முதலீடு என்றாலே நமக்கெல்லாம் ஞாபகத்திற்கு வருவது வங்கி டெபாசிட் தான். ஆனால் அதனையும் தாண்டி பல லாபகரமான முதலீட்டு திட்டங்கள் உள்ளன.
அது அரசின் பாதுக்காப்பு திட்டங்களாக இருந்தால் உண்மையில் வரவேற்கதக்க நல்ல விஷயமே.
சரி அப்படி என்னென்ன திட்டங்கள் உள்ளன. அவை எவ்வளவு வருமானம் கொடுக்கின்றன? வாருங்கள் பார்க்கலாம்.

என்னென்ன சேமிப்பு திட்டங்கள்
ஸ்மால் பைனான்ஸ் பேங்க் பிக்ஸட் டெபாசிட், போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட், தேசிய சேமிப்பு பத்திரம், கிஷான் விகாஸ் பத்திரம், கார்ப்பரேட் பிக்ஸட் டெபாசிட் உள்ளிட்டவற்றை பற்றித் தான் நாம் இன்று பார்க்கவிருக்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக வட்டி விகிதம் குறைந்து வரும் நிலையில், 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட்டி விகிதம் குறைவாவே உள்ளது. இதன் காரணமாக வங்கிகள் பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு கொடுக்கும் விகிதமும் குறைந்துள்ளது.

வங்கி வட்டியை விட அதிகம்
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 2.9% - 5.4% தான் பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதத்தினை கொடுத்து வருகின்றது. ஆக வட்டியை நம்பித் தான் வாழும் மூத்த குடிமக்கள் மற்றும் சிலருக்கு இது நல்ல விஷயமே அல்லது. ஆக அப்படியானவர்களுக்கு, மாற்று திட்டங்களாக கூட , நாம் இன்று பார்க்கவிருக்கும் சிறு சேமிப்பு திட்டங்கள் இருக்கலாம்.

ஸ்மால் பைனான்ஸ் பேங்க் பிக்ஸட் டெபாசிட்
வங்கிகளில் வட்டி விகிதம் குறைந்து வந்தாலும், ஸ்மால் பைனான்ஸ்களில் வட்டி விகிதம் ஓரளவுக்கு இருந்து வருகிறது. இது சூர்யோதயா ஸ்மால் பைனான்ஸ், உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி, நார்த் ஈஸ்ட் ஸ்மால் பைனான்ஸ் உள்ளிட்ட சில சிறு சேமிப்புகள் 7 - 8.5% வரை லாபத்தினை கொடுத்து வருகின்றன. இதே மூத்த குடி மக்களுக்கு 9% வரையில் வட்டி கிடைக்கின்றது. ஆக வங்கி டெபாட்சிட்டுகளை விட இங்கு வட்டி அதிகம்.

போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்
போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்டுகளில் 6.7% வரை வட்டி கிடைக்கின்றது. இது மிக பாதுகாப்பான ஒரு முதலீடாகவும் சேமிப்பாகவும் பார்க்கப்படுகிறது. இங்கு 1, 2, 3, 5 வருடங்கள் வரை டைம் டெபாசிட் உண்டு. 5 வருட டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது பிரிவு 80சி கீழ் வை விலக்கும் உண்டு. அதே போல இந்த திட்டங்களுக்கு ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறையும் அரசு வட்டி விகிதத்தினை மாற்றியமைக்கிறது. எனினும் வருடத்திற்கு ஒருமுறை தான் வாடிக்கையாளர்களுக்கு பலன் வழங்கப்படுகிறது.

அரசின் தேசிய சேமிப்பு பத்திரம்
என்.எஸ்.சி. எனப்படும் தேசிய சேமிப்பு பத்திர திட்டம்(National Savings Certificate), நாட்டில் உள்ள அனைத்து அஞ்சலகத்திலும் பெறக்கூடிய திட்டமாகும். இது ஒரு நிலையான வருமானத்தை தரக்கூடிய சிறு சேமிப்பு முதலீட்டு திட்டமாகும். தேசிய சேமிப்பு பத்திரம் என்பது பாதுகாப்பான மற்றும் அதே வேளையில் ரிஸ்க் குறைவாக கொண்ட திட்டமாக கருதப்படுகிறது.

அரசின் கிசான் விகாஸ் பத்திரம்
இந்திய தபால் துறையில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்களில், மிக முக்கியமான திட்டம் கிசான் விகாஸ் பத்திரம். சிறு முதலீட்டாளர்களுக்கு மிகவும் லாபகரமான மற்றும் பாதுகாப்பான ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் சேமிக்க விரும்புவர்கள் குறைந்தபட்சம், ஆயிரம் ரூபாய் முதல் முதலீடு செய்து கொள்ளலாம். அதிகபட்ச முதலீடு என இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் 50,000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால், உங்களது பான் கார்டு கொடுக்கப்படலாம். இதே 10 லட்சம் மற்றும் அதற்கு மேல் நீங்கள் முதலீடு செய்யும் போது உங்களது வருமானத்திற்கான ஆவணத்தினை (சம்பளம் சர்டிபிகேட்) கொடுக்க வேண்டும். நீங்கள் முதலீடு செய்யும் தொகையானது 124 மாதங்கள், அதாவது 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் கழித்து நீங்கள் செய்யப்படும் தொகை இரட்டிப்பாகிறது.
18 வயது பூர்த்தியடைந்த எந்த ஒரு இந்தியக் குடிமகனும் இந்த திட்டத்தில் சேமிக்கத் தகுதி பெற்றவர்கள் தான். இடில் தற்போது 6.9% வரை வருமானம் கொடுத்து கொண்டுள்ளது.

கார்ப்பரேட் பிக்ஸட் டெபாசிட்
வங்கி டெபாசிட்டுகளுக்கு மாற்றாக இந்த கார்ப்பரேட் பிக்ஸட் டெபாசிட்டுகள் உள்ளன. இந்த டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் வங்கியில் கொடுப்படுவதை விட அதிகம். இதன் மூலம் வருடத்திற்கு 7 - 8% வருவாய் கிடைக்கின்றது. ஆக நல்ல லாபம் கொடுத்த நல்ல விஷயம் தானே.