பிட்காயின் $1,00,000 தொடலாம்.. நிபுணர்கள் சூப்பர் கணிப்பு.. மற்ற கிரிப்டோகளின் நிலவரம் என்ன.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீபத்திய சரிவுக்கு பிறகு கிரிப்டோகரன்சிகளின் விலை மதிப்பானது, தற்போது மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக பிட்காயின் மதிப்பானது மீண்டும் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது.

 

ஒரு சாரர் கிரிப்டோகரன்சிகளில் அச்சம் கொண்டிருந்தாலும், மறுபுறம் கிரிப்டோக்கள் மீது ஆர்வமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது என்பது மறுக்க முடியா விஷயமே.

ஏனெனில் கடந்த ஜூலை மாதத்தில் மிக மோசமான சரிவினைக் கண்ட நிலையில் தற்போது மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது.

மீண்டும் வேகமெடுக்கும் பிட்காயின்.. மற்ற கிரிப்டோக்களின் நிலவரம் என்ன.. லாபமா..!

நிபுணர்களின் கணிப்பு

நிபுணர்களின் கணிப்பு

சமீபத்திய குறைந்தபட்ச விலையில் இருந்து கிரிப்டோகளின் மதிப்பாந்து 50% அதிகரித்துள்ளது. இது இன்னும் அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர். இது 1,00,000 டாலர்களை தொடலாம் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர். தற்போது மக்களிடையே அதிகம் பிரபலமாகி வரும் முதலீடுகளில் ஒன்றாகி வருகின்றது.

டிஜிட்டல் கரன்சியின் மீதான ஆர்வம்

டிஜிட்டல் கரன்சியின் மீதான ஆர்வம்

ரிசர்வ் வங்கி ஒரு புறம் பிரத்யேக டிஜிட்டல் கரன்சி பற்றிய அறிவிப்பினை சமீபத்தில் கொடுத்தது. எனினும் இன்றளவிலும் இந்திய முதலீட்டாளர்கள் மத்தியில் கிரிப்டோ பற்றிய ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதில் ஏற்ற இறக்கம் அதிகம் என்றாலும் நல்ல லாபம் கொடுக்கும் ஒரு முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.

பிட்காயின் நிலவரம்
 

பிட்காயின் நிலவரம்

தற்போது பிட்காயின் மதிப்பானது 0.39% அதிகரித்து, 46,117.63 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 46,583.38 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 44,670.53 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 58.43% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

எத்திரியம் மதிப்பு

எத்திரியம் மதிப்பு

இதே போன்று எத்திரியத்தின் மதிப்பானது 2.06% அதிகரித்து, 3,216.05 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 3,248.32 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 3,053 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 334.70% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

கார்டானோ நிலவரம்

கார்டானோ நிலவரம்

கார்டானோ மதிப்பானது 19.20% அதிகரித்து, 1.76 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 1.80 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 1.48 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 872.01% ஏற்றம் கண்டுள்ளது. இதன் வரலாற்று உச்சம் 2.47 டாலர்களாகும்.

எக்ஸ்ஆர்பி நிலவரம்

எக்ஸ்ஆர்பி நிலவரம்

எக்ஸ்ஆர்பி-யின் மதிப்பானது 9.68% அதிகரித்து, 0.894901 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.902378 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.806074 டாலராகும். இதன் வரலாற்று உச்ச விலை 3.40 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 298.67% ஏற்றம் கண்டுள்ளது.

டோஜ்காயின் தற்போதைய நிலவரம்

டோஜ்காயின் தற்போதைய நிலவரம்

டோஜ்காயின் மதிப்பானது 4.02% அதிகரித்து, 0.267448 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.273810 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.245310 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 5,480.30% ஏற்றம் கண்டுள்ளது.

யுனிஸ்வாப் மதிப்பு

யுனிஸ்வாப் மதிப்பு

யுனிஸ்வாப் மதிப்பானது 0.44% அதிகரித்து, 29.81 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 30.42 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 28.19 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 617.96% லாபத்தில் தான் உள்ளது. இதன் வரலாற்று உச்சம் 45.01 டாலர்களாகும்.

போல்கடோட் நிலவரம் என்ன?

போல்கடோட் நிலவரம் என்ன?

போல்கடோட் மதிப்பானது தற்போது 4.09% அதிகரித்து, 21.51 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 21.27 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 20.10 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 192.09% லாபத்தில் தான் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cryptocurrency prices on august 11th, 2021: analysts expect $1,00,000 in bitcoin; check details

Bitcoin, Ethereum and dogecoin gain up to 5%, other cryptocurrency prices on today
Story first published: Wednesday, August 11, 2021, 16:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X