உச்சத்தில் இருந்து ₹8,080 சரிவில் தங்கம் விலை! இப்போது தங்கத்தை வாங்க சொல்லும் ஜிம்மி படேல்! ஏன்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியர்களுக்கு தங்கம் மீதான காதலை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு இணக்கான பாசம் தங்கத்தின் மீது இருக்கின்ற போதும், தற்போது தங்க வியாபாரம், டல்லாகத் தான் இருக்கிறது.

கடந்த செப்டம்பர் 2019 உடன் ஒப்பிடும் போது, செப்டம்பர் 2020 மாதத்தில், இந்தியாவின் தங்க இறக்குமதி 59 சதவிகிதம் சரிந்து இருக்கிறது என எகனாமிக் டைம்ஸ் வலைதளம் சொல்கிறது.

தங்க நகைகளுக்கான டிமாண்டும் கணிசமாக குறைந்து இருப்பதாகச் சொல்கிறது மணி கண்ட்ரோல் வலைதளச் செய்திகள்.

இரண்டாம் அரையாண்டிலும் அடி

இரண்டாம் அரையாண்டிலும் அடி

பொதுவாக இந்தியாவில், ஒரு காலண்டர் ஆண்டின், இரண்டாவது அரையாண்டில் (ஜூலை - டிசம்பர்) தான், பண்டிகை காலங்களை முன்னிட்டு, தங்கத்துக்கான டிமாண்ட் அதிகரிக்கும். ஆனால் உலக தங்க கவுன்சிலின் தரவுகள் படி, இந்தியாவில் தங்க டிமாண்ட் அதிகரித்ததாகத் தெரியவில்லை என்கிறது மணி கண்ட்ரோல் வலைதளச் செய்திகள். இந்த டிசம்பர் காலாண்டிலாவது தங்க வியாபாரம் கலைகட்டுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

கிராம வாசிகள் தான் அதிகம்

கிராம வாசிகள் தான் அதிகம்

இந்தியாவின் ஒட்டு மொத்த தங்க டிமாண்டில், சுமாராக 66 சதவிகித டிமாண்ட் கிராம புறங்களில் இருந்து வருவதாக தன் கட்டுரையில் சொல்கிறார் க்வாண்ட் மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனியின் முதன்மைச் செயல் அதிகாரி ஜிம்மி படேல். இந்த ஆண்டு மழை பொழிவு வழக்கம் போல அல்லது வழக்கத்தை விட அதிகமாகவே பதிவாகி இருக்கிறது.

தங்க வியாபாரத்தை பாதிக்கும்

தங்க வியாபாரத்தை பாதிக்கும்

கூடுதல் மழை பொழிவால், மகாராஷ்டிரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்கள் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த கூடுதல் மழைப் பொழிவால், பல பகுதிகளில் விவசாயப் பயிர்கள் கடுமையாக சேதமாகி இருக்கின்றன. பயிர்ச் சேதம், கிராம புறங்களின் வருமானத்தை நேரடியாக பாதிக்கும். வருமானக் குறைவு, தங்கத்தின் டிமாண்டை நேரடியாக பாதிக்கப்படலாம். தங்கத்துக்கான டிமாண்ட் பாதிக்கப்படும் நேரத்தில் தங்கத்தை வாங்கலாமா? ஏன் வாங்க வேண்டும் என்பதைத் தான் விரிவாகப் பார்க்கப் போகிறோம். அதற்கு முன் தங்கம் விலை விவரங்களைப் பார்த்துவிடுவோம்.

இன்றைய தங்கம் விலை (சென்னை 24 & 22 கே 10 கி)

இன்றைய தங்கம் விலை (சென்னை 24 & 22 கே 10 கி)

பெரிய மசூதி இருக்கும் திருவல்லிக்கேணியைத் தனக்குள் கொண்டிருக்கும் சென்னையில், இன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 51,050 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. கிராமுக்கு 5,105 ரூபாய். அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 46,800 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. கிராமுக்கு 4,680 ரூபாய்.

8000 ரூபாய் சரிவு

8000 ரூபாய் சரிவு

சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த ஆகஸ்ட் 2020-ல் 59,130 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆனால் டின்று 51,050 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
ஆக இந்த சில வாரங்களில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 8,000 ரூபாய் விலை சரிந்து இருக்கிறது.

₹50,552-ல் MCX தங்கம் விலை

₹50,552-ல் MCX தங்கம் விலை

இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சான எம் சி எக்ஸ் சந்தையில், டிசம்பர் மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, தன் முந்தைய நாள் குளோசிங் விலையான 50,712 ரூபாயில் இருந்து 160 ரூபாய் (0.32 %) விலை குறைந்து 50,552 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

$1,899-ல் திணறும் சர்வதேச தங்கம் விலை

$1,899-ல் திணறும் சர்வதேச தங்கம் விலை

XAU USD தங்கம் விலை, கடந்த 9 அக் 2020 அன்று 1,930 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இறக்கம் கண்டு வருகிறது. கடந்த 15 அக் 2020 அன்று 1,908 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருந்தது. நேற்று (16 அக் 2020) சர்வதேச தங்கம் விலை, முந்தைய நாளின் குளோசிங் விலையை விட 9.4 டாலர் (0.49 %) விலை குறைந்து வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இப்படி எந்த பக்கம் பார்த்தாலும் தங்கம் விலை தடுமாறுவதை பார்க்க முடிகிறது. இந்த நேரத்தில் ஏன் தங்கத்தை வாங்க வேண்டும்? வாருங்கள் பார்ப்போம்.

ஏன் இப்போது தங்கத்தை வாங்கலாம்?

ஏன் இப்போது தங்கத்தை வாங்கலாம்?

ஆபரணத் தங்கம் விலை, எம் சி எக்ஸ் தங்கம் விலை, சர்வதேச தங்கம் விலை என எல்லாமே, தங்களின் உச்ச விலையில் இருந்து, சுமாராக 7.9 -13.6 சதவிகிதம் வரை விலை வீழ்ச்சி கண்டு இருக்கிறது. எனவே தங்கத்தை வாங்க இது சரியான நேரம் எனலாம். அதோடு, இப்போது தங்கத்தில் ஒரு கணிசமான அளவு முதலீடு செய்ய பல காரணங்களைப் பட்டியல் போடுகிறார் க்வாண்ட் ஏ எம் சி கம்பெனியின் சி இ ஓ ஜிம்மி படேல்.

ஜிம்மி படேல் சொல்லும் காரணங்கள்

ஜிம்மி படேல் சொல்லும் காரணங்கள்

1. கட்டுக்கடங்காத கொரோனா வைரஸ்.
2. சரிவில் உலக ஜிடிபி, தடுமாறும் உலக பொருளாதாரங்கள்.
3. பன்னாட்டு நிதியம் சொன்னது போல 2008-ம் ஆண்டு வந்ததை விட மோசமான குளோபல் ரெசசன்.
4. உலக அளவில் நுகர்வு சரிந்து இருப்பது.
5. உலக அளவில் மத்திய வங்கிகள் தொடர்ந்து வட்டி விகிதங்களைக் குறைத்து வருவது
6. உலக அளவில் debt-to-GDP விகிதம் 331 சதவிகிதமாக, இதுவரை காணாத அளவுக்கு $258 ட்ரில்லியன் அதிகரித்து இருப்பது... என பல காரணங்களைப் பட்டியல் போடுகிறார் ஜிம்மி படேல். நம் போர்ட்ஃபோலியோவில் ஒரு கணிசமான அளவுக்கு தங்கத்தை வாங்கச் சொல்கிறார்.

போர்ட்ஃபோலியோவில் தங்கம் இருப்பதில் என்ன பயன்?

போர்ட்ஃபோலியோவில் தங்கம் இருப்பதில் என்ன பயன்?

1. ஒட்டு மொத்த போர்ட்ஃபோலியோவை சிறப்பாக டைவர்சிஃபை செய்ய முடியும்.
2. பங்குச் சந்தை மற்றும் கடன் பத்திரங்கள் இறங்கினால் தங்கம் விலை ஏற்றம் காணும் .எனவே நஷ்டத்தைத் தவிர்க்கலாம்.
3. தங்கத்தை நிதி சார்ந்த முதலீடுகள் போல எப்போது வேண்டுமானாலும் விற்று பணமாக்கிக் கொள்ளலாம்.

தங்கம் விலை எகிறும்

தங்கம் விலை எகிறும்

ஜிம் ராஜர்ஸ் (Jim Rogers), தாமஸ் கப்லன் (Thomas Kaplan), பேங்க் ஆஃப் அமெரிக்கா (Bank of America), க்ரெடிட் சூசி (Credit Suisse), கோல்ட் மேன் சாக்ஸ் (Goldman Sachs) என பலரும், எதிர்காலத்தில் தங்கம் விலை சூப்பராக அதிகரிக்கும் எனச் சொல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் கணிப்புப் படி குறைந்த பட்சமாக தங்கம் விலை $2,300 முதல் அதிகபட்சமாக $5,000 வரை தங்கம் விலை ஏற்றம் காணலாம். எனவே எதிர்காலத்தில் நல்ல லாபம் பார்க்க இப்போது தங்கத்தில் முதலீடு செய்யுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price fall ₹8080 from its august high Is it good time to buy gold

Gold price fall ₹8,080 from its august high, Is it good time to buy gold, Chennai gold rate, Gold price, International gold rate, MCX Gold rate, தங்கம் விலை, தங்க நகை
Story first published: Saturday, October 17, 2020, 14:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X