மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் சில தவணைகளை கட்ட தவறினால் என்ன ஆகும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

 

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த விழிப்புணர்வு பொது மக்களிடையே அதிகரித்து வருவதால் மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்யப்படும் தொகையும் அதிகரித்து வருகிறது.

பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட முதலீடுகளை விட மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் அதிக வருமானம் மற்றும் பாதுகாப்பு அதிகமாக இருப்பதால் இதில் அதிகம் முதலீடு செய்வதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

மியூச்சுவல் ஃபண்ட் பணத்தை எவ்வாறு வெளியே எடுப்பது எப்படி? எவ்வளவு கட்டணங்கள்? மியூச்சுவல் ஃபண்ட் பணத்தை எவ்வாறு வெளியே எடுப்பது எப்படி? எவ்வளவு கட்டணங்கள்?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது வழக்கமான முதலீடு மற்றும் ஒட்டு மொத்த தொகை முதலீடு என இரு வகைகளில் முதலீடு செய்ய முடியும் என்பது தெரிந்ததே. பல பொருளாதார வல்லுனர்கள் எஸ்.ஐ.பி என்று கூறப்படும் மாதாந்திர தவணை முறையில் முதலீடு செய்யும் முறையை பரிந்துரை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஐ.பி முதலீடு

எஸ்.ஐ.பி முதலீடு

மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீட்டு முறையில் ஆரம்ப காலத்திலேயே நீங்கள் எத்தனை வருடம் முதலீடு செய்யப் போகிறீர்கள் என்பதை தேர்ந்தெடுத்து கொண்டு அதன்படி தினசரி, வாரம், மாதம் ஆகிய ஏதாவது ஒரு வழியில் பணத்தை செலுத்துவதற்கான வசதியை தேர்வு செய்து கொள்ளலாம்.

தவணை செலுத்தும் முறை
 

தவணை செலுத்தும் முறை

மியூச்சுவல் ஃபண்ட் மாதத்தவணையை ஆட்டோமேஷனை பின்தேதியிட்ட காசோலைகள், வங்கிக் கணக்கில் இருந்து ஆட்டோ டெபிட் (மின்னணுப் பற்று), டைரக்ட் டெபிட் (நேரடிப் பற்று), NACH (நேஷனல் ஆட்டோமேட்டட் கிளியரிங் ஹவுஸ்) ஆகிய வழிகளில் தவணை தொகையை செலுத்தலாம். ஆட்டோ டெபிட் செயலாக்கத்தை செய்வதற்காக சம்பந்தப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்களில் இதற்கான விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் போதும்.

ஆட்டோமேட்டிக் முதலீடு

ஆட்டோமேட்டிக் முதலீடு

இதனை அடுத்து ஒவ்வொரு மாதமும் நீங்கள் பணத்தை நேரடியாக சென்று செலுத்துவது அல்லது ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதும் உங்கள் வங்கி கணக்கில் இருந்து ஆட்டோமேட்டிக்காக பணம் முதலீடு வகைக்காக கழித்துக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 தவணை கட்ட முடியாவிட்டால்?

தவணை கட்ட முடியாவிட்டால்?

இந்த நிலையில் ஒரு சில பொருளாதார நெருக்கடிகள் காரணமாக ஒன்று அல்லது இரண்டு அல்லது சில தவணைகள் செலுத்த தவறினால் என்ன ஆகும் என்பது பல முதலீட்டாளர்களின் கேள்வியாக உள்ளது. பணம் கட்ட முடியாத நிலை ஏற்பட்டால் உடனடியாக பின் தேதியிட்ட காசோலைகளை நிறுத்தும் வசதி உள்ளது. மேலும் ஒரு சில மாதங்கள் தவணைத்தொகை கட்ட முடியாது என்ற நிலை ஏற்பட்டால் உங்கள் வங்கி கணக்கிலிருந்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்காக ஆட்டோடெபிட் செய்வதை நிறுத்திக் கொள்ளலாம். இதற்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என்பதும் உங்களுடைய முதலீடு திட்டமும் எந்தவகையிலும் பாதிக்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மீண்டும் தொடரலாம்

மீண்டும் தொடரலாம்

அதேபோல் ஒன்று அல்லது ஒருசில மாதங்கள் தவணைத்தொகை கட்டாவிட்டாலும் உங்கள் முதலீடுக்கு எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாது என்பதும் மீண்டும் உங்கள் பொருளாதார நிலை சீரடையும் போது நீங்கள் தொடர்ச்சியாக எஸ்ஐபியை தொடர முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ஒருசில தவணை கட்ட முடியாவிட்டாலும் முதலீட்டாளர்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்பதை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What will the Mutual Funds do, if some instalments are missed?

Mutual fund SIP allows disciplined and regular investing into mutual funds. So, while you plan your long term financial goals through mutual fund SIP investing, there may be times when you are not able to contribute to the Mutual Fund SIP installment
Story first published: Wednesday, October 12, 2022, 7:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X