Pepsico நிறுவனம் ஸ்நாக்ஸ் உற்பத்தியில் மேலும் ரூ.514 கோடி முதலீடு.. வணிகத்தை இரட்டிப்பாக்க அதிரடி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : அடுத்த மூன்று ஆண்டுகளில் Pepsico நிறுவனத்தில் 514 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

ஆமாங்க.. பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைவரும் மற்றும் நிர்வாக அதிகாரியுமான அகமது எல்ஷேக் உத்திரபிரதேசத்தில் கீரின் பீல்ட் உணவு உற்பத்தி ஆலை அமைக்க அடுத்த மூன்று ஆண்டுகளில் 514 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

அதிலும் அடுத்த 2022ம் ஆண்டுக்குள் குர்குரே மற்றும் லேஸ் உள்ளிட்ட சிற்றுண்டி வணிகத்தினை இரட்டிப்பாக்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக, இந்த நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியான அகமது கூறியுள்ளார்.

இந்தியாவில் வணிகத்தை நிலை நிறுத்த முதலீடு

இந்தியாவில் வணிகத்தை நிலை நிறுத்த முதலீடு

இதோடு பல திட்டங்களில் முதலீடு செய்வதை நோக்கமாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு, உத்திரபிரதேச அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்துடன் கையெழுத்திட்டுள்ளது.இது குறித்து அந்த நிறுவனத்தின் உணவு மற்றும் பான வணிகத்தை இந்தியாவில் நிலையான முறையில் வளர்ப்பதில் பெப்சிகோ உறுதியாக உள்ளது என்றும், உத்திரபிரதேச மக்களுடன் எங்களுக்கு நீண்ட உறவு உள்ளது என்றும், அதோடு சில ஆண்டுகளில் எங்களது ஸ்நாக்ஸ் (சிற்றுண்டி) வணிகத்தை இரட்டிப்பாக்கவும், இதற்காக 514 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும் உத்தேசித்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

முதலீட்டாளர் உச்சி மாநாட்டில் ஒப்பந்தம்

முதலீட்டாளர் உச்சி மாநாட்டில் ஒப்பந்தம்

இதன் மூலம் உத்தரபிரதேசத்தில் எங்கள் முதலீட்டு தளத்தை விரிவாக்க உள்ளதாகவும் எல்ஷேக் கூறியுள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உத்திர பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யா நாத் தலைமையில், நடந்த முதலீட்டாளர் உச்சி மாநாட்டில் நடந்த விழாவில், இந்த நிறுவனத்திற்கும், உத்திரபிரதேச அரசாங்கத்துக்கும் இடையே இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளுடன் ஒருங்கிணைப்பு!

விவசாயிகளுடன் ஒருங்கிணைப்பு!

அதோடு இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பெப்சிகோ இந்தியா உள்ளூர் விவசாயிகளுடன் அதன் பின் தங்கிய ஒருங்கினைப்பை விரிவுபடுத்துவதோடு, உத்திரபிரதேசத்தில் உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு சமூக பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த விவசாய சிறந்த நடைமுறைகளைக் கொண்டு வர உதவும்.

குளிர் சேமிப்பு வசதி ஏற்படுத்தப்படும்

குளிர் சேமிப்பு வசதி ஏற்படுத்தப்படும்

மேலும் வினியோகம் சங்கிலியை இயக்குவதற்கு இந்த நிறுவனம் ஒரு குளிர் சேமிப்பு வசதியை அமைக்கும். மேலும் இது மா நிலத்தில் துணை மற்றும் பிற ஆதரவு தொழில்களின் வளர்ச்சிக்கும் ஒரு உத்வேகத்தை அளிக்கும் என்றும் அது மேலும் கூறியுள்ளது.

சிப்ஸ்களுக்கு உற்பத்திற்கு உருளைக் கிழங்கே ஆதாரம்

சிப்ஸ்களுக்கு உற்பத்திற்கு உருளைக் கிழங்கே ஆதாரம்

பெப்சிகோ இந்தியா தற்போது அதன் விவசாய திட்டத்தின் கீழ் உள்ளூர் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் உருளைக்கிழங்கையே ஆதாரமாக கொண்டுள்ளது லேஸ் மற்றும் Uncle Chipps என்ற சிப்ஸ் வகைகள். இதன் மூலம் 13 மா நிலங்களில் இருந்து, சுமார் 24,000 விவசாயிகளிடமிருந்து இந்த சிப்ஸ் வகைகளுக்கான உருளைக் கிழங்குகள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PepsiCo India to invest Rs 514 crore to set up snacks plant

PepsiCo India to invest Rs 514 crore to set up snacks plant
Story first published: Sunday, July 28, 2019, 15:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X