தங்கம் விலை ரூ.3600-க்கு மேல் வீழ்ச்சி.. வாங்க சரியான இடமா..ஆபரண தங்கம் நிலவரம் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம்(gold) விலையானது இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் சற்று சரிவில் காணப்படுகின்றது. இது முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியினை கொடுத்துள்ளது எனலாம்.

அதேசமயம் ஆபரணத் தங்கத்தின் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தங்க ஆர்வலர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தினையே கொடுத்துள்ளது.

இது சமீபத்திய உச்சமான 55,558 ரூபாயில் இருந்து பார்க்கும்போது 10 கிராமுக்கு 3,600 ரூபாய்க்கு மேலாக சரிவில் காணப்படுகின்றது.

ரூ.4800 கோடி யார் கொடுப்பா, அதனால்தான் கடையைத் தூக்கிட்டோம்.. ரிலையன்ஸ் பலே விளக்கம்.! ரூ.4800 கோடி யார் கொடுப்பா, அதனால்தான் கடையைத் தூக்கிட்டோம்.. ரிலையன்ஸ் பலே விளக்கம்.!

கடைசி காலாண்டில் எவ்வளவு ஏற்றம்?

கடைசி காலாண்டில் எவ்வளவு ஏற்றம்?

கடந்த காலாண்டில் மட்டும் தங்கம் விலையானது 5% மேலாக அதிகரித்துள்ள நிலையில், இது கடந்த செப்டம்பர் 2020க்கு பிறகு மிகப்பெரிய ஏற்றமாக பார்க்கப்படுகின்றது. எனினும் ரஷ்யா - உக்ரைன் இடையேயான பேச்சு வார்த்தையில் சில உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது விரைவில் சுமூக நிலை எட்டப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பொருளாதாரம் விரைவில் வளர்ச்சி பாதைக்கு திரும்பலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபெடரல் ரிசர்வ் வங்கி என்ன செய்யபோகிறது?

ஃபெடரல் ரிசர்வ் வங்கி என்ன செய்யபோகிறது?

அமெரிக்கா பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர, அமெரிக்காவின் மத்திய வங்கியானது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சில தினங்களாக பத்திர சந்தையானது சரிவில் காணப்படுகின்றது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதாரவாக அமையலாம். மேற்கொண்டு வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டால் இது தங்கத்தின் விலையில் ஏற்படும் அதிக ஏற்றத்தினை தடுக்கலாம்.

பணவீக்கம் Vs தங்கம்
 

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் என்பதால் தங்கம் விலையானது சரிவில் காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு இது ஆதரவாக அமையலாம். கடந்த அமர்வில் அமெரிக்க டாலரின் மதிப்பும் ஒரு மாத குறைந்த மதிப்பில் காணப்பட்டது. இது மேற்கொண்டு தங்கத்தில் முதலீடுகளை அதிகரிக்க தூண்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கவனத்தில் கொள்ள வேண்டியது?

கவனத்தில் கொள்ள வேண்டியது?

இன்று அமெரிக்காவின் வேலை குறித்தான டேட்டாவானது வெளியாகவுள்ளது. இது தங்கம் விலையில் பெரியளவிலான மாற்றத்தினை கொடுக்கலாம். இது சந்தைக்கு சாதகமாக வரும் பட்சத்தில் மத்திய வங்கியினை விரைவில் வட்டி விகிதத்தினை விரைவில் அதிகரிக்க தூண்டலாம். இது மேற்கொண்டு தங்கத்தின் விலையில் அழுத்தத்தினை கொடுக்கலாம்.

புடினின் எச்சரிக்கை

புடினின் எச்சரிக்கை

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஐரோப்பாவிற்கு எரிவாயு வழங்கும் மதிப்பில் மூன்றில் ஒரு பங்கு ரூபிளில் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மிரட்டியதை அடுத்து, கடந்த அமர்வில் தங்கம் விலையானது உச்சத்தினை எட்டியது. முன்னதாக அண்டை நாடுகள் ரஷ்யாவில் இருந்து இறக்குமதியினை தடை செய்யப்போவதாக மிரட்டி வந்த நிலையில், தற்போது ரஷ்ய அதிபரே இவ்வாறு கூறியிருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கெல்லாம் அசர மாட்டோம்

அதற்கெல்லாம் அசர மாட்டோம்

ரஷ்யாவின் முக்கிய வணிகமான எரிபொருள் வணிகத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தினால், ரஷ்யா பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவை சந்திக்கலாமென திட்டமிட்டு சில நாடுகள் காய் நகர்த்தின. இதனை வைத்து இன்னும் சில நாடுகள் மிரட்டி வருகின்றன. ஆனால் யார் என்ன கூறினாலும் அதற்கெல்லாம் அசர மாட்டோம் என்பதற்கு ஏற்ப புடினின் எச்சரிக்கையானது வந்துள்ளது. இது ரஷ்யாவின் எரிபொருளை பெரிதும் நம்பியுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் ரஷ்யா - உக்ரைன் பிரச்சினையானது,வேறு வடிவில் ரஷ்யாவுக்கு பிரச்சினையாக உருவெடுத்துக் கொண்டுள்ளது.

சந்தேகத்தை கிளப்பி வரும் அமெரிக்கா

சந்தேகத்தை கிளப்பி வரும் அமெரிக்கா

ரஷ்யா படைகளை குறைப்பதாக கூறியிருந்தாலும், இது குறித்தான முக்கிய ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாகவில்லை என்ற சந்தேகத்தினை அமெரிக்கா எழுப்பியுள்ளது. இதற்கிடையில் இந்த போர் இப்போதைக்கு முடிவுக்கு வருமா? என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. ஆக இதுவும் தங்கத்தின் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

டெக்னிக்கல் பேட்டர்ன் என்ன சொல்கிறது?

டெக்னிக்கல் பேட்டர்ன் என்ன சொல்கிறது?

ஃபண்டமெண்டல் காரணிகள் சில தங்கத்திற்கு சாதகமாகவே இருந்தாலும், டெக்னிக்கலாக இன்று சரியலாம் எனும் விதமாகவே உள்ளன. நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம். எனினும் இன்று வார கடைசி வர்த்தக நாள் என்பதால் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் புராபிட் புக்கிங் செய்யலாம். இது தங்கம் விலை சரிய காரணமாக அமையலாம். ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இரண்டு நாள் ஏற்றத்திற்கு பிறகு, இன்று மீண்டும் சரிவினைக் கண்டுள்ளது. இது தற்போது அவுன்ஸுக்கு 12.20 டாலர்கள் குறைந்து, 1937 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும் இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, உச்ச விலையை உடைக்கவில்லை. எப்படியிருப்பினும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

தங்கம் விலையினை போலவே வெள்ளியின் விலையும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 0.59% குறைந்து, 24.988 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. இதற்கிடையில் வெள்ளி விலையும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்தவரையில், தங்கம் விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக சரிவிலேயே காணப்படுகின்றது.தற்போது 10 கிராமுக்கு 211 ரூபாய் குறைந்து, 51,955 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று தொடக்கத்தில் கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. இதன் காரணமாக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 234 ரூபாய் குறைந்து, 67,253 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. எப்படியிருப்பினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்துள்ள நிலையில், ஏமாற்றம் கொடுக்கும் விதமாக ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது சென்னையில் கிராமுக்கு 41 ரூபாய் அதிகரித்து, 4834 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 328 ரூபாய் அதிகரித்து, 38,672 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 44 ரூபாய் அதிகரித்து, 5,273 ரூபாயாகவும், இதுவே 8 கிராமுக்கு 352 ரூபாய் அதிகரித்து, 42,184 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 52,730 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை

வெள்ளி விலை

சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது பெரியளவில் மாற்றமின்றி சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இன்றும் கிராமுக்கு 40 பைசா அதிகரித்து, 71.70 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 717 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 71,700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதுவே நீண்டகால நோக்கில் இன்று வெளியாகவிருக்கும் வேலை வாய்ப்பு குறித்தான தரவு, டாலர் மதிப்பு, பத்திர சந்தை, தேவை உள்ளிட்ட பல காரணிகள் தீர்மானிக்கலாம். ஆக சற்று பொறுத்திருந்து வாங்கலாம். ஆபரணத் தங்கத்தினை பொறுத்தவரையில் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price on April 1st, 2022: gold prices fall in MCX and COMEX after big jump

gold price on April 1st, 2022: gold prices fall in MCX and COMEX after big jump/தங்கம் விலை ரூ.3600-க்கு மேல் வீழ்ச்சி.. வாங்க சரியான இடமா..ஆபரண தங்கம் நிலவரம் என்ன?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X