அடடே இது தான் பெஸ்ட் முதலீடு.. லிக்விட் ஃபண்டுகள்.. யார் யார் முதலீடு செய்யலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதலீடு என்றாலே இந்த காலகட்டத்தில் நினைக்ககூட முடியாத ஒன்றாக பலருக்கு உள்ளது. அப்படியிருந்தாலும், தங்கள் குழந்தைகளின் வருங்கால நலன் கருதியும், அவர்களின் எதிர்கால நலன் கருதியும் கொஞ்ச நஞ்சம் செலவினை குறைத்து முதலீடு செய்து வருகின்றனர் பலர்.

இப்படி வயிற்கை கட்டி, வாயை கட்டி யாரோ சொல்கிறார்கள் என முதலீடு செய்து, முதலீட்டு தொகையினையும் கூட இழக்கிறார்கள்.

இவ்வாறு முதலீடு செய்பவர்கள் முதலில் நினைப்பது அவர்களின் முதலீட்டின் மதிப்பு குறையக் கூடாது. குறைந்த அளவிலான லாபம் கிடைத்தாலும் பரவாயில்லை, ஆனால் முதலீட்டிற்கு எந்த பங்கமும் வரக்கூடாது என்பது தான்.

சிறந்த முதலீடு
 

சிறந்த முதலீடு

அப்படி யோசிப்பவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது முதலில் வங்கி வைப்பு நிதிகளைத் தான். ஆனால் அங்கு வட்டி விகிதம் குறைவு. ஆனால் இப்படி நினைப்பவர்களுக்கு லிக்விட் ஃபண்டுகள் சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. இதில் குறுகிய கால வைப்பு நிதிகளுடன் ஒப்பிடும்போது நல்ல லாபம் கிடைக்கும். அதோடு எந்த சமயத்திலும் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.

லிக்விட் ஃபண்டுகள் என்றால் என்ன?

லிக்விட் ஃபண்டுகள் என்றால் என்ன?

ஏனெனில் இந்த வகை பண்டுகளில் குறுகிய நாட்களில் முதலீடு செய்து கொள்ளலாம். இதில் சுமார் 8 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை லாபம் கிடைக்கும். ஏனெனில் இந்த லிக்விட் ஃபண்டுகள் என்பது வங்கி நிலையான வைப்பு நிதி மற்றும், கடன் பத்திரங்கள், 90 நாட்கள் முதிர்ச்சியுடன் கூடிய பிற கடன் பத்திரங்கள் போன்ற நிதிக் கருவிகளில் முதலீடு செய்யப்படுகிறது.

கட்டுப்பாடு இல்லை

கட்டுப்பாடு இல்லை

இந்த லிக்விட் பண்டுகளில் நெட் அசெட் வேல்யூ 365 நாட்களுக்கும் கணக்கிடப்படுகிறது. இதே மற்ற டெப்ட் பண்டுகள் வணிக நாட்களுக்கு மட்டுமே கணக்கிடப்படுகிறது. ஆனால் லிக்விட் பண்டுகளுக்கு எந்தவொரு பூட்டுதல் காலத்தில் கூட எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லை. ஒரு வேளை உங்களது பணத்தினை நீங்கள் திரும்ப பெற வேண்டும் எனில், 24 மணி நேரத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.

சின்ன பிரச்சனை இல்லை
 

சின்ன பிரச்சனை இல்லை

ஆனால் இதில் ஒரு பிரச்சனையும் உண்டு. அது இந்த ஃபண்டுகள் குறுகிய காலத்தில் முதலீடு செய்யப்படுவதால், இதற்கு டிவிடெண்ட் விநியோக வரியாக 25 சதவீதம் விதிக்கப்படுகிறது. இந்த ஃபண்டில் முதலீடு செய்யும் பணத்தினை 1 வருடத்திற்கு மேல் முதலீடு செய்தால் 10 சதவீதம் நீண்டகால ஆதாய வரி 10 சதவீதம் செலுத்த வேண்டியிருக்கும்.

யாருக்கு இந்த ஃபண்டு?

யாருக்கு இந்த ஃபண்டு?

ஆக மொத்தத்தில் குறுகிய கால நோக்கில் முதலீடு செய்து லாபம் பார்க்க நினைப்பவர்களுக்கு இந்த ஃபண்டு உகந்த ஒரு முதலீடாகும்.

Top 10 liquid funds in india

Aditya birla sun life money manger

Kotak money market scheme

ICICI prudential money market fund-cash option

Nippon india liquid fund

Axis fund growth

Aditiya birla sun life liquid fund

UTI liquid cash

UTI money market fund

L&T liquid fund

ICICI prudential liquid fund

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Best liquid funds in 2020, top liquid funds in india

Liquid funds invest in short-term high-credit quality fixed income earning money market instruments. Its invest in certificates of deposit, treasury bills, commercial papers and etc
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X