இந்தியாவினை பொறுத்தவரையில் சிறுசேமிப்பில் அஞ்சலக சேமிப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது. மற்ற முதலீடுகளை விட இது பாதுகாப்பானதாகவும், வட்டி சற்று அதிகம் என்பதாலும் மக்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.
இந்த நிலையில் வரும் ஏப்ரல் 1 முதல், அஞ்சலக கணக்குகளிலும் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன.
ஆக ஏப்ரல் முதல் கவனிக்கதக்க ஒரு விஷயமாக உள்ளது. சரி அப்படி என்னென்ன? மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன. இது சாமனியர்களுக்கு எந்த மாதிரியான பாதிப்பினை ஏற்படுத்தும், வாருங்கள் பார்க்கலாம்.

அடிப்படை அஞ்சலக கணக்கில் என்ன மாற்றம்
இந்திய அஞ்சலகங்களில் உள்ள அடிப்படை சேமிப்பு கணக்கில் மாதத்திற்கு நான்கு முறை மட்டும், இனி இலவசமாக பணம் எடுக்க முடியும். அதன் பிறகு எடுக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் விதிக்கப்படலாம். இந்த கட்டணமானது 25 ரூபாய் அல்லது எவ்வளவும் பணம் எடுக்கிறீர்களோ அதில் 0.5% இருக்கலாம். எனினும் டெபாசிட்டுகளுக்கு எந்த கட்டணமும் இல்லை.

சேமிப்பு கணக்கு & நடப்பு கணக்கு
மாதத்திற்கு 25,000 ரூபாய் வரையில் பணம் எடுக்க எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. அதன் பிறகு எடுக்கப்படும் பணத்திற்கு கட்டணம் விதிக்கப்படும். இது ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் 25 ரூபாய் அல்லது எவ்வளவும் பணம் எடுக்கிறீர்களோ அதில் 0.5% இருக்கலாம். இந்த கணக்குகளில் டெபாசிட்டுகள் 10,000 ரூபாய் வரையில், எந்த கட்டணமும் இல்லை. அதன் பிறகு செய்யும் ஒவ்வொரு டெபாசிட்டுக்கும் 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படலாம். அல்லது டெபாசிட் தொகையில் 0.50% கட்டணமாக வசூலிக்கப்படலாம்.

AePS account charge
இந்திய அஞ்சல கணக்கின் மூலம் ஆதார மூலமான பரிவர்த்தனைகளை (AePS) செய்து கொள்ளலாம். இதில் எந்தவொரு வங்கி வாடிக்கையாளரும் தங்களது ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து பணம் பெறுதல், பிற வங்கிக் கணக்குகளுக்கு பணப்பரிமாற்றம் செய்தல், இருப்பு விசாரணை, மினி ஸ்டேட்மெண்ட் போன்ற இலவச சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

இனி இதற்கும் கட்டணம்
ஆனால் AePS கணக்கில் இதுவரையில் இலவச சேவைகளாக இருந்த நிலையில், தற்போது இதற்கும் கட்டணம் விதிக்கப்படவுள்ளது. IPPB நெட்வொர்க்குகளுக்கு இலவசமாக பரிவர்த்தனை செய்யலாம் என்றாலும், IPPB அல்லாத பரிவர்த்தனைகளில் மூன்று பரிவர்த்தனைகளுக்கு மட்டும் இலவசம். ஆக இதன் பிறகு கட்டணம் விதிக்கப்படும்.