‘கேடிஎம், ஹால்மார்க்’ சுத்தமான தங்கம் எது? அல்லது இவற்றில் எதுவுமே இல்லையா?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

கடைக்குச் சென்று தங்கம் வாங்கும் நம் வீட்டுப் பெண்கள் அதிக நேரம் செலவழித்து அதிகக் கேள்விகள் கேட்டுத் தங்கத்தை வாங்கிவிட்டுத் தாங்கள் தான் புத்திசாலிகள் என்று இனிமேல் பெருமைப் பட்டுக் கொள்ள வேண்டாம்.

காலம் காலமாக நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கும் நகை வியாபாரிகள்தான் நம்மை விட மிகப்பெரிய புத்திசாலிகள். இல்லையென்றால் நாம் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டிருப்போமா?

செம்பு சேர்த்தே தயாரிக்கப்பட்ட தங்கம்

தங்க நகைகள் நீண்ட நெடுங்காலமாக 6௦% தங்கம் மற்றும் 40% செம்பு சேர்த்தே தயாரிக்கப்பட்டு வந்தன. இத்தகைய நகைகள் மீண்டும் உருக்கப்படும் போது 22 காரட் நகைகள் வெறும் 2௦ காரட் ஆகிவிடும். இதனால்தான் வியாபாரிகள் புதுத் தங்கம் வாங்கும்போதும் சரி, பழைய தங்கத்தை விற்கும்போதும் நம்மிடமே செய்கூலி, சேதாரம் என நம் கணக்கிலேயே கழிப்பார்கள்.

உலோகம் எதற்காகத் தங்கத்தில் சேர்க்கப்படுகின்றது?

தங்க நகைகள் தயாரிப்பின்போது எளிதில் உடையாமல் இருக்கும் பொருட்டு ஏதாவதொரு உலோகம் சேர்த்தே உலோகக்கலப்பு செய்தே 321 டிகிரியில் உருக்கப்பட்டுத் தயாரிக்கப்படுகின்றன. அப்படிக் கலக்கப்படும் உலோகத்திற்கும் சேர்த்தே நாம் தங்கத்தின் விலை கொடுத்து வாங்குகிறோம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

நாம் ஏமாற்றப்படக் காரணம் என்ன?

தங்கத்தில் முதலீடு என்பது பாதுகாப்பானது என்ற நம் மக்களின் எண்ணமே இந்தத் தங்க வியாபாரிகளின் ஏகபோகத்திற்குக் காரணமாக ஆகி விடுகிறது. தங்கத்தின் சுத்தத்தைப் பராமரித்திடவும், அதன் மதிப்பை உயர்த்திடவும் மக்கள் கையில் அவர்களின் காசுக்கேற்ற மதிப்புடைய தங்கத்தைக் கொடுத்திட உருவானதே KDM மற்றும் HALLMARK முறைகள் என்பது நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியத் தகவல் ஆகும்.

காட்மியம் சேர்க்கப்பட்ட தங்கம்

இம்முறைகளின்படி தங்க நகைகளின் உறுதிக்காக அதனுடன் காட்மியம் என்ற உலோகம் பயன்பாட்டிற்கு வந்தது. இதன்படி தங்கமும், காட்மியமும் 92% மற்றும் 8% என்ற விகிதத்தில் கலக்கப்பட்டுப் புதிய தங்க நகைகள் உருவாக்கப்பட்டன. இதன்மூலம் மக்களின் பண மதிப்புக்கேற்ப மேலும் 32% தங்கம் சேர்த்து கிடைத்து வருகிறது. காட்மியம் பயன்படுத்துவதன் மூலம் தங்கத்தின் சுத்த தன்மையும், அதன் மதிப்பும் மேலும் கூடியது. இதுவும் 91.6% தான் தங்கம் கொண்டது.

உடல் நலத்திற்குக் கேடு

உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் கேடிஎம் தங்க நகைகள். இந்தக் கேடிஎம் நகைகளில் பயன்படுத்தப்படும் காட்மியம் பொடி நகை உருவாக்கும் தொழில் செய்யும் பொற்கொல்லர்களுக்கும், அவற்றை வாங்கி அணியும் மக்களுக்கும் பல்வேறு சரும வியாதிகள் மற்றும் ஒவ்வாமைகளை ஏற்படுத்தி வந்தது ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது.

எனவே இந்திய தர நிர்ணய கழகம் இந்தக் கேடிஎம் நகைகளை விற்பனைக்கு உகந்தவை இல்லை என்று தடை செய்து விட்டது. ஆனாலும் இந்த நகைகளின் விற்பனை தொடர்ந்து கொண்டிருப்பது வேறு விஷயம். காட்மியம் பொடிக்குப் பதிலாகத் துத்தநாகம் பொடி பயன்படுத்தும் முறை நடைமுறைக்கு வந்து தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதிலும் சில சரும அலர்ஜிகள் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுத் தற்போது அவையும் தடை செய்யப்பட்டுள்ளன.

 

ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட தங்கம்

ஹால்மார்க் முத்திரை என்பது தங்கத்தின் தரம் குறித்து இந்திய தர நிர்ணய கழகம் வழங்கும் ஒரு சான்று.

ஹால்மார்க் முத்திரையில் 5 பகுதிகள்

1. BIS குறியீடு
2. தங்கத்தின் துல்லிய மதிப்பிற்கான குறியீடு
3. தங்கத்தின் தூய்மையைக் கண்டறியும் நிறுவனத்தின் குறியீடு.
4. தங்க நகை வியாபாரியின் குறியீடு
5. ஆண்டுப் பற்றிய குறியீடு.

தங்கத்தின் தரத்தை நிர்ணயிக்கும்

இந்தக் குறியீடுகள் லேசர் தொழில்நுட்பத்தைக் கொண்டு செய்யப்படுகின்றன. சர்வதேச தர நிர்ணயம், தேசிய தர நிர்ணயம், ஆகியவற்றின் துல்லியங்களைப் பரிசோதித்துத் தங்கத்தின் தரத்தை நிர்ணயிக்கும் பணிகளை இந்திய தர நிர்ணய கழகம் செய்கிறது. நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள உலோகங்களின் தூய்மை கண்டறியும் நிறுவனங்களின் துணைகொண்டு செய்யப்படுகிறது. ஹால்மார்க் தங்கம் என்றாலும் அதன் தூய்மை 23 காரட், 22 காரட், 21 காரட் மற்றும் 18 காரட் என்ற அளவீடுகளிலேயே இருக்கும். தங்கத்தின் தூய்மை என்பது அந்த நகையில் தங்கத்தின் அளவு விழுக்காடு என்பதையே குறிக்கும்.

கேடிஎம் - ஹால்மார்க் வித்தியாசம் என்ன?

கேடிஎம் நகைக்கும் ஹால்மார்க் நகைக்கும் உள்ள வித்தியாசம் அதில் உள்ள உலோக கலப்பு மற்றும் தூய்மை சம்பந்தப்பட்டதேயாகும்.

எனவே இன்றைய நிலையில் தங்கம் வாங்குவது என்றால் இந்திய தர நிர்ணய கழகத்தால் சான்றளிக்கப்பட்ட ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட தங்க நகைகளையே வாங்க வேண்டும். அதுதான் இன்றைய புத்திசாலித்தனம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

What Is The Difference Between Hallmarked And KDM Gold?

What Is The Difference Between Hallmarked And KDM Gold?
Please Wait while comments are loading...
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns