தங்கம் என்பது இன்றளவிலும் நடுத்தர மக்கள் வாங்கி வைப்பதே, அவசர தேவைக்கு உடனடியாக வைத்து பணம் பெறலாம் என்பதால் தான்.
இது பாரம்பரியத்தின் ஒரு அம்சமாக கருத்தப்பட்டாலும், இன்றைய நாளிலும் பல நடுத்தர குடும்பங்களில் அவசர தேவைக்கு ஆபத்பாந்தவனாக உதவுவது தங்கம் தான்.
ஏனெனில் நினைத்த நேரத்தில்? எந்த கேள்வியும் கேட்காமல்? குறைந்த நேரத்தில் பணம் கிடைக்கும் என்றால் அது நகைக்கடன் தான். இதே மற்ற கடன் களுக்கு பல விதிமுறைகள், ஆவணங்கள் தேவைப்படும் நிலையில், நகைக்கடனுக்கு அப்படியில்லை.
FASTag இருக்கா.. இல்லாவிடில் நாளை முதல் இருமடங்கு கட்டணம்.. மத்திய அரசு திட்டவட்டம்..!

நகைக்கடன் தான் பாதுகாப்பு
தங்க நகைக்கடனுக்கோ பெரியதாக ஒன்றும் தேவையில்லை. சொல்லப்போனால் உங்களது முகவரி சான்று மற்றும் அடையாள சான்று என இருந்தால் போதுமானது? இந்தியாவினை பொறுத்த வரையில் நகைக்கடன் என்பது மிகவும் ஒரு பாதுகாப்பான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் நினைத்த நேரத்தில் உங்களது நகைகளை அடகு வைத்து, சந்தை மதிப்புக்கு ஏற்ப பணம் வாங்கிக் கொள்ளலாம். வட்டி விகிதமும் குறைவு.

மதிப்பீடு செய்யப்பட்டு கடன் தரப்படும்
உங்களின் நகையின் தரத்தினை மதிப்பீடு செய்யப்பட்ட பின்னரே, நீங்கள் உங்கள் தங்க நகை மீதான கடனை பெற்றுக் கொள்ள முடியும். தங்க நகைகள் மட்டும் வைத்து வங்கிகளில் கடன் பெற முடியும். எனினும் தங்க கட்டிகள் மற்றும் தங்க காசுகளையும் அடகு வைத்து, கடன் பெற முடியாது.

நகையின் மதிப்பில் 90% கடன்
அதிலும் கொரோனாவுக்கு பின்பு நகைக்கடன் பெறாதவர் இருப்பது கடினம். ஏனெனில் முன்பெல்லாம் நகையின் மதிப்பில் 75% கடனாக பெற்று வந்த நிலையில், கொரோனா காலத்தில், நகையின் மதிப்பில் 90% வரையில் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தது. ரிசர்வ் வங்கியின் இந்த அதிரடி அறிவிப்பானது மார்ச் 31, 2021 வரை நடைமுறையில் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.

எவ்வளவு கடன் பெற முடியும்?
நகைக்கடன் மூலம் ஒரு தனி நபர் லட்சக்கணக்கில் கடன் வாங்கிக் கொள்ள முடியும். ஏனெனில் இந்த விகிதமானது ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு விதமாக உள்ளது. உதாரணத்திற்கு ஐசிஐசிஐ 10,000 ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரையில் வாங்கிக் கொள்ளலாம் இதே எஸ்பிஐ 20,000 ரூபாய் முதல் 20 லட்சம் வரையில் வாங்கிக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. இதே வங்கி அல்லாத நிதி நிறுவனமான முத்தூர்ட் குறைந்தபட்சம் 1,500 ரூபாயிலிருந்து, அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

என்னென்ன ஆவணங்கள் தேவை?
முகவரி சான்றாக ஆதார் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பலவற்றையும் ஏற்றுக் கொள்கிறது.இதே அடையாள சான்றுக்காக பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களையும் கேட்கிறது. எனினும் சில வங்கிகள் கூடுதலாக சில ஆவணங்களையும் பெறலாம்.

எந்த வங்கி? எவ்வளவு வட்டி?
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் தங்க நகைக்கடனுக்கான வட்டி விகிதம் 7.50% வரை இருக்கும். இதன் செயல்பாட்டுக் கட்டணம் 0.50%, இந்தகட்டணம் குறைந்தபட்சம் 500 ரூபாய் வரும். இதனுடன் ஜிஎஸ்டியும் சேர்க்கப்படும்.
இதே பஞ்சாப் நேஷனல் வங்கியில் வட்டி விகிதமானது 8.75% ஆகும். செயல்பாட்டு கட்டணமாக கடன் அளவில் 0.70% + வரி விதிக்கிறது.

ஹெச்டிஎஃப்சி & ஐசிஐசிஐ வங்கியில் எவ்வளவு?
ஹெச்டிஎஃப்சி வங்கியில் இந்த நகைக்கடன் வட்டி விகிதமானது 11.99% ஆக உள்ளது. இதற்கு செயல்பாட்டு கட்டணம் 0.25% முதல் 1% ஆகும்.
ஐசிஐசிஐ வங்கியில் 10% வட்டி விகிதமாகும். இதற்கு செயல்பாட்டு கட்டணமாக உங்கள் கடன் அளவில் 1% ஆகும்.

ஆக்ஸிஸ் வங்கி & பாங்க் ஆப் பரோடா வங்கியில் வட்டி?
ஆக்ஸிஸ் வங்கியில் வட்டி விகிதமானது 13% ஆகும். இங்கு செயல்பாட்டு கட்டணமாக உங்கள் கடன் அளவில் 1% மும், இதனுடன் ஜிஎஸ்டி விகிதமும் வசூலிக்கப்படுகிறது.
கனரா வங்கியில் வட்டி விகிதம் 7.65% வசூலிக்கப்படுகிறது. இங்கு செயல்பாட்டு கட்டணமாக உங்கள் கடன் அளவில் 1% உள்ளது. இது குறைந்தபட்சம் 1000 ரூபாயும், அதிகபட்சமாக 5000 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் வட்டி
முத்தூர்ட் பைனான்ஸில் 11.99% வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது. செயல்பாட்டு கட்டணமாக 0.25% - 1% வசூலிக்கப்படுகிறது.
இதே மணப்புரம் பைனான்ஸில் அதிகபட்சமாக 12% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.
பின்கேர் ஸ்மால் பைனான்ஸ் பேங்கில் 12.99% வட்டி விமிதமும், செயல்பாட்டு கட்டணமாக 0.5% வரையும் வசூலிக்கப்படுகிறது.

அவசர காலத்திற்கு சிறந்த ஆப்சன்
நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான விரைவாக கடன் பெற வேண்டுமெனில், முதல் ஆப்சன் தங்க நகைக்கடனாகத் தான் இருக்கும். ஏனெனில் இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய வங்கியும் நகையின் மதிப்பில் 90% கடன் பெற முடியும் என தெரிவித்துள்ளது. எனினும் நீங்கள் கடன் வாங்கும் முன் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? எவ்வளவு செயல்பாட்டுக் கட்டணம் என்பதையும் தெரிந்து கொண்டு வாங்கினால் குறைந்த வட்டியில் கடன் பெற முடியும்.