அஞ்சலகத்தில் இப்படி கூட திட்டங்கள் இருக்கின்றனவா.. கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவினை பொறுத்த வரையில் பல வகையான முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், அவற்றில் மக்கள் மத்தியில் இன்றும் அதிகம் விரும்பப்படும் திட்டங்கள் அஞ்சலக திட்டங்கள் தான்.

எனினும் இன்று வரையில் இதில் எத்தனை திட்டங்கள் உள்ளன. இதில் என்னென்ன பலன் கிடைக்கும்? எந்த திட்டம் யாருக்கு உகந்தது என பலருக்கும் தெரிவதில்லை.

இந்த 10 பங்குகளை வாங்கி போடுங்க.. தீபாவளி முதலீட்டு வாய்ப்பு! இந்த 10 பங்குகளை வாங்கி போடுங்க.. தீபாவளி முதலீட்டு வாய்ப்பு!

அஞ்சலக தொடக்கம்

அஞ்சலக தொடக்கம்

இந்தியாவில் முதன் முதலாக பிரிடிஷ் ஆட்சியில் 1854ம் ஆண்டு தொடங்கப்பட்ட அஞ்சலகம், ஆரம்பத்தில் ஒரு டெலிவரி மெயில் போலத் தான் தொடங்கப்பட்டது. எனினும் பின்னாளில் மக்களுக்கு நிதி சேவைகள் வழங்கவும் தொடங்கப்பட்டது. இன்று வங்கிகளுக்கு இணையாக வங்கி சேவைகள், முதலீட்டு நிறுவனங்களை விஞ்சும் அளவுக்கு முதலீட்டு திட்டங்கள், இன்சூரன்ஸ் திட்டங்கள் என பல வடிவிலும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது.

அஞ்சலகத்தின் சேமிப்பு கணக்கு

அஞ்சலகத்தின் சேமிப்பு கணக்கு

வங்கி சேமிப்பு கணக்குகளை போன்றே அஞ்சலகத்தின் சேமிப்பு கணக்கும் செயல்பட்டு வருகின்றது. வங்கிகளை போன்றே இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் டிரான்ஸ்பர் செய்து கொள்ளலாம். இந்த சேமிப்பு கணக்கிற்கு வட்டி விகிதம் 4% கிடைக்கிறது. குறைந்தபட்சம் 500 ரூபாயில் இருந்து சேமித்துக் கொள்ளலாம். இதில் அதிகபட்ச வரம்பு கிடையாது. இதில் குழந்தைகளுக்கும் பெரியவர்களுடன் இணைந்து தொடங்கிக் கொள்ளலாம். இதில் ரூ.10,000 வரையில் வரி கிடையாது.

அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி

அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி

அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி திட்டமானது வங்கிகளில் உள்ளது போன்றே செயல்பட்டாலும், வங்கியினை விட அஞ்சலகத்தில் வட்டி விகிதம் அதிகம். இதில் அதிகபட்சம் 5.8% வட்டி கிடைக்கிறது. இதில் குறைந்தபட்சம் 100 ருபாய் இருந்து டெபாசிட் செய்யலாம். இதிலும் அதிகபட்ச வரம்பு என்பது கிடையாது. இதிலும் தனியாகவும், குழந்தைகளுடன் இணைந்தும் தொடங்கிக் கொள்ளலாம்.

அஞ்சலகத்தின் டைம் டெபாசிட்

அஞ்சலகத்தின் டைம் டெபாசிட்

அஞ்சலகத்தின் டைம் டெபாசிட் திட்டத்தில் 5.5% - 6.7%ல் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதில் 1000 ரூபாய் குறைந்தபட்சம் முதலீடு செய்து கொள்ளலாம். இதில் அதிகபட்ச வரம்பு கிடையாது. இந்த திட்டத்திலும் வரி சலுகை உண்டு.

அஞ்சலகத்தின் மாதாந்திர வருவாய் திட்டம்

அஞ்சலகத்தின் மாதாந்திர வருவாய் திட்டம்

அஞ்சலகத்தின் மாதாந்திர வருவாய் திட்டம் இது தனியார் துறை ஊழியர்கள், பெண்கள், தங்களது வயதான காலகட்டத்தில் ஒரு வருமானம் வேண்டுமென நினைக்கும் மூத்த குடிமக்கள், பெண்கள் என அனைவருக்கும் பொருந்தும். இது மாத மாதம் வருமானம் கிடைக்கும் ஒரு முதலீட்டு திட்டமாகும்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் என்பது 60 வயதிற்கு மேல் உள்ள மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பான ஒரு திட்டமாக உள்ளது. இதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதனை மேற்கொண்டு 3 ஆண்டுகள் நீட்டித்துக் கொள்ள முடியும். இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.4% ஆகும். இதில் குறைந்தபட்சம் 1000 முதலீடு செய்து கொள்ளலாம். அதிகபட்ச வரம்பு என்பது 15 லட்ச வரம்பு என்பது கிடையாது. இதில் 60 வயதுக்கு மேற்பட்ட ஒய்வுபெற்றவர்கள், 50 வயதுக்கு மேல் வி ஆர் எஸ் வாங்கியவர்கள் பயன் பெறலாம். இதில் வரிச்சலுகையும் உண்டு.

பொது வருங்கால வைப்பு நிதி

பொது வருங்கால வைப்பு நிதி

அஞ்சலகத் திட்டங்கள் பலரும் விரும்புவது பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தினை தான். இதில் வட்டி விகித, 7.1% கிடைகிறது. இதில் வருடத்திற்கு அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்து கொள்ளலாம். இதே குறைந்தபட்சம் 500 ருபாய் முதலீடு செய்து கொள்ளலாம். இதில் தனி நபர் மற்றும் குழந்தைகள் பெயரிலும் தொடங்கிக் கொள்ளலாம். இது நீண்டகால முதலீட்டு திட்டங்களில் சிறந்த திட்டமாக பார்க்கப்படுகிறது.

தேசிய சேமிப்பு பத்திரம்

தேசிய சேமிப்பு பத்திரம்

நிரந்த வருமானம் தரக் கூடிய முதலீடு திட்டங்களில் இதுவும் ஒன்று. இது சிறு மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் விரும்பும் ஒரு முதலீட்டு திட்டமாகவும் உள்ளது. இதில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்து கொள்ளலாம். அதிகபட்ச வரம்பு என்பது கிடையாது. இதில் முதலீடுகளுக்கு வரி சலுகையும் கிடைக்கும்.

கிசான் விகாஸ் பத்திரம்

கிசான் விகாஸ் பத்திரம்

கிசான் விகாஸ் பத்திரத்திற்கு இன்றைய நாளில் 6.9% வட்டி விகிதம் கிடைக்கும். இதில் அதிகபட்ச வரம்பு என்பது கிடையாது. குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்து கொள்ளலாம். இதனை குழந்தைகளுடன் இணைந்தும், தனியாகவும் இணைந்து கொள்ளலாம்.

சுகன்யா சம்ரிதி திட்டம்

சுகன்யா சம்ரிதி திட்டம்

பெண் குழந்தைகளுக்கான பிரதேயேக திட்டமான சுகன்யா சும்ரிதி திட்டம், அவர்களின் எதிர்கால நலன் கருதி உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தில் மூலதனத்திற்கு வரிச்சலுகை உண்டு. கல்வி மற்றும் திருமண செலவினங்களுக்காக முதலீடு செய்து கொள்ளலாம். இதற்கு வட்டி விகிதம் 7.6% ஆகும். இதில் குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் அதிகபட்சம் ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம்.

என்னென்ன ஆவணங்கள் தேவை?

என்னென்ன ஆவணங்கள் தேவை?

மேற்கண்ட திட்டங்களில் இணைய எந்த திட்டத்தில் இணைய திட்டமோ அதற்கான பார்ம், கே ஓய் சி, பான் கார்டு, ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை., ஜாப் கார்டு, குழந்தையின் பிறப்பு சான்றிதழ் என அனைத்தும் தேவைப்படும்.

அஞ்சலக சேமிப்பு கணக்கு எப்படி?

அஞ்சலக சேமிப்பு கணக்கு எப்படி?

அஞ்சலகம் சென்று அதற்கான பார்ம் மற்றும் தேவையான ஆவணங்களை கொடுத்து (KYC) கணக்கினை தொடங்கிக் கொள்ளலாம்.

இதனை தொடங்கிய பிறகு தேவையான திட்டத்தினை தொடங்கிக் கொள்ள முடியும். இதனை எளிதில் தொடங்கிக் கொள்ள முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

types of post office savings schemes and its benefits: how to open it?

Post office schemes are still the most popular schemes in India. What are the plans?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X