யார் யாருக்கு எந்த மியூச்சுவல் ஃபண்ட் சிறந்தது? ஒரு பார்வை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது சிறந்த சேமிப்பு என்பதும் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த விழிப்புணர்வு தற்போது மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

ஆனால் அதே நேரத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்யும்போது யாருக்கு எந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் பொருத்தமாக இருக்கிறது என்பதை அறிந்து முதலீடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதில் உள்ள முழுப் பயன்களையும் பெற முடியாது.

குறைந்த கால முதலீடு, நீண்ட கால முதலீடு, மாதம்தோறும் வருமானம் தரும் முதலீடு என பல்வேறு வகைகள் மியூச்சுவல் ஃபண்ட்டில் இருக்கும் நிலையில் அதில் யார் யாருக்கு எந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் பொருத்தமாக இருக்கும் என்பதை தற்போது பார்ப்போம்.

மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் முதலில் ஒரு முதலீட்டாளர் தங்களுடைய முதலீட்டு நோக்கம் என்ன? எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க முடியும்? எவ்வளவு காலம் முதலீடு செய்ய முடியும்? என்பதை முதலில் நிதி ஆலோசகர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்

மியூச்சுவல் ஃபண்டில் நிலையான வருவாய் திட்டம், பேலன்ஸ்ட் ஃபண்ட் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் உள்ளன. அவற்றில் எந்த ஃபண்ட் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை முடிவு செய்ய வேண்டும். நீங்கள் ஓய்வு பெற்ற பின் ஒரு மிகப்பெரிய தொகையை பெற வேண்டும் என்று விரும்பினால் அதே நேரத்தில் ரிஸ்க் எடுக்கவும் தயார் என்றால் உங்களுக்கு ஈக்விட்டி திட்டம் அல்லது பேலன்ஸ்ட் ஃபண்ட் திட்டம் சரியானதாக இருக்கும்.

குறுகிய கால திட்டம்

குறுகிய கால திட்டம்

ஆனால் அதே நேரத்தில் ஒரு சில மாதங்களுக்கு மட்டுமே முதலீடு செய்துவிட்டு அந்த பணத்தை வேறு உபயோகத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கம் உங்களுக்கு இருந்தால் உங்களுக்கு லிக்விட் ஃபண்ட் ஏற்றதாக இருக்கும். ஒரு வேளை நீங்கள் ஒவ்வொரு மாதமும் வருவாய் தரக்கூடிய வகையில் முதலீடு செய்ய விரும்பினால் மாதாந்திர வருவாய் திட்டம் அல்லது இன்கம் ஃபண்ட் உங்களுக்கு பொருத்தமானதாக இருக்கும்.

முதலீட்டு முடிவு

முதலீட்டு முடிவு

எந்த வகையான மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலில் செய்ய வேண்டும் என்பதை முதலில் தீர்மானம் செய்து கொண்டு அதன் பின் அந்தத் திட்டத்தின் பொருந்தும் தன்மை, போர்ட்போலியோ விவரங்கள் ஆகியவற்றை தீர்மானத்து அதன் பின்னர் முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும்.

திட்ட தகவல் அறிக்கை

திட்ட தகவல் அறிக்கை

மேலும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் திட்ட தகவல் அறிக்கை மற்றும் முக்கியத் தகவல் ஆவணம் ஆகியவற்றை முழுமையாக படிக்கவேண்டும். இந்த இரண்டு ஆவணங்களையும் முதலீட்டாளர்கள் படிக்க வேண்டியது அவசியமானதாகும். உங்களுடைய முதலீட்டு நோக்கம் உள்பட பல்வேறு அம்சங்களை இந்த தகவலை படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 வருமானம்

வருமானம்

அனைத்து மியூச்சுவல் ஃபண்ட்களும் நல்ல வருவாய் கொடுக்கக் கூடியது என்றாலும் உங்களுக்கு ஏற்ற மியூச்சுவல் பண்ட் எது என்பதை முடிவு செய்து அதில் முதலீடு செய்தால் உங்களுடைய முதலீட்டுக்கு தகுந்த வருமானம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How do I know which fund is right for me?

We are seeing that mutual fund investment is the best savings and the awareness about mutual fund investment in India is increasing among the people. But at the same time, while investing in mutual funds, one should know which mutual fund scheme is suitable for whom to invest. Otherwise you will not be able to get the full benefits from it.
Story first published: Thursday, November 10, 2022, 7:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X