தங்கம் விலை வீழ்ச்சி..! 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு விலை சரிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் இல்லாமல் இந்திய குடும்பங்களின் நல்ல காரியங்கள் நடப்பதில்லை. இந்தியா என்கிற மிகப் பெரிய நாட்டில், கடவுள் தொடங்கி, மனிதர்கள் வரை அனைவருக்கும் தங்கம் ஒரு அத்தியாவசியம்.

சுமார் 130 கோடி பேர் வாழும் இந்த நாட்டில் ஆளுக்கு ஒரு பவுன் நகை என்றால் கூட ஒட்டு மொத்த இந்தியாவில் எவ்வளவு டன் தங்கம் இருக்கும் என கணக்கு போட்டுப் பாருங்கள்.

இது போக ஆண்டுக்கு சுமாராக 800 - 100 டன் தங்கத்தை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம். சரி 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை குறைந்திருக்கும் விஷயத்துக்கு வருவோம்..!

அதிர்ச்சியில் ரஜனி காந்த் குஷ்வா..! ios-ல் இயங்காத ஐஃபோன் 11 ப்ரோ, ட்ரிபில் கேமரா கூட இல்லையாம்..!அதிர்ச்சியில் ரஜனி காந்த் குஷ்வா..! ios-ல் இயங்காத ஐஃபோன் 11 ப்ரோ, ட்ரிபில் கேமரா கூட இல்லையாம்..!

3 மாதத்தில் உச்சம்

3 மாதத்தில் உச்சம்

சென்னையில், கடந்த நவம்பர் 02, 2019 அன்று 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை சுமாராக 3,705 ரூபாய்க்கு விற்றது. ஆக ஒரு பவுன் 29,640-க்கு விற்கப்பட்டது. 24 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 4,041 ரூபாய்க்கு விற்றார்கள். ஆக ஒரு பவுன் விலை 32,328-க்கு விற்பனை ஆனது. இது தான் கடந்த 3 மாதத்தில் தங்கம் தொட்ட உச்ச விலை.

உச்ச நிலை நிலவரம்

உச்ச நிலை நிலவரம்

நவம்பர் 02, 2019 உச்ச விலைக்குப் பின், கடந்த டிசம்பர் 04, 2019 அன்று மீண்டும் ஒரு சிறிய விலை ஏற்றம் கண்டது. சென்னையில், 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை சுமாராக 3,665 ரூபாய்க்கு விற்றது. ஆக ஒரு பவுன் 29,320-க்கு விற்கப்பட்டது. 24 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 3,994 ரூபாய்க்கு விற்றார்கள். ஆக ஒரு பவுன் விலை 31,952-க்கு விற்பனை ஆனது.

விலை குறைவு

விலை குறைவு

ஆக, நவம்பர் 02, 2019 உச்ச விலையில் இருந்து நல்ல இறக்கம் கண்டு, தங்கத்தை வாங்க இருப்பவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது என்றால் அது டிசம்பர் 11, 2019 தான். கடந்த அக்டோபர் 01, 2019-க்குப் பிறகு ஒரு நல்ல விலை இறக்கம் என்றாலும் அது டிசம்பர் 11, 2019 தான் என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 11, 2019 விலை நிலவரம்

டிசம்பர் 11, 2019 விலை நிலவரம்

டிசம்பர் 11, 2019 அன்று 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை சுமாராக 3,591 ரூபாய்க்கு விற்றது. ஆக ஒரு பவுன் 28,728-க்கு விற்கப்பட்டது. 24 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 3,917 ரூபாய்க்கு விற்றார்கள். ஆக ஒரு பவுன் விலை 31,336-க்கு விற்பனை ஆனது.

விலை குறைவு

விலை குறைவு

ஆக கடந்த நவம்பர் 02, 2019-ல் விற்பனை ஆன தங்கத்தின் விலைக்கும், டிசம்பர் 11, 2019-ல் விற்பனை ஆன தங்கம் விலைக்கும் ஒரு கணிசமான விலை வித்தியாசம் இருக்கிறது. 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் 912 ரூபாய் குறைந்து இருக்கிறது. 24 கேரட் ஒரு பவுன் விலை 992 ரூபாய் விலை குறைந்து இருக்கிறது.

இன்று

இன்று

டிசம்பர் 14, 2019 சனிக்கிழமை, இன்றும் தங்கம் கிட்டத்தட்ட அதே விலையில் தான் விற்கப்பட்டு வருகிறது. 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 3,592 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்கள். ஆக ஒரு பவுன் 28,736-க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 3,920 ரூபாய்க்கு விற்கிறார்கள். ஆக ஒரு பவுன் விலை 31,360-க்கு விற்பனை ஆகிறது.

நல்ல வாய்ப்பு

நல்ல வாய்ப்பு

ஆக கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு (சரியாக சொல்ல வேண்டும் என்றால் அக்டோபர் 01, 2019-க்குப் பிறகு) தற்போது தங்கத்தின் விலை நல்ல இறக்கம் கண்டு இருக்கிறது. தங்கச்சி கல்யாணம், தம்பி கல்யாணம், அம்மாவுக்கு செண்டிமெண்டாக நகை வாங்கிக் கொடுக்க இருப்பவர்கள் எல்லாம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price in its lowest in the last 3 months approx

The indian sentimental precious metal Gold price is in its lowest in the last 3 months approx. Use the opportunity to buy the gold if you want.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X