மியூச்சுவல் ஃபண்ட்டில் யாருக்கு எந்த வகை பெஸ்ட்.. படித்து பாருங்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை : மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்ய வேண்டும் என்று ஒரு முதலீட்டாளர் முடிவு செய்த பின்னர், நிலையான வருவாய் திட்டம், ஈக்விட்டி அல்லது பேலன்ஸ்டு திட்டம் போன்றவற்றில் எந்தத் திட்டத்தில் முதலீடு செய்யவேண்டும் என்பதையும், எந்த நிறுவனத்தில் (AMC) முதலீடு செய்யவேண்டும் என்பதையும் அவர்கள் தீர்மானிக்க வேண்டும்.

 

முதலில், உங்கள் நோக்கம் என்ன மற்றும் எந்த காலக்கட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள். எது உங்களுக்கு சரியாக இருக்கும், உங்களால் எவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியும் என்பதை உங்களின் மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகருடன் கலந்தாலோசித்திடுங்கள். இந்த விவரங்களின் அடிப்படையில் எந்த ஃபண்ட்டில் முதலீடு செய்யலாம் என்பது தீர்மானிக்கலாம்.

உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பல்வேறு வகையான மியூச்சுவல் ஃபண்ட்கள் உள்ளன. பெரும்பாலும், இதில் மூன்று வகைகள் உள்ளன. ஈக்விட்டி அல்லது குரோத் ஃபண்ட்கள், இன்கம் அல்லது பாண்டு அல்லது ஃபிக்ஸட் இன்கம் ஃபண்ட்கள் , ஹைபிரிட் ஃபண்ட்கள் ஆகியவை ஆகும்.

  “லார்ஜ் கேப்” பண்ட்கள்

“லார்ஜ் கேப்” பண்ட்கள்

இதில் ஈக்விட்டி அல்லது குரோத் ஃபண்ட்கள் குறித்து பார்த்தோம் என்றால் இவை பெருமளவில் ஈக்விட்டிகளில் முதலீடு செய்யும், நீண்டகால முதலீட்டுக்கு இவை ஏற்றவை மற்றும் அதிக ரிட்டர்ன்களை வழங்கக்கூடியவை. இதற்கான உதாரணங்கள், பெரும் நிறுவனங்களில் பெருமளவில் முதலீடு செய்யக்கூடிய "லார்ஜ் கேப்" பண்ட்கள், நடுத்தர அளவிலான நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடிய "மிட் கேப்"ஃபண்ட்கள்.சிறு நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடிய "ஸ்மால் கேப்" பண்ட்கள், பெரும், நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடிய "மல்டி கேப்" பண்ட்கள் ஆகியவை உள்ளன.

இன்ஃப்ராஸ்டிரக்சர்  பண்ட்கள்

இன்ஃப்ராஸ்டிரக்சர் பண்ட்கள்

"வர்த்தகத்தின் ஒரு குறிப்பிட்ட வகை தொடர்பான நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடிய "செக்டார்" பண்ட்கள் உள்ளன. உதாரணத்திற்கு, டெக்னாலஜி ஃபண்ட்கள், தொழில்நுட்ப நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்யப்படும். இன்ஃப்ராஸ்டிரக்சர் துறையின் வளர்ச்சியில் இருந்து பலனடையும் நிறுவனங்களில் முதலீடு செய்யும் இன்ஃப்ராஸ்டிரக்சர் ஃபண்ட்கள் ஆகியவை உள்ளன.

வரி சேமிப்பு  ஃபண்ட்ஸ்
 

வரி சேமிப்பு ஃபண்ட்ஸ்

இன்கம் அல்லது பாண்டு அல்லது ஃபிக்ஸட் இன்கம் ஃபண்ட்கள் : இவை அரசாங்கப் பத்திரங்கள் அல்லது பாண்டுகள், கமர்ஷியல் பேப்பர்கள் அல்லது கடன் பத்திரங்கள், வங்கி டெபாசிட்களின் சான்றிதழ்கள் மற்றும் டிரஷரி பில்கள், கமர்ஷியல் பேப்பர்கள் போன்ற பணச்சந்தை சார்ந்த ஆவணங்கள் போன்ற நிலையான வருமானத்தைத் தரும் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். இவை ஒப்பீட்டளவில் பாதுகாப்பான முதலீடுகள் மற்றும் வருவாய் உருவாக்கத்துக்கு ஏற்றவை.
உதாரணத்திற்கு, லிக்விட், ஷார்ட் டெர்ம், ஃப்ளோட்டிங் ரேட், கார்ப்பரேட் டெப்ட், டைனமிக் பாண்டு, கில்டு ஃபண்ட்ஸ் போன்றவை ஆகும்.

மாதாந்திர வருவாய்த் திட்டங்கள்

மாதாந்திர வருவாய்த் திட்டங்கள்

ஹைபிரிட் ஃபண்ட்கள் என்று பார்த்தால் இவை ஈக்விட்டி மற்றும் நிலையான வருவாய் தரும் ஃபண்ட்கள் இரண்டிலும் முதலீடு செய்வதால் சிறந்த வருமானத்துக்கான சாத்தியத்தையும் வருவாய் உருவாக்கத்தையும் வழங்கிடும். இதற்கான உதாரணங்கள், அக்ரசிவ் பேலன்ஸ்டு ஃபண்ட்கள், கன்சர்வேட்டிவ் பேலன்ஸ்டு ஃபண்ட்கள், பென்ஷன் திட்டங்கள், குழந்தை திட்டங்கள் மற்றும் மாதாந்திர வருவாய்த் திட்டங்கள் போன்றவை ஆகும்.

யாருக்கு எது பெஸ்ட்

யாருக்கு எது பெஸ்ட்

உங்களுக்கு ஓய்வுத் திட்டமிடல் போன்ற ஒரு நீண்டகால நோக்கம் இருந்து, ஓரளவு ரிஸ்க் எடுப்பது சரியாக வரும் என்றால் இந்தச் சூழலில் ஈக்விட்டி அல்லது பேலன்ஸ்டு ஃபண்ட் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். பணத்தை ஒருசில மாதங்களுக்கு மட்டுமே முதலீடு செய்வது போன்ற குறுகியகால நோக்கம் உங்களுக்கு இருக்கிறது என்றால். இந்தச் சூழலில், லிக்விட் ஃபண்ட் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

கடந்த கால விவரங்கள்

கடந்த கால விவரங்கள்

ஒருவேளை நீங்கள் வழக்கமான முறையில் வருமானம் தரக்கூடிய ஒன்றில் முதலீடு செய்ய விரும்பினால், மாதாந்திர வருவாய்த் திட்டம் அல்லது இன்கம் ஃபண்ட் உங்களுக்கு ஏற்றது ஆகும். என்ன வகையான ஃபண்டில் முதலீடு செய்யவேண்டும் என்பதைத் தீர்மானித்த பின்னர், AMC -இலிருந்து ஒரு குறிப்பிட்ட திட்டம் முடிவு செய்யப்படும். வழக்கமாக AMC -யின் கடந்தகால செயல்திறன், திட்டத்தின் பொருந்தும் தன்மை, போர்ட்ஃபோலியோ விவரங்கள் ஆகியவற்றைத் தீர்மானித்த பின்னர் இந்த முடிவுகள் செய்வவார்கள். .

திட்ட ஆவணங்கள்

திட்ட ஆவணங்கள்

முதலீட்டைச் செய்வதற்கு முன்பு, திட்ட தகவல் அறிக்கை மற்றும் முக்கியத் தகவல் ஆவணம் ஆகிய இரண்டு ஆவணங்களையும் முதலீட்டாளர்கள் படிக்க வேண்டியது அவசியமாகும். விரிவான தகவலை ஒருவர் அறிய விரும்புகின்ற பட்சத்தில், திட்டத் தகவல் ஆவணத்தைப் பார்க்கலாம். இந்த அனைத்துமே எல்லா மியூச்சுவல் ஃபண்ட் இணையதளங்களிலும் கிடைக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

When should I start investing in Mutual Funds? how to invest to best mutual funds in india

Various types of Mutual Fund schemes exist to cater to different needs of different people. Largely there are three types mutual funds. Equity or Growth Funds, Income or Bond or Fixed Income Funds. Hybrid Funds.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X