SIP:ரூ.5000 முதலீட்டில் ரூ.2 கோடி சாத்தியமா.. சாமானியர்களும் கோடீஸ்வரர் ஆக முடியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக முதலீடு, அதுவும் நீண்டகால முதலீடாக நிபுணர்கள் பரிந்துரை செய்வது மியூச்சுவல் ஃபண்டுகள். அந்த மியூச்சுவல் பண்டுகளில் மொத்தமாக முதலீடு செய்வதை விட மாத மாதம் எஸ் ஐ பி மூலம் முதலீடு செய்வது சிறந்த ஆப்சனாக பார்க்கப்படுகிறது.

 

அப்படி மாதந்தோறும் முதலீடு செய்து நீண்டகாலம் கழித்து பார்க்கும்போது, அது மிகப்பெரிய கார்பஸினை உருவாக்க முடியும் எனலாம்.

அப்படி 5000 ரூபாய் மாத மாதம் முதலீடு செய்வதன் மூலம் 2 கோடி ரூபாய் கார்ப்பஸினை உருவாக்க முடியுமா? வாருங்கள் பார்க்கலாம்.

எங்களுக்கேவா.. மீண்டும் எண்ணெயை ஆயுதமாக்கும் ரஷ்யா.. அச்சத்தில் உலக நாடுகள்.. இனி விலை? எங்களுக்கேவா.. மீண்டும் எண்ணெயை ஆயுதமாக்கும் ரஷ்யா.. அச்சத்தில் உலக நாடுகள்.. இனி விலை?

மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்

 

எனினும் இவ்வளவு பெரிய கார்ப்பஸினை உருவாக்க சரியான ஃபண்டினை தேர்வு செய்வது மிக அவசியமானது எனலாம். அப்படி நாம் இன்று பார்க்கும் முதல் ஃபண்ட் இன்டெக்ஸ் பண்டுகள்.

பொதுவாக இன்டெக்ஸ் பண்டுகள் என்பது பிரபலமான சந்தை குறியீடுகளைப் பிரதிபலிக்கும் ஃபண்டாகும். பொதுவாக பங்கு சந்தையில் நாம் முதலீடு செய்யும்போது நாம் ஒரு நிறுவனத்தினை தேர்வு செய்து முதலீடு செய்வோம். அதுவும் லாபத்தில் முடிந்தால் பரவாயில்லை. நஷ்டம் கண்டால் அது மோசமான ஒரு பாதிப்பாக இருக்கும். ஆனால் அப்படி நினைப்பவர்களுக்கு இன்டெக்ஸ் ஃபண்டுகள் சரியான ஆப்சன் எனலாம்.

நிஃப்டி 50

நிஃப்டி 50

உதாரணத்திற்கு நிஃப்டி 50-யில் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். அதில் உள்ள சிறந்த 50 நிறுவனங்களில் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்வது எப்படி, அல்லது உங்களது முதலீட்டினை இந்த 50 பங்குகளிலும் பிரித்து செய்யும் முதலீடு எப்படியிருக்கும் என்பதை யோசித்து பாருங்கள். இதில் சராசரியாக லாபம் என்பது ஓரளவு இருக்கும். நீங்கள் வாங்கும் 50 நிறுவனங்களில் 10 நிறுவனங்கள் சரிந்தாலும் 40 நிறுவனங்கள் அதனை சரிகட்டும். ஆக உங்களுக்கு நஷ்டம் என்பது குறையும். ஆக முதலீட்டாளர்கள் அதனை சரியாக தேர்வு செய்து முதலீடு செய்ய வேண்டும்.

மாதம் ரூ.5000 முதலீடு
 

மாதம் ரூ.5000 முதலீடு

ஆக நீங்கள் சரியானதொரு பண்டினை தேர்வு செய்தால், இது மிகப்பெரியதொரு கார்ப்பஸினை உருவாக்க முடியும்.

உதாரணத்திற்கு மாதம் 5000 ரூபாய் முதலீட்டினை 30 ஆண்டுகள் முதலீடு செய்யும்போது, 12% வருமானம் என்று வைத்துக் கொள்ள வேண்டுமானால் 1,76,49,568.87 ரூபாயாக இருக்கும். இதில் உங்களது முதலீடு மொத்தம் 18,00,000 ரூபாயாக இருக்கும். இங்கு வருமானம் 1,58,49,568.87 ரூபாயாக இருக்கும்.

ரூ.2 கோடி எப்படி?

ரூ.2 கோடி எப்படி?

இந்த வருமானம் என்பது வருடத்திற்கு வருடம் இன்னும் அதிகரிக்கலாம். ஆக உங்கள் வருமானம் அதிகரிக்க உங்கள் முதலீட்டினை அதிகரிக்க வேண்டும். அப்படி அதிகரிக்கும்போது எளிதாக 2 கோடி ரூபாய் என்பதை எளிதில் அடைய முடியும்.

அடிக்கடி செக் செய்து கொள்ளுங்கள்

அடிக்கடி செக் செய்து கொள்ளுங்கள்

நான் மாத மாதம் 5000 ரூபாய் முதலீடு செய்துவிட்டேன். இதோடு என் வேலை முடிந்து விட்டதா எனில், நிச்சயம் இல்லை. அடிக்கடி உங்களது போர்ட்போலியோவினை செக் செய்து கொள்ளுங்கள். ஒரே பங்கினில் முதலீடு செய்யாமல், பிரித்து பல்வேறு பங்குகளில் முதலீடு செய்யலாம். அதோடு இடையில் நிறுத்தாமல் முதலீடு செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் வருமானம் அதிகரிக்க அதிகரிக்க, உங்கள் முதலீட்டினை அதிகரிக்க வேண்டும்.

மெடிக்கல் இன்சூரன்ஸ்

மெடிக்கல் இன்சூரன்ஸ்

மேலும் முதலீடு செய்தால் மட்டும் போதாது. அவசர தேவைக்கு உதவும் மெடிக்கல் இன்சூரன்ஸ் திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும். இது மேற்கொண்டு அவசர காலகங்களில் உங்களுக்கு உதவும். இதன் மூலம் பெரியளவிலான திடீர் செலவுகளில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SIP: Can I reach the target of Rs 2 crore by investing Rs 5000 per month in mutual fund?

By investing Rs.5000 per month in mutual fund, can you reach the target of Rs.2 crore?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X