தங்கம் விலை வீழ்ச்சியா.. எவ்வளவு வீழ்ச்சி.. சர்வதேச பங்கு சந்தைகள் ஏற்றம் தான் காரணமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிறந்த குழந்தைக்கு அணிவிக்கும் ஆபரணம் முதல் வயதான பாட்டி வரை, அனைவரும் விரும்பி அணியும் ஒரு ஆபரணமாக தங்கம் இருந்து வருகிறது.

இப்படி உலகம் முழுக்க மக்கள் தங்கத்தின் மீது ஒவ்வொரு வகையிலும் ஈர்க்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் அதிகளவில் ஆபரணமாக உபயோகிக்கப்படுகிறது எனில், அண்டை நாடுகளில் சிறந்த முதலீட்டு பொருளாக விளங்குகிறது.

இப்படி உலகினையே தன்பால் ஈர்க்கும் வல்லமை கொண்ட தங்கம், சர்வதேச அளவில் நிலவி பதற்றமான நிலையால் அதிகளவு ஏற்ற இறக்கத்தினை சந்தித்து வருகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் விலை சற்று அதிகரித்து காணப்பட்டாலும், இந்தியாவில் சற்று குறைந்து காணப்படுகிறது. கடந்த வியாழக்கிழமையன்று 800 ரூபாய் ஏற்றம் கண்ட நிலையில், இன்று சற்று குறைந்து வர்த்தகமாகி வருகிறது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது சற்று குறைந்து, 46,150 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது கடந்த ஒரு வாரத்தில் இல்லாத அளவுக்கு அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 3.15 டாலர்கள் அதிகரித்து 1,728.90 டாலராக வர்த்தகமாகி வருகிறது. எனினும் நேற்றைய முடிவு விலையை விட சற்று குறைந்து இன்று வர்த்தக தொடக்கத்தில் தொடங்கிய நிலையில், நேற்றைய உச்சமான 1733.20 டாலரினை தாண்டாமல் வர்த்தகமாகி வருகிறது. ஆக ஒரு வேளை இதன் உச்ச விலையை உடைத்து சென்றால் தங்கம் விலை இன்று அதிகரிக்கலாம். இல்லையெனில் அது குறைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

சர்வதேச வெள்ளி விலை
 

சர்வதேச வெள்ளி விலை

சர்வதே சந்தையில் வெள்ளியின் விலையானது இரண்டாவது நாளாக தொடர்ந்து நல்ல ஏற்றம் கண்டு வருகிறது. சொல்லப்போனால் கடந்த 10 தினங்களாகவே வெள்ளியின் விலையானது பெரியளவில் மாற்றம் இல்லாமல் வர்த்தகமாகி வந்த நிலையில், நேற்றும் இன்றும் மிக வேகமாக ஏற்றம் கண்டு வருகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதே சந்தையில் வெள்ளியின் விலையானது அதிகரித்து வரும் நிலையில், எம்சிஎக்ஸ் சந்தையிலும் வெள்ளியின் விலை சற்று அதிகரித்துள்ளது. தற்போது இது 377 ரூபாய் அதிகரித்து, 43,500 ரூபாயாக வர்த்தகமாகியும் வருகிறது. கடந்த 10 தினங்களாகவே பெரியளவில் ஏற்றம் காண விட்டாலும், வெள்ளியின் விலையானது தொடர்ந்து சற்று குறைந்தே வந்தது. ஆனால் கடந்த இரண்டே வர்த்தக தினங்களில் மொத்த இறக்கத்தினையும் சரி கொண்டுள்ளது.

தங்க ஆபரண விலை

தங்க ஆபரண விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு (22 கேரட்) 4415 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 35,320 ரூபாயாகவும் உள்ளது. இதே 24 கேரட் தங்கத்தின் விலையானது கிராமுக்கு 4691 ரூபாயாகவும், இதே 8 கிராம் தூய தங்கத்தின் விலையானது 37,528 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மே 3லிருந்தே தங்க ஆபரண விலையானது தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

சென்னையில் ஆபரண வெள்ளியின் விலையானது கிராமுக்கு 42.06 ரூபாயாகவும், இதே கிலோ வெள்ளியின் விலையானது 42,060 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று தினங்களாகவே ஆபரன வெள்ளியின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவது குறிப்பிடத்தகக்து.

விலையேற்றத்துக்கு என்ன காரணம்?

விலையேற்றத்துக்கு என்ன காரணம்?

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியிலும் கூட, தங்கம் விலையானது சற்று குறைந்து வர்த்தகமாகி வருகிறது ஏன்? ஏனெனில் அமெரிக்காவில் லாக்டவுனில் சில தளர்வுகள் அளிக்கப்படலாம் என்ற நிலையில், பொருளாதாரம் மேம்பட இது வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சர்வதேச பங்கு சந்தைகள் சற்று ஏற்றம் கண்டு வருகின்றன. அதன் விளைவாக இங்கு தங்கம் விலை சற்று குறைய ஆரம்பித்துள்ளது.

ஆசிய சந்தைகளும் ஏற்றம்

ஆசிய சந்தைகளும் ஏற்றம்

தளர்வு ஏற்படலாம் என்ற காரணத்தினால் வால் ஸ்ட்ரீட்டில் ஒரே இரவில் ஏற்றம் கண்டது. அதோடு ஆசிய பங்கு சந்தைகளும் பச்சை நிறத்திலேயே உள்ளன. எனினும் பலவீனமான உலகளாவிய பொருளாதாரம் குறித்த குறியீடுகள் மற்றும் பொருளாதார மந்த நிலை குறித்த அச்சங்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. இது தொடர்ந்து பாதுகாப்பு புகலிடமான தங்கத்தினை ஆதரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் இன்று சற்று விலை குறைந்தாலும் நீண்ட கால நோக்கில் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices today fall amid global equities higher

Fears of deeper recessions continued to support gold prices. But MCX gold prices fall today after global equities higher.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X