Year End 2020.. வரலாறு காணாத உச்சம்.. 4வருடத்தில் இல்லாத வீழ்ச்சி.. 2020ல் தங்கம் நிலவரம் இது தான்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் தங்கத்தினை விரும்பாத பெண்கள் இருப்பது மிக மிக அரிது. ஆடம்பரத்திற்கும், அழகுக்கும் ஒரு தரப்பினர் வாங்குகிறார்கள் என்றால், ஒரு தரப்பு கஷ்டமான காலத்தில் ஆபத்பாந்தவனாக உதவுவது தங்கம் என வாங்கி வைக்கின்றனர்.

 

இப்படி மக்களின் இன்ப துன்பத்தில் பங்கேற்கும் தங்கம் விலையானது, நடப்பு ஆண்டில் வரலாற்று உச்சத்தினை தொட்டது. பல நிபுணர்களும் டாலரில் 5000 டாலர்களை கூட தொடலாம் என்றும் கணித்தனர்.

அதே போல இந்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் வரலாற்று உச்சத்தினை தொடலாம் என்றெல்லாம் கணித்தனர்.

உச்சத்தில் இருந்து தங்கம் விலை ரூ.6860 வீழ்ச்சி.. இனி குறையுமா? இப்போது வாங்கலாமா?உச்சத்தில் இருந்து தங்கம் விலை ரூ.6860 வீழ்ச்சி.. இனி குறையுமா? இப்போது வாங்கலாமா?

நடப்பு ஆண்டில் என்னென்ன நடந்தது?

நடப்பு ஆண்டில் என்னென்ன நடந்தது?

நிபுணர்களின் கணிப்பு பலிக்குமா? மீண்டும் வரலாற்று உச்சத்தினை தொடுமா? நடப்பு ஆண்டில் தங்கம் விலை நிலவரம் என்ன? சர்வதேச சந்தையில் எப்படி இருந்தது. இந்திய கமாடிட்டி சந்தையில் எப்படி உள்ளது. ஆபரண தங்கம் விலை நிலவரம் என்ன? இனியும் நிபுணர்கள் சொல்வதனைப் போல் நீண்டகால நோக்கில் அதிகரிக்கத்தான் செய்யுமா? அதிகபட்ச விலை என்ன? குறைந்தபட்ச விலை எவ்வளவு? அடுத்து என்ன செய்யலாம் வாருங்கள் பார்க்கலாம்.

தங்கம் மீதான மோகம்

தங்கம் மீதான மோகம்

தங்கத்தின் மீதான தீரா மோகத்தினால், நாடு தழுவிய லாக்டவுன் காலகட்டத்தில் கூட தங்க நகைக்கடை பூட்டியிருந்தாலும், நம் மக்கள் ஆன்லைனில் வாங்கிக் குவித்தனர். ஏன் இன்றளவும், பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, பணப்புழக்கம் குறைவு இப்படி பல நெருக்கடிகளை கண்டிருந்தாலும், தங்க நகைக்கடைகளில் கூட்டம் குறைந்தபாடில்லை. ஆக அந்தளவுக்கு மக்கள் தங்கத்தின் மீது தீரா மோகம் கொண்டுள்ளனர்.

தங்கம் வாங்கும் எண்ணம் மாறவில்லை
 

தங்கம் வாங்கும் எண்ணம் மாறவில்லை

அதிலும் விலை என்னதான் அதிகரித்தாலும், வாங்கும் அளவு குறைந்திருந்தாலும், வாங்கும் எண்ணம் மாறவில்லை. இதற்கு ஒரு சரியான சாட்சியம் என்னவென்றால், நமது பாட்டிமார்களும், தாத்தாக்களும் நாங்கெல்லாம் அப்போது ஒரு பவுன் 50 ரூபாய்க்கு தான் வாங்கினோம் என்பார்கள். ஆனால் இன்று செய்கூலி சேதாரம் என அனைத்தும் சேர்த்தால் 50,000 ரூபாயினை கூட சவரனுக்கும் தாண்டலாம்.

தங்கம் விலை வரலாறு

தங்கம் விலை வரலாறு

தங்கம் விலையானது கடந்த 1925ம் ஆண்டில் 10 கிராம் தங்கம் விலை வெறும் 18.75 ரூபாயாகத் தான் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுவே இந்தியா சுதந்திரம் வாங்கிய போது கூட வெறும் 88.62 ரூபாயாகத் தான் இருந்துள்ளது. ஏன் கடந்த 1979 வரையில் கூட 1000 ரூபாய்க்கு கீழ் தான் விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. 1980ல் தான் 1330 ரூபாய்க்கும், இதே 2007ம் வருடத்தில் 10 கிராம் தங்கத்தின் விலையானது 10,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் 2011ல் 26,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. கடந்த 2018ல் கூட தங்கம் விலை அதிகபட்சமாக 31,535 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நடப்பு ஆண்டில் தான் வரலாறு காணாத அளவு ஏற்றம் கண்டது.

நடப்பு ஆண்டில் ஆபரண தங்கம் விலை நிலவரம்

நடப்பு ஆண்டில் ஆபரண தங்கம் விலை நிலவரம்

ஜனவரி 1, 2020ல் தங்க ஆபரணம் விலையானது 10 கிராமுக்கு 39,220 ரூபாயாக வர்த்தகமாகிய நிலையில், ஜனவரி மாதத்தில் அதிக பட்சமாக 41,250 ரூபாயாகவும், குறைந்தபட்சமாக 39,190 ருபாகவும் வர்த்தகமாகியது. இதே பிப்ரவரி மாதத்தில் அதிகபட்சமாக 41,050 ரூபாயாகவும், குறைந்தபட்சமாக 38,440 ரூபாயாகவும் வர்த்தகமாகியது. இதே மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக 41,530 ரூபாயாகவும், குறைந்தபட்சமாக 41,110 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுவே ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக 47,200 ரூபாயாகவும், குறைந்தபட்சமாக 41,150 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த மாதத்தில் தங்கம் விலையேற்றம்

அடுத்தடுத்த மாதத்தில் தங்கம் விலையேற்றம்

இதே மே மாதத்தில் அதிகபட்சமாக 46,600 ரூபாயாகவும், குறைந்தபட்சம் 44,300 ரூபாயாகவும், ஆக மொத்தத்தில் மே மாதத்தில் 1.68% ஏற்றத்தில் இருந்தது.

இதுவே ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக 47,400 ரூபாயாகவும், குறைந்தபட்சம் 44,620 ரூபாயாகவும், ஆக மொத்தத்தில் மே மாதத்தில் 2.78% ஏற்றத்திலும் இருந்தது.

இதே ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 51,900 ரூபாயாகவும், குறைந்தபட்சம் 46,450 ரூபாயாகவும், ஆக மொத்தத்தில் ஜூலை மாதத்தில் 8.92% ஏற்றத்திலும் காணப்பட்டது.

 

வரலாற்று உச்சம் தொட்ட்ட தங்கம்

வரலாற்று உச்சம் தொட்ட்ட தங்கம்

ஆகஸ்ட் மாதத்தினை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 54,500 ரூபாயாகவும், குறைந்தபட்சம் 50,350 ரூபாயாகவும் காணப்பட்டது. இந்த மாதத்தில் மட்டும் -3.81% குறைந்தது. இந்த மாதத்தில் தான் தங்கம் விலையானது சவரனுக்கு, அதிகபட்சமாக 43,600 ரூபாய் வரையில் சென்று பின் குறைந்தது.
செப்டம்பர் மாதத்தில் அதிகபட்சமாக 50,750 ரூபாயாகவும், குறைந்தபட்சம் 48,250 ரூபாயாகவும், ஆக மொத்தத்தில் செப்டம்பர் மாதத்தில் -3.55% சரிவில் காணப்பட்டது.
அக்டோபர் மாதத்தினை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 50,200 ரூபாயாகவும், குறைந்தபட்சம் 48,900 ரூபாயாகவும், ஆக மொத்தத்தில் அக்டோபர் மாதத்தில் 2.15% ஏற்றத்தில் தான் காணப்பட்டது.
இதே நவம்பர் மாதத்தில் அதிகபட்சமாக 51,230 ரூபாயாகவும், இதே குறைந்தபட்சமாக 47,240 ரூபாயாகவும் காணப்பட்டது. இந்த மாதத்தில் மட்டும் -5.44% குறைந்துள்ளது.

வரலாற்று உச்சத்திற்கு காரணம் என்ன?

வரலாற்று உச்சத்திற்கு காரணம் என்ன?

நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத கிருமி, உலகையே ஆட்டிப்படைக்கத் தொடங்கியது. அது கடந்த மார்ச் மாத இறுதியில் தான் இந்தியாவிலும் காலடி எடுத்து வைத்தது. அப்போது பரவலை கட்டு படுத்தும் நோக்கத்தில், அரசு நாடு தழுவிய முழு லாக்டவுனை அமல்படுத்தியது. ஆக இந்த காலகட்டத்தில் பொருளாதார நடவடிக்கைகள் முழுவதும் முடங்கியது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து, ஆகஸ்ட் மாதத்தில் வரலாற்று உச்சத்தினை தொட்டது.

நவம்பரில் செம சரிவு

நவம்பரில் செம சரிவு

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வரலாறு காணாத உச்சத்தினை தொட்ட நிலையில், மீண்டும் நவம்பரில் செம சரிவினைக் கண்டது. இது உலகம் முழுவதும் மிக பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டுள்ளன. இதன் காரணமாக நவம்பர் மாதத்தில் மட்டும் 5.44% வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது.

நடப்பு ஆண்டில் சர்வதேச நிலவரம்

நடப்பு ஆண்டில் சர்வதேச நிலவரம்

நடப்பு ஆண்டில் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது முதல் பாதிக்கும் மேலாக தொடர்ச்சியாக ஏற்றம் காண தொடங்கியது. ஜனவரி மாதத்தில் அவுன்ஸ் தங்கம் விலையானது 1556.80 டாலர்களாக தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 2099.20 டாலர்களை தொட்ட நிலையில், குறைந்தபட்சமாக 1767.20 டாலர்களாக நவம்பர் மாதத்தில் வர்த்தகமாகியுள்ளது.

எம்சிஎக்ஸ் தங்கம் நிலவரம்

எம்சிஎக்ஸ் தங்கம் நிலவரம்

இந்திய கமாடிட்டி வர்த்தகத்தினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 10 கிராமுக்கு 56,200 ரூபாயினை தொட்டது. எனினும் தற்போது 49000 லெவலில் வர்த்தகமாகி வருகின்றது. சர்வதேச சந்தையின் எதிரொலியாக வருடத்தின் முதல் பாதிக்கும் மேல் ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலை, ஆகஸ்ட் மாதத்தின் பிற்பாதியில் இருந்து சரிய தொடங்கியுள்ளது.

இனி தங்கம் விலை எப்படி இருக்கும்?

இனி தங்கம் விலை எப்படி இருக்கும்?

வருடத்தின் முதல் பாதிக்கும் மேலாக கிடுகிடுவென உச்சத்தினை தொட்ட நிலையில், கொரோனா தடுப்பூசி, அமெரிக்கா டாலர், ஊக்கத் தொகை பற்றிய சாதகமான அறிவிப்புகளால் மீண்டும் சரியத் தொடங்கியுள்ளது. எப்படி இருப்பினும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தங்கம் விலையானது நடப்பு ஆண்டில் கிட்டதட்ட 30% ஏற்றம் கண்டுள்ளது. இதற்கிடையில் நிபுணர்கள் அடுத்த ஆண்டிலும் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்றே கூறி வருகின்றனர்.

தங்கத்திற்கு ஆதரவளிக்கும் காரணிகள்

தங்கத்திற்கு ஆதரவளிக்கும் காரணிகள்

ஏனெனில் அதிகரித்து வரும் கொரோனாவால், கொரோனா தடுப்பூசியானது அனைவருக்கும் கிடைக்க தாமதமாகும். மேலும் ஊக்கத் தொகைகள் இன்னும் அதிகமாக தேவைப்படலாம். இதன் காரணமாக பொருளாதாரமும் மீண்டு வர இன்னும் கொஞ்சம் நாள் ஆகலாம். ஆக இதன் காரணமாக தங்கம் விலையானது அடுத்தாண்டிலும் சற்று அதிகரிக்கலாம் என்றே கூறிவருகின்றனர். நடப்பு நிதியாண்டில் தங்கம் விலையானது 45% வரை அதிகரிக்கலாம் என்று கூறுகின்றனர்.

தங்க நகை விற்பனை சரிவு

தங்க நகை விற்பனை சரிவு

தங்கம் இறக்குமதி நடப்பு ஆண்டில் தொடர்ந்து வெகுவாக குறைந்துள்ளது. ஜூன் காலாண்டில் 90% இறக்குமதி வீழ்ச்சி கண்டுள்ளது. இதே போல நடப்பு நிதியாண்டில் தங்கம் விற்பனையும் ஜூன் காலாண்டில் 60 - 97% சரிவினை கண்டுள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். கொரோனாவின் காரணமாக தேவை குறைந்திருந்தாலும், இது அடுத்தாண்டில் படிப்படியாக அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Year 2020 so far gold: how to performed gold price in 2020

Gold price update.. Year 2020 so far gold: This year Gold price increased nearly 30% amid to coronavirus
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X