வரலாற்று உச்சத்தினை தொட போகும் தங்கம் விலை.. அட்சய திருதியை நாளில் வாங்க இது தான் சிறந்த ஆப்சன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வரும் இந்தியாவில் இரண்டாவது ஆண்டாக அட்சய திருதியை, களையிழந்து காணப்படுகிறது. அதுவும் அட்சய திருதியை அன்று நகைக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இது நகை ஆர்வலர்களிடையே பெரும் ஏமாற்றத்தினை கொடுத்துள்ளது எனலாம்.

எனினும் கொரோனாவினை கட்டுப்படுத்தும் விதமாக கடைபிடிக்கப்படும் இந்த லாக்டவுனில், மக்கள் வீட்டில் இருப்பது தான் நமக்கும், நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்ல விஷயம்.

அப்படி எனில் நான் தங்கம் இன்று வாங்கவே முடியாதா? என்றால் நிச்சயம் முடியும். இதற்காக நீங்கள் கடைக்கு சென்று செய்கூலி சேதாரம் கொடுத்து வாங்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் தங்கத்தினை வாங்கலாமே. இது உங்களுக்கு பிசிகல் தங்கத்துடன் ஒப்பிடும்போது, விலையும் சற்று குறைவு, பாதுகாப்பானதும் கூட.

விலை அதிகரிக்கும்

விலை அதிகரிக்கும்

தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்று கூறி வரும் நிபுணர்கள், இது நடப்பு ஆண்டில் வரலாற்று உச்சத்தினை தொடலாம் என்று கூறுகின்றனர். இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொட்ட உச்சத்தினை உடைத்துக் காட்டலாம் என்றும் கூறுகின்றனர். ஆக அதற்கு அட்சய திருதியை நாளில் முதலீடு செய்வது என்பது உகந்த நாளாகவும் இருக்கும்.

சிறந்த ஹெட்ஜிங்

சிறந்த ஹெட்ஜிங்

அமெரிக்காவின் வேலை குறித்தான குறியீடு சாதகமாக வந்த நிலையில், அமெரிக்காவின் ஊக்கத்தொகைகள், அதுவும் வட்டி குறைவாக உள்ள இந்த நேரத்தில் பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஏனெனில் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் தங்கமாக இருப்பதால் விலை கூடலாம்.

தேவையும் கூடலாம்

தேவையும் கூடலாம்

இன்று அட்சய திருதியை நாள் என்பதால், பிசிகல் தங்கத்தினை வாங்க முடியாததால் முதலீட்டாளார்கள் டிஜிட்டல் தங்கத்தில் வாங்க முற்படலாம். இது முதலீட்டு தேவையை ஊக்குவிக்கும். இது தங்க முதலீட்டினை ஊக்குவிக்கலாம். இதுவும் இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் தங்கம் விலை அதிகரிக்க சாதகமாக அமையலாம்.

ஆதரவாக வரி குறைப்பு

ஆதரவாக வரி குறைப்பு

அதோடு தங்க ஆர்வலர்களை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக, கடந்த பட்ஜெட் அறிக்கையில் தங்கத்திற்காக இறக்குமதி வரியும் குறைக்கப்பட்டது. இதற்கிடையில் தான் கடந்த மார்ச் மாத மாதத்தில் தங்கம் இறக்குமதியானது 471% அதிகரித்தது. இதுவும் புல்லியன் சந்தைக்கு சாதகமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் பாசிட்டிவ் டிரெண்ட்

தங்கத்தின் பாசிட்டிவ் டிரெண்ட்

தங்கத்தின் விலையானது டெக்னிக்கலாக பார்க்கும்போதும் பாசிட்டிவ் டிரெண்டிலேயே உள்ளது. அதோடு ஃபண்டமெண்டல்களும் தங்கத்திற்கு சாதகமாக உள்ள நிலையில், தங்கம் விலையானது நிச்சயம் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. ஆக தங்கம் மற்றும் வெள்ளியினை உங்களது போர்ட்போலியோவில் 20 - 30% வரை சேர்க்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

தங்கம் விலை உச்சத்தினை உடைக்கலாம்

தங்கம் விலை உச்சத்தினை உடைக்கலாம்

நடப்பு ஆண்டில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு அதன் வரலாற்று உச்சமானம் 56,191 ரூபாயினை உடைக்கலாம். இதே போல டாலரில் 2200 டாலர்களை டாலர்களை தொடலாம். இதே இந்திய சந்தையில் 58,000 - 60,000 ரூபாய் இந்திய சந்தையில் தொடலாம் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இன்று இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு சற்று குறைந்து 47,410 ரூபாயாக காணப்படுகிறது. இதே டாலரில் அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து அவுன்ஸூக்கு 1826.05 டாலர்களாகவும் காணப்படுகிறது.

லாக்டவுனால் வாங்க முடியாது

லாக்டவுனால் வாங்க முடியாது

இந்த ஆண்டும் இரண்டாவது ஆண்டாக லாக்டவுன் அட்சய திருதியைக்கு பிசிகல் தங்கத்தினை வாங்க, ஆர்வலர்களுக்கு வாய்ப்பு அமையவில்லை. ஆனாலும் எம்சிஎக்ஸ் தங்கத்தினை ஆன்லைனில் வாங்கலாம். அப்படி இல்லை எனினும் கோல்டு இடிஎஃப் ஆகவும் வாங்கலாம். இது பற்றி ஏற்கனவே https://tamil.goodreturns.in/personal-finance/you-can-invest-sgbs-digital-gold-or-etfs-this-akshaya-tritiya-023567.html என்ற கட்டுரையில் விரிவாக பார்த்தோம். ஆக மொத்தத்தில் அட்சய திருதியை நாளில் குறைந்த விலையில் தங்கம் வாங்க இது சூப்பர் சான்ஸ் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Akshaya tritiya 2021: Buy digital gold that may hit fresh record high this year

Gold updates.. Akshaya tritiya 2021: Buy digital gold that may hit fresh record high this year
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X