வீடு வாங்கும் திட்டம் இருக்கா.. சீக்கிரமா வாங்கி போடுங்க.. 58% பில்டர்களோட அதிரடி முடிவு தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சுமார் 58% பில்டர்கள் 2023ல் வீடுகளின் விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ஆய்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

இது தொடர்ந்து மூலதன செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில், பொருளாதார காரணிகள் பலவும் மந்த நிலையில் உள்ளது. பணவீக்கமும் மந்த நிலையில் இருந்து வருகின்றது.'

Budget 2023: ரியல் எஸ்டேட் துறையினரின் முக்கிய எதிர்பார்ப்புகள்.. ஜாக்பாட் கிடைக்குமா? Budget 2023: ரியல் எஸ்டேட் துறையினரின் முக்கிய எதிர்பார்ப்புகள்.. ஜாக்பாட் கிடைக்குமா?

செலவு அதிகரிப்பு

செலவு அதிகரிப்பு

தொடர்ந்து மூலதன செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில், கடந்த இரு ஆண்டுகளாகவே குளோபல் சப்ளை சங்கிலி தாக்கத்தின் மத்தியில், பணவீக்கத்தின் அழுத்தத்தினை எதிர்கொண்டுள்ளது.

இதற்கிடையில் ரியல் எஸ்டேட் டெவலப்பர்களின் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வு (Colliers-CREDAI-Liases Foras) 2023ல், 43% டெவலப்பர்கள் மூலதன செலவு அதிகரிப்பால் 10 - 20% செலவுகள் தங்களது திட்டங்களின் செலவும் அதிகரித்துள்ளது.

 

வீடு தேவை

வீடு தேவை

இந்த ஆய்வில் 341 ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொண்டனர். இந்த ஆய்வானது கடந்த இரண்டு மாதங்களாக நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் மற்றொரு சுவாரஸ்யமான விஷயமும் வெளியாகியுள்ளது. நடப்பு ஆண்டில் 43% டெவலப்பர்கள் வீடுகளின் தேவையானது நிலையானதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றனர். அதே நேரத்தில் 31% பேர் தேவை 25% வரையில் அதிகரிக்கலாம் என நம்புகின்றனர்.

 

வீடுகளின் தேவை

வீடுகளின் தேவை

முந்தைய ஆண்டில் தேவையானது பெரும் அளவில் இருந்த நிலையில், விற்பனையானது வரலாறு காணாத அளவில் இருந்தது. இது கடந்த தசாப்தத்தில் மிக அதிகம் எனலாம். இதற்கிடையில் நடப்பு ஆண்டிலும் 70% அதிகமான டெவலப்பர்கள், வீட்டின் தேவையானது 25% அதிகரிக்கலாம் என நம்புகின்றனர்.

 அதிகரிக்கும் போட்டி

அதிகரிக்கும் போட்டி

இத்தகைய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தொடர்ந்து புதிய புதிய திட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், போட்டியினை எதிர்கொள்ள ஆஃபர்களை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் 87% டெவலப்பர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு மத்தியில் சொத்து மதிப்பும் அதிகரித்து வருகின்றது. மேலும் நகரமயமாக்கலும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது தொடர்ந்து ரியல் எஸ்டேட் துறையினை ஊக்குவித்து வருகின்றது. இனியும் ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊக்குவிப்பு சலுகைகள்

ஊக்குவிப்பு சலுகைகள்

இதற்கிடையில் தங்கள் வணிகத்தினை மேலும் எளிதாக்க வரவிருக்கும் பட்ஜெட்டில் 40% டெவலப்பர்கள் அரசிடம் இருந்து ஊக்குவிப்பு சலுகைகளை எதிர்பார்க்கின்றனர். 31% பேர் வரி விலக்கு மற்றும் ஜிஎஸ்டி-யில் சலுகை களை எதிர்பார்க்கின்றனர். தொடர்ந்து கொரோனாவின் வருகைக்கு பிறகு கடந்த ஆண்டு தான் ரியல் எஸ்டேட் வணிகமானது மீண்டு வந்தது. எனினும் தற்போது நிலவி வரும் சர்வதேச மந்தநிலை காரணமாக அது இந்தியாவிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இது மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

கூடாக இந்தியாவில் மேற்கொண்டு ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தும் விதமாக, வங்கிகளில் கடன்களுக்கான வட்டி விகிதமும் உச்சத்தில் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆக இப்படி ஒரு சவாலான காலகட்டத்தில் டெவலர்ப்பர்கள் வீடுகளின் விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர். இது மேற்கொண்டு விற்பனையை குறைக்க வழிவகுக்கலாம்.

எது எப்படியோ வீடு அல்லது சொத்து வாங்க திட்டமிட்டவர்களுக்கு இது ஒரு கடினமான ஆண்டாகவே இருக்கலாம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Around 58% builders may hike home prices in 2023

Around 58% of builders plans to increase house prices in 2023 amid rising input cost
Story first published: Tuesday, January 17, 2023, 18:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X