தங்கம்(gold) விலையானது சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக சரிவினைக் கண்டுள்ளது. ஆனால் மறுபுறம் இந்திய சந்தையில் விலை பலத்த ஏற்றம் கண்டுள்ளது. ஆபரணத் தங்கம் விலையும் உச்சம் எட்டியுள்ளது.
இது இந்திய அரசானது இறக்குமதியினை கட்டுகுள் வைக்கும் விதமாக இறக்குமதொய் வரியினை 7.5%ல் இருந்து, 12.5% ஆக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சரிவினைக் கண்டிருந்தாலும், இந்தியாவில் உச்சம் தொட்டு வருகின்றது.
தங்கம் ஆர்வலர்கள் பெரும் ஷாக்.. இறக்குமதி 5% அதிகரிப்பு.. இனி விலை என்னவாகும்

சர்வதேச நிலவரம்?
தங்கம் விலையானது வலுவான அமெரிக்க டாலர் மற்றும் பத்திர சந்தைக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் சரிவினைக் கண்டு வருகின்றது. குறிப்பாக கடந்த சில வாரங்களாக ஒரே ரேஞ்ச் பவுண்டில் இருந்த நிலையில் தற்போது மீண்டும், அவுன்ஸூக்கு 1800 டாலர்களை உடைத்துள்ளது. குறிப்பாக 11.60 டாலர்கள் குறைந்து, 1795.75 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. அதே சமயம் இந்திய 10 கிராமுக்கு, 1154 ரூபாய் அதிகரித்து, 51,671 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது.

ரூபாய் மதிப்பு சரிவு
தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவினைக் கண்டு வரும் நிலையில், இதுவும் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கண்ட பல்வேறு காரணிகளும் தங்கத்திற்கு எதிராக இருந்தாலும், ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனையானது சர்வதேச அளவில் பணவீக்கத்தினை தூண்டலாம். இது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.

ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது சென்னையில் கிராமுக்கு 107 ரூபாய் அதிகரித்து, 4785 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 856 ரூபாய் அதிகரித்து, 38,280 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் கிராமுக்கு 117 ரூபாய் அதிகரித்து, 5220 ரூபாயாகவும், இதுவே 8 கிராமுக்கு 936 ரூபாய் அதிகரித்து, 47,760 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 52,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை
இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது சற்று குறைந்தே காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 10 பைசா குறைந்து, 65 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 650 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து,65,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.