தேசிய ஓய்வூதிய திட்டத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய காலகட்டத்தில் பல தரப்பு மக்களுக்கும் உள்ள மிகப்பெரிய கவலையே, தங்களது ஓய்வுகாலத்தில் பென்ஷன் இல்லையே என்பது தான்.

 

அந்த கவலையை போக்கும் விதமாக மத்திய அரசு அஞ்சலகம் மூலம் பல திட்டங்களை வழங்கி வருகின்றது.

சம்பளம் முதல் பென்ஷன், EMI வரை ஆகஸ்ட் 1 முதல் வரும் முக்கிய மாற்றங்கள்.. RBI செய்த மாற்றம்..! சம்பளம் முதல் பென்ஷன், EMI வரை ஆகஸ்ட் 1 முதல் வரும் முக்கிய மாற்றங்கள்.. RBI செய்த மாற்றம்..!

அப்படியான திட்டங்களில் ஒன்று தான் நேஷனல் பென்ஷன் திட்டம். இந்த ஓய்வூதிய திட்டத்தினை, ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்காகவும் மத்திய அரசு வழங்கி வருகின்றது.

மக்களின் நலன்

மக்களின் நலன்

முதியோர்களின் நலனை கருத்தில் கொண்டு, பல அம்சங்களையும் சேர்த்து வழங்கும் ஒரு திட்டம் என்பிஎஸ். 2004ம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்காக தேசிய ஓய்வூதிய திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் இது பின்னர் 2009க்கு பிறகு தனியார் ஊழியர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள், இல்லதரசிகள் என அனைவரும் பயன்பெறும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. இந்த திட்டமானது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

யாரெல்லாம் இந்த திட்டத்தில் இணையலாம்

யாரெல்லாம் இந்த திட்டத்தில் இணையலாம்

அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தனி நபர்கள், ஏழை மக்கள் என அனைவருமே, அரசின் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும்.

பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கி வருகின்றன.

முழு தொகையும் பெறலாம்
 

முழு தொகையும் பெறலாம்

அரசின் இந்த என்பிஎஸ் திட்டத்தில் சமீபத்தில் பல புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றியில் முக்கியமானது எஸ்பிஎஸ் சந்தாதாரர் நிபந்தனைகளுக்கு உட்பட்டு முழு கார்பஸினையும் பெற முடியும். இது முன்னர் பென்ஷனை முழுவதும் ஒரே நேரத்தில் பெற முடியாது. இதில் 60% மட்டுமே திரும்ப பெற முடியும். 40% நீங்கள் வருடாந்திர திட்டத்தில் வைக்க வேண்டும். இதன் மூலம் மாதந்தோறும் உங்களுக்கு ஒரு வருமானமாக கிடைக்கும்.

நிபந்தனை உண்டு

நிபந்தனை உண்டு

எனினும் அவசர நிலை தவிர்த்து மற்ற காரணங்களுக்காக ஓய்வூதிய நிதியை எடுப்பதற்கு ஊக்குவிக்க கூடாது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கார்பஸ் 5 லட்சம் ரூபாய் வரை இருந்தால் மட்டுமே வருடாந்திரா ஓய்வூதிய திட்டத்தை பெறாமல், முழு தொகையையும் திரும்ப பெற முடியும்.

வயது அதிகரிப்பு

வயது அதிகரிப்பு

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் நுழைய அதிகபட்ச வயது 65 வயதாக இருந்த நிலையில், 70 வயதாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் முதிர்வு வயதும் 75 வயதாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதோடு அரசின் இந்த திட்டத்தில் பல வரி சலுகைகளும் உள்ளதால், முதிர்வு காலத்திற்கு ஏற்ற ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

பணத்தை முன் கூட்டியே திரும்ப பெறுதல்

பணத்தை முன் கூட்டியே திரும்ப பெறுதல்

NPS கணக்கில் இருந்து முதிர்வுக்கு முன்பே ஒரு தொகையை பெற முன்னதாக 1 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 2 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் முதலீட்டை தேர்வு செய்ய வாய்ப்புண்டு. எனினும் பங்கு சந்தையில் அதிகபட்ச வரம்பு என்பது 75% வரை உண்டு.

இதனையும் கொஞ்சம் கவனிங்க

இதனையும் கொஞ்சம் கவனிங்க

ஓய்வூதிய திட்ட முதலீட்டிலிருந்து ஒரு பகுதியை அவசரகால நிதியாக பெறுவது சாத்தியம் என்றாலும், ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து, மூன்றாண்டுகள் கழித்தே அவசரகால நிதியை பெறமுடியும். ஓய்வூதிய திட்டத்தில் முதிர்வு காலம் வரும் முன்னர், 3 முறை மட்டுமே அவசர கால நிதியை பெற முடியும். ஒவ்வொரு அவசரகால பெறுதல்களுக்கும் இடையில், குறைந்தது ஐந்தாண்டுகள் இடைவெளி அவசியமாகிறது. ஆனால், சிறப்பு மருத்துவ தேவைகளுக்கு இந்த விதி பொருந்தாது.

எதில்? எவ்வளவு?

எதில்? எவ்வளவு?

இந்த திட்டத்தில் உள்ள மற்றொரு சிறப்பம்சமே, இந்த திட்டத்தில் எதில் எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பதை நீங்களே தீர்மானிக்கலாம் என்பது தான். வழக்கமாக 75% வரையில் ஈக்விட்டியில் முதலீடு செய்யலாம். இதனால் இந்த திட்டமானது அரசின் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் இபிஎஃப்பினை சற்று வருவாய் அதிகம் பெற வாய்ப்புகள் அதிகம்.

முன்னதாக திட்டமிடுங்கள்

முன்னதாக திட்டமிடுங்கள்

ஆக நீங்கள் இளம் வயதிலேயே சேமிக்க தொடங்கினால் பெரும் தொகையை பெற முடியும். இதே உங்கள் வயதின் அடிப்படையில் இந்த தொகைகள் மாறுபடலாம். ஆக முடிந்த மட்டில் முன்னதாக திட்டமிட்டால், நாம் கணிசமான தொகையை நமது ஓய்வுகாலத்தில் பெற முடியும்.

இதனை பாருங்க

இதனை பாருங்க

அதோடு இந்த திட்டத்தில் நமக்கு ஏற்ற நேரத்தில் விரும்பிய தொகையை முதலீடு செய்யலாம். அதோடு இங்கு அதிகபட்ச வரம்பு இல்லை.

குடும்ப வணிகத்தினை செய்யும் கணவன் மனைவி இருவருமே இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இருவருமே தனித்தனியாக வரி சலுகைகளை பெற முடியும். ஆக இதில் செய்யப்படும் முதலீடு என்பது எதிர்கால நலனுக்காக உதவும். குறிப்பாக தொழிலை நடத்த முடியாத காலத்தில் மிகுந்த பாதுகாப்பாக இருக்கும். பெரிய தொகையினை முதலீடு செய்யும்போது மிகப்பெரிய அளவில் கார்ப்பஸினை பெறலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

National Pension System: 5 big benefits of NPS scheme that you should know

National Pension System becomes more investor friendly with the adapt of withdrawal rules.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X