான் நம்பர் ஒன். தமிழ்நாட்டில் 300க்கும் அதிகமான மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் உள்ளது.

சுற்றுலா

சுற்றுலா

அதிக உள்நாட்டுப் பயன்கள் வரும் மாநிலத்தில் முதல் இடம் மற்றும் அதிக வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் வந்துகுவியும் மாநிலத்தில் 2வதாகத் தமிழ்நாடு உள்ளது.

முதலீட்டாளர்கள் மற்றும் திட்டவடிவம்

முதலீட்டாளர்கள் மற்றும் திட்டவடிவம்

தமிழ்நாட்டில் தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஏதுவாகத் தமிழக அரசுத் துறை வரியான சிறப்புத் திட்டவடிவங்களை அமைத்து வருகிறது.

நிறுவனம் மற்றும் அரசு மத்தியிலான செயல்பாடுகள் அனைத்தும் 30 நாட்களுக்குள் முடிக்கச் செயல்திட்டத்தைத் தமிழக அரசு வைத்துள்ளது.

4 கட்ட வளர்ச்சி பாதை..

4 கட்ட வளர்ச்சி பாதை..

2015ஆம் நிதியாண்டு முதல் 4 கட்ட வளர்ச்சி பாதையில் தமிழ்நாடு செல்ல திட்டமிட்டுள்ளது. இதன் பிடி முதல் கட்டமாக உற்பத்தி தளங்கள் அமைத்தல், தொழில்துறை பூங்கா உருவாக்குதல்,SEZ எனப்படும் பிரத்தியேக பகுதிகளை அமைத்தல், கடைசியாக ஒருங்கிணைக்கப்பட்ட தொழிற்துறை உற்பத்தி தளங்கள் எனத் தனது பாதையை வடிவமைத்துள்ளது.

2023 இலக்கு!!

2023 இலக்கு!!

மேலும் 2023ஆம் இலக்காக ஜிடிபி பங்கீட்டை 11 சதவீதம் அளவிற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது. அதுமட்டும் அல்லாமல் சாரசரி மக்களின் முதலீட்டு அளவை 10,000 அமெரிக்க டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

10 Reasons to choose tamilnadu: Global Investors Meet

10 Reasons to choose tamilnadu: Global Investors Meet. GDP growth propelled by Industries and Services sectors – decadal CAGR of 9% and 10%, respectively. GDP driven by Industries and Services sectors – accounting for 93%.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X