
அவருடைய பங்குகள் ஒட்டுமொத்தமாக நல்ல நிலையில் இருந்த பொழுது, சந்தைகளில் முதலீட்டாளர்கள் தங்களுடைய லாபத்தை வெளியே எடுக்க முனைந்ததால் பங்குச் சந்தை ஒரு சரிவை சந்தித்தது. அந்த நிலையில் அவருடைய ஒட்டு மொத்த லாபமும் கரைந்து போனது. ஒரு நீண்ட கால முதலீட்டாளர் என்ற வகையில் திரு ராஜன் தான் முதலீடு செய்திருந்த நிறுவனங்களின் மீது நம்பிக்கை வைத்து அதே பங்குப்பட்டியலை(portfolio) பராமரிக்க நினைத்தார். ஆனால் இப்போது அவர் உண்மையில் பங்குகளில் செய்யப்பட்ட முதலீட்டுப் பணத்தை இழக்கத் தொடங்கி விட்டார்.
அவர் சரியான நேரத்தில் அவரது பங்குப்பட்டியலை(portfolio) சமநிலைப் படுத்தியிருந்தால் இன்று நஷ்டத்தை சந்தித்திருக்க மாட்டார். உங்களை பங்குச் சந்தை ஏமாற்றங்களில் இருந்து பாதுகாக்க சில எளிய முதலீட்டு விதிகள் உள்ளன.
முதலில் பங்குப்பட்டியலை(portfolio) மற்றி அமைப்பது என்பது அதிக நிகர சொத்து மதிப்புடைய தனிநபர்கள் அல்லது நிறுவன முதலீட்டாளர்களால் மட்டுமே முடியும் என நினைக்காதீர்கள். மறு சமநிலைப்படுத்தல் என்பதை எந்த ஒரு முதலீட்டாளராலும் செய்ய முடியும். மிக எளிய மற்றும் தனிநபருக்கு பயன் தரக்கூடிய மறு சமப்படுத்தும் நுட்பங்கள் சில பின்வருமாறு:
பிசிக்கல் மறு சமநிலை(Physical Re-Balancing)
மறு சமநிலைப்படுத்துவது என்பதை ஒரு கொள்கை முடிவாக ஒரு வருடத்திற்கு ஒரு முறை என வைத்துக் கொள்ளலாம். ஆனால் எப்பொழுது எல்லாம் சந்தை தனது வாய்ப்புகளை முதலீட்டாளர்களூக்கு வழங்குகிறதோ அப்பொழுது எல்லாம் அதைப் பயன் படுத்த தவற வேண்டாம். அதற்காக குறிப்பிட்ட காலம் வரும் வரை காத்திருக்க வேண்டாம். அதாவது ஒரு முதலீட்டாளர் சந்தையின் போக்கிலேயே செல்ல வேண்டும் என்பதை இது குறிக்கிறது. உதாரணமாக திரு சுந்தர் அவர்களின் வழக்கை எடுத்துக் கொள்வோம். அவர் ரூ1 லட்சத்தை இரு பகுதிகளாக பிரித்து முதலீடு செய்துள்ளார். அதில் ரூ 50,000 பங்குகளிலும், மீதி ரூ50,000 பெருநிறுவன பத்திரங்களிலும் முதலீடு செய்துள்ளார்.
சுந்தர் அவர்களுக்கு அவருடைய பங்குப்பட்டியலை மறு சமன் செய்ய உள்ள முதல் வழி, ஒரு ஆண்டு காலம் வரை காத்திருந்து அந்த ஆண்டின் இறுதியில் அவருக்கு கிடைத்த வருமானத்தின் அடிப்படையில் மறு சமன்ப்படுத்துவது. இந்த வழக்கில், சந்தைகளின் கரடியின் பிடியில் இருந்து அவர் சுமார் ரூ40,000 பங்குகளிலும், ரூ60,000 பத்திரங்களிலும் முதலீடு செய்திருந்தால், பத்திர முதலீட்டில் ஒரு பகுதியை விற்று அந்த லாபத்தை பங்குகளில் முதலீடு செய்யலாம். ஏனெனில் பங்குகளின் விலை மலிவாக உள்ளது.
அதே நேரத்தில் சந்தை காளையின் பிடியில் இருந்து அவர் பங்குகளில் சுமார் ரூ57,000, பத்திரங்களில் சுமார் ரூ43,000 முதலீடு செய்திருந்தால், அவருடைய பங்குகளை விற்று அந்த லாபத்தை பத்திரங்களில் முதலீடு செய்யலாம். ஏனெனில் பங்குகளின் விலைகள் அதிகமாக உள்ளது. இந்த நடைமுறை தானியங்கு மறு சமநிலைப்படுத்துவது எனப்படுகிறது.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

3 மாதத்தில் 75% சரிவு! ரத்தம் சிந்தும் பென்னி ஸ்டாக்ஸ் - இதில் உங்க பங்குகள் இருக்கா? உஷார்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications