SBI: உங்கள் முதலீடு ரிஸ்க் இல்லாமல் இருமடங்கு..எஸ்பிஐ-யின் திட்டங்களை பாருங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ கடந்த வாரம் அதன் வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதத்தினை அதிகரித்தது. இதன் மூலம் 2 கோடி ரூபாய்க்குள் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கலாம்.

தொடர்ந்து நடப்பு ஆண்டில் ஒன்றிற்கும் மேற்பட்ட முறை ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்த நிலையில், இது இனியும் அதிகரிக்கலாம் என என்ற நிலையே இருந்து வருகின்றது.

இதற்கிடையில் வங்கி வைப்பு நிதிகள் என்பது மிக சரியான வாய்ப்பு எனலாம். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, மூத்த குடி மக்களுக்கும் வட்டி விகிதத்தினை கூடுதலாக 50 அடிப்படை புள்ளிகள் கொடுத்து வருகின்றது. இது மேற்கொண்டு வாடிக்கையாளார்களை ஈர்க்கலாம்.

3 மாதத்தில் 400 டன் தங்கம்.. யாரு சாமி நீ..! 3 மாதத்தில் 400 டன் தங்கம்.. யாரு சாமி நீ..!

எவ்வளவு வட்டி?

எவ்வளவு வட்டி?

எஸ்பிஐ-யின் சமீபத்திய அறிக்கையின் படி, நீங்கள் ரிஸ்க் எடுக்காமல் உங்கள் முதலீட்டின் மூலம் அதிக லாபம் பெறலாம். இதன் மூலம் ரெகுலர் வாடிக்கையாளர்கள் 6.75 வரையில் வட்டி விகிதத்தினை பெறலாம். இதே மூத்த குடி மக்கள் 7.25% வரையில் வட்டி விகிதத்தினை பெறலாம். இது 10 ஆண்டுகள் வரையிலான திட்டத்திற்கு பெற முடியும்.

விதி 72

விதி 72

பல முதலீட்டாளர்களும் விதி 72 பற்றி அறிந்திருக்கலாம். இந்த விதியின் மூலம் உங்கள் முதலீடு எத்தனை ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரிக்கும். உதாரணத்திற்கு உங்கள் முதலீட்டிற்கு 9% வட்டி என வைத்துக் கொள்வோம். 72/9=8 ஆண்டுகள். இது தான் உங்கள் முதலீடு இருமடங்காக அதிகரிக்க 8 ஆண்டுகள் ஆகும்.

எஸ்பிஐ ரெகுலர் டெபாசிட்

எஸ்பிஐ ரெகுலர் டெபாசிட்

எஸ்பிஐ-யின் சில்லறை முதலீட்டாளர்களுக்கு வருடத்திற்கு, 6.75% வட்டி விகிதம் கிடைக்கும். இதன் மூலம் 72/6.75= 10.6 ஆண்டுகளில் உங்களது முதலீடானது இரு மடங்காக அதிகரிக்கலாம்.

மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம்

மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம்

வருடாந்திர திட்டத்தில் மூத்த குடி மக்கள் திட்டத்தில் வட்டி விகிதம் 7.25% ஆக அதிகரித்துள்ளது. இது சாதாரண மக்களுக்கு கிடைக்கும் வட்டி விகிதத்தினை விட 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம். இதில் விதி 72 -ன் மூலம் கணக்கிட்டால், 72/7.25=9.9 ஆண்டுகளில் உங்கள் முதலீடு இரு மடங்காக அதிகரிக்கலாம்.

எஸ்பிஐ வீகேர்

எஸ்பிஐ வீகேர்

எஸ்பிஐ வீகேர் திட்டத்தில் மூத்த குடி மக்களுக்கு சில்லறை டெபாசிட் திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு கிடைக்கும் 50 அடிப்படை புள்ளிகளுடன், கூடுதலாக 50 அடிப்படை புள்ளிகளுடன் மொத்தம் 100 அடிப்படை புள்ளிகள் கிடைக்கலாம். இந்த எஸ்பிஐ வீகேர் டெபாசிட் திட்டம் மார்ச் 31, 2023 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கனரா வங்கி

கனரா வங்கி

கனரா வங்கியின் 666 நாட்கள் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பொது வாடிக்கையாளார்கள் 7.25% ஆக கிடைக்கலாம். இதே மூத்த குடிமக்களுக்கு 7.5% வரையில் வட்டி கிடைக்கலாம்.

உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி & ஆர்பிஎல் வங்கி

உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி & ஆர்பிஎல் வங்கி

இந்த வங்கி 700 நாட்களுக்கான திட்டத்திற்கு 8.50% வட்டி விகிதம் கிடைக்கலாம்.

இதே ஆர்பிஎல் வங்கியில் 725 நாட்களுக்கான திட்டத்தில் வட்டி விகிதம் 7.75% வட்டி கிடைக்கலாம். இதில் பொதுமக்களுக்கான வட்டி விகிதம் 7.25% ஆகவும், மூத்த குடிமக்களுக்கு 7.75% ஆகவும் வட்டி விகிதம் கிடைக்கலாம். இது 2 கோடி ரூபாய்க்குள்ளான டெபாசிட் திட்டங்களுக்கு இந்த வட்டி விகிதம் பொருந்தும்.

யூனியன் பேங்க் ஆப் இந்தியா & ஐடிஎஃப்சி வங்கி

யூனியன் பேங்க் ஆப் இந்தியா & ஐடிஎஃப்சி வங்கி

யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் 599 நாட்களுக்கான டெபாசிட் திட்டத்தில், வட்டி விகிதம் 7% வரையில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கியில் 750 நாட்கள் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு, 7.25% வட்டி கிடைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI Deposit scheme: tips to double your money:check latest rates here

SBI last week increased the interest rate on its deposit funds, Investors investing up to Rs 2 crore can get a good opportunity through this.
Story first published: Monday, December 19, 2022, 22:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X