தேசிய ஓய்வூதிய திட்டத்தை நிர்வகிப்பது யார்?

Posted By:
Subscribe to GoodReturns Tamil

சென்னை: இந்திய அரசால் அமைக்கப்பட்டிருக்கும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎப்ஆர்டிஎ) என்ற அமைப்பு தான் தேசிய ஓய்வூதிய திட்டத்தை (என்பிஎஸ்) உருவாக்கியது. ஓய்வூதிய திட்டத்தை முறைப்படுத்தி அவற்றில் மாற்றம் கொண்டு வருவதும் இந்த பிஎப்ஆர்டிஎ அமைப்பு தான்.

இந்த அமைப்பில் தவறாது பணத்தை முதலீடு செய்து வந்தால் பணியிலிருந்து ஓய்வு பெறும்போது மிகப் பெரிய தொகை கைக்குக் கிடைக்கும். அதுபோல் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்கும்.

மற்ற ஓய்வுகால நிதி அமைப்புகளைவிட இந்த பிஎப்ஆர்டிஎ அமைப்பில் முதலீடு செய்வது மிகவும் மலிவாக இருக்கும். மேலும் இதில் பண பரிமாற்றம் செய்வதும் மிக எளிதாக இருக்கும். அதோடு நிறுவனம் மற்றும் அதன் பணியாளர்கள் ஆகிய இருவரும் முதலீடு செய்யலாம். அதன் மூலம் அவர்கள் வரியை சேமிக்க முடியும். ஆனால் முதலீட்டின் முதிர்வில் பணத்தைத் திரும்பப் பெறும்போது அந்த தொகைக்கு வட்டி செலுத்த வேண்டும். ஆனால் பரஸ்பர நிதியோடு ஒப்பிடுகையில் இந்த திட்டத்தில் நாம் விரும்பும் வகையில் பணத்தை எடுக்க முடியாது.

தேசிய ஓய்வூதிய திட்டத்தை நிர்வாகம் செய்ய 6 நிதி மேலாளர்களை மத்திய அரசு நியமனம் செய்திருக்கிறது. இவர்கள் ஓய்வூதிய நிதியை முதலீடு செய்து அதன் மூலம் அந்த முதலீட்டில் வருமானத்தையும் உருவாக்குகின்றனர்.

யார் அந்த 6 நிதி மேலாளர்கள்?

1. எல்ஐசி பென்ஷன் பண்ட் லிமிடெட்

மாத வருமானம் பெறும் பணியில் இருப்பவர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் தங்கள் பணிக்காலத்தில் முதலீடு செய்வதன் மூலம் அவர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும் போது ஒரு குறிப்பிட்ட தொகையை திரும்பப் பெற்று மீதி தொகைய அவர்களின் முதுமைக் காலத்தில் பயன்படுத்திக் கொள்ள எல்ஐசி பென்ஷன் பண்ட் லிமிடெட் உதவி செய்கிறது.

2. எஸ்பிஐ பென்ஷன் பண்ட்ஸ்

எஸ்பிஐ பென்ஷன் பண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (எஸ்பிஐபிஎப்பிஎல்) என்ற இந்த அமைப்பையும் மத்திய அரசு ஒரு ஓய்வூதிய நிதி மேலாளராக நியமித்திருக்கிறது. இந்த அமைப்பு சிட்டிசன் பென்ஷன் ஸ்கீமை மேலாண்மை செய்கிறது.

3. யுடிஐ ரிட்டையர்மென்ட் சொலுஷன்ஸ்

யுடிஐ ரிட்டையர்மென்ட் சொலுஷன்ஸ் லிமிடெட் (யுடிஐ ஆர்எஸ்எல்) என்ற அமைப்பு, இந்திய டிரஸ்ட் சட்டம் 1882ன்படி போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் ஆஃப் த நியூ பென்ஷன் சிஸ்டம் டிரஸ்ட் அமைப்பின் வழிகாட்டுதலோடு ஓய்வூதிய நிதியை நிர்வாகம் செய்கிறது.

4. ஐசிஐசிஐ புருடன்ஷியல் பென்ஷன் பண்ட்ஸ் மேனேஜ்மென்ட்

இந்த அமைப்பானது, புதிய ஓய்வூதிய திட்டம்(நியூ பென்ஷன் ஸ்கீம் (என்பிஎஸ்) என்ற திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் இந்திய குடிமக்களிடமிருந்து திரட்டும் நிதியை நிர்வாகம் செய்கிறது.

5. கோட்டக் மஹிந்திரா பென்ஷன் பண்ட்

கோட்டக் மஹிந்திரா பென்ஷன் பண்ட் லிமிடெட் (கேஎம்பிஎப்எல்) என்ற அமைப்பை ஒரு ஓய்வூதிய நிதி மேலாளராக, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், 2009 ஆண்டு ஏப்ரல் 30 அன்று நியமித்திருக்கிறது. அதன்படி புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் திரட்டப்படும் நிதியை இந்த கோட்டக் மஹிந்திரா பென்ஷன் பண்ட் நிர்வாகம் செய்யும்.

6. ரிலையன்ஸ் கேபிடல் பென்ஷன் பண்ட்

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ரிலையன்ஸ் கேபிடல் பென்ஷன் பண்ட் என்ற அமைப்பையும் ஓய்வூதிய நிதி மேலாளராக நியமித்திருக்கிறது. அதன்படி புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் திரட்டப்படும் நிதியை இந்த ரிலையன்ஸ் கேபிடல் பென்ஷன் பண்ட் நிர்வாகம் செய்யும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: முதலீடு, pension
English summary

Who manages the National Pension System? | தேசிய ஓய்வூதிய திட்டத்தை நிர்வகிப்பது யார்?

The National Pension System (NPS) is an initiative of Pension Fund Regulatory and Development Authority (PFRDA), the apex body established by Government of India to regulate and develop the pension sector. One can regularly invest money in this and get a lump sum at retirement and a fixed monthly income for the lifetime. It is better option as it is cheapest when compared to current retirement products and it is also easy to transact. There is additional tax saving benefit if both employee and employers contribute However, at the time of withdrawal, the lump sum would be taxable as per the individual's tax slab. It does not permit flexible withdrawals when compared to mutual funds. The government has appointed six pension fund managers to manage NPS who will invest the pension fund further to generate return on investment.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns