சத்தியமா நாங்க யாரையும் இந்தியால பணி நீக்கம் செய்யல.. அமேசான் கொடுத்த பலே விளக்கம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இ-காமர்ஸ் ஜாம்பவான் ஆன அமேசான் நிறுவனம் சர்வதேச அளவில் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. இதன் காரணமாக ஊழியர்கள் அமைப்பானது தொழிலாளர் நல அமைச்சகத்தினை அணுகியது.

உலகளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் அமேசான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் கடுமையான பணி நீக்க நடவடிக்கையினை எடுத்து வருகின்றன.

அந்த வகையில் அமேசான் இந்தியாவும் பணி நீக்க நடவடிக்கையினை எடுத்துள்ளதாக, அதற்கு எதிராக தொழிலாளர் நல அமைச்சகம் சம்மன் அனுப்பியது.

350 ஊழியர்களை வேலைநீக்கம் செய்யும் இ-காமர்ஸ் நிறுவனம்.. என்ன காரணம்?350 ஊழியர்களை வேலைநீக்கம் செய்யும் இ-காமர்ஸ் நிறுவனம்.. என்ன காரணம்?

வி ஆர் எஸ் வாங்க அழுத்தம்

வி ஆர் எஸ் வாங்க அழுத்தம்

இது குறித்து அமேசான் நிறுவனம் சரியான விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அமேசான் நிறுவனம் இந்தியாவில் அதன் ஊழியர்களை வி ஆர் எஸ் (VRS) வாங்கிக் கொள்ள கூறியதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. மொத்தத்தில் நிறுவனம் ஆட்குறைப்பு நட்வடிக்கை விதிகளை பின்பற்றவில்லை. இது குறித்து நிறுவனம் அனுப்பிய மெயில் சில குறிப்பிட்ட பதவிகளுக்கு ஆட்கள் இனி தேவையில்லை என்றும், அதனால் சில வேலைகளை ரத்து செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

கால அவகாசம்

கால அவகாசம்

இதற்காக அவர்களில் பலருக்கும் ஜனவரி 17, 2023 வரையில் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தொழிலாளர் விவகார சட்டப்படி ஒரு உழியரை முன் அனுமதியின்றி யாரும பணி நீக்கம் செய்ய முடியாது. ஊழியர்கள் ஒரு வருட காலம் நிறைவு செய்திருந்தார், முன் மாதங்களுக்கு முன்பே நோட்டீஸ் கொடுக்காமல் அவரை பணி நீக்கம் செய்ய முடியாது. ஆக அமேசானின் இந்த நடவடிக்கையினை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அமேசானின் பதில் என்ன?

அமேசானின் பதில் என்ன?

அமேசான் நிறுவனமோ நாங்கள் எந்த ஊழியரையும் இந்தியாவில் பணி நீக்கம் செய்யவில்லை. ஊழியர்களாக விருப்பப்பட்டு தான் செல்கிறார்கள். அதற்காக ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளையும் அறிவித்துள்ளோம் என விளக்கம் கொடுத்துள்ளது.

அகாடமி மூடலா?

அகாடமி மூடலா?

அமேசானின் இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் , இந்தியாவில் பல்வேறு வகையான சேவைகளையும் வழங்கி வருகின்றது. அதில் ஒன்று தான் அமேசான் அகாடமி. இதே சேவை கடந்த ஆண்டு தொடக்கத்தில் தான் தொடங்கியது. ஆனால் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கூட முடிவடையாத நிலையில், அதனை மூடுவதற்கு முடிவு செய்துள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

எப்போது மூடல்?

எப்போது மூடல்?

இது நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் ஆட்குறைப்பு நடவடிக்கை மட்டும் அல்ல, லாபம் அல்லாத வணிகத்தினை எடுப்பது தெளிவாக தெரிகிறது. எனினும் அமேசான் அகாடமியை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தான் மூட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் இணைந்த மாணவர்களுக்கு முழு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

எட்டெக் நிறுனங்களின் முடிவு

எட்டெக் நிறுனங்களின் முடிவு

பைஜூஸ், அன்அகாடமி, வேதாந்து உள்ளிட்ட எட் டெக் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையினை எடுத்து வருகின்றன. இத்தகைய சூழலில் அமேசான் அதன் அகாடமியை நிரந்தரமாக மூடவே திட்டமிட்டுள்ளது.

பொழுது போக்கு துறையில் முதலீடு

பொழுது போக்கு துறையில் முதலீடு

அமேசான் நிறுவனம் ஒரு புறம் இதுபோன்ற நடவடிக்கையினை எடுத்து வந்தாலும், மறுபுறம் பொழுதுபோக்கு துறையில் முதலீட்டினை செய்ய திட்டமிட்டு வருகின்றது. வருடத்திற்கு 12 - 15 படங்களை தியேட்டர்களில் வெளியிட இலக்கு வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதற்காக 1 பில்லியன் டாலர்களை படங்களை தயாரிக்க முதலீடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon mass layoffs: no one was fired, resignations were voluntary

Amazon not laid off any employees in India. It has been explained that they are going as employees
Story first published: Friday, November 25, 2022, 12:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X