குழந்தையை எதிர்பார்க்கும் பெற்றோர்களுக்கான நிதித் திட்டம்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டிற்கு ஒரு புதிய உறுப்பினரின் வருகை என்பது பெருமைக்குரிய மற்றும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். அதிலும் குழந்தையின் வருகை பெற்றோரின் வாழ்வில் புதிய பொறுப்புகள் மற்றும் நோக்கங்களை உருவாக்குகிறது.

 

முதலில் குழந்தை பிறக்கும் முன்னர் நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்களை பட்டியலிட்டுக் கொள்ள வேண்டும். இத்தகைய செயல் உங்களுக்கு குழந்தை பிறந்த பின்னர் எந்த வித சிக்கல் மற்றும் பிரச்சனைகள் இன்றி, உங்களுடைய நேரத்தை, குழந்தைக்காக செலவிட உதவும். குழந்தையின் அறையின் நிறம் மற்றும் பெயர் போன்ற விஷயங்களைத் தீர்மானிக்கும் போது, நிதி திட்டமிடல் குறிப்புகளைப் பற்றியும் சிறிது சிந்தியுங்கள். நிதி திட்டமிடலை குழந்தை பிறக்கும் முன்னர் மற்றும் பின்னர் எனப் பிரித்து உருவாக்குங்கள். அது உங்களுடைய பெற்றோர் வாழ்வை எந்த வித பிரச்சனைகள் இன்றி சமளிக்க உதவும்.

விடுமுறை கொள்கை

விடுமுறை கொள்கை

உங்கள் நிறுவனத்தின் விடுமுறை கொள்கையை தெரிந்து வைத்துக்கொள்ளவது அவசியம். இது பிரசவத்திற்கு பிறகு தேவைப்படும் கூடுதல் விடுப்புகள் பற்றிய முடிவுகளை எடுக்க உதவும். பிரசவத்திற்கு தயாராகும் முன் கூடுதலாக சேமிக்க வேண்டும். அது பிரசவத்திற்கு பின் நீங்கள் உங்களுடைய அலுவலகத்தில் மீண்டும் பணியில் சேரும் வரை உங்களுடைய செலவுகளை சமாளிக்க உதவும்.

நிதி

நிதி

அவசர கால நிதியை உருவாக்க வேண்டும். அவசரகால தேவைகளை சமாளிக்க தேவையான நிதியை கைவசம் எப்பொழுதும் வைத்திருக்கவும். இந்த அவசரகால நிதியானது 3 முதல் 6 மாதங்கள் வரையிலான அன்றாடச் செலவுகளை சமாளிக்க உதவும் வகையில் இருக்க வேண்டும். பிரசவத்திற்கு முந்தய பருவம் உங்களுக்கு தேவையான நிதியை சேமிக்க உரிய கால அவகாசத்தை கொடுக்கிறது.

ஆயுள் காப்பீடு
 

ஆயுள் காப்பீடு

ஒரு ஆயுள் காப்பீட்டை கண்டிப்பாக வாங்க வேண்டும். இது உங்களை எதிர்பாராத நிகழ்வுகளில் இருந்து காப்பாற்றும். ஒரு 20 வருட பாலிசி எடுப்பதை பற்றி யோசிக்கலாம். அது உங்களுடைய குழந்தை வளர்ந்து வாலிப பருவத்தை அடையும் பொழுது கை கொடுக்கும்.

மருத்துவ காப்பீடு

மருத்துவ காப்பீடு

குழந்தைக்கு ஒரு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்ப்பதைப் பற்றி திட்டமிடவும். சில காப்பீட்டு நிறுவனங்கள் குழந்தை பிறந்த முதல் நாளில் இருந்து மருத்துவ காப்பீடு வழங்குகின்றன. எனினும் உங்களுக்கு உகந்த மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் காப்பீட்டு நிறுவனத்தைப் பற்றி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.

பட்ஜெட்

பட்ஜெட்

பட்ஜெட்டை பின்பற்றுங்கள். குழந்தை பிறந்த முதல் ஆண்டில் பல செலவுகள் ஏற்படும். அதிகரிக்கும் மருத்துவ காப்பீட்டு பிரிமீயம், குழந்தைக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள், மற்றும் தடுப்பூசிகள் என பல்வேறு செலவுகள் ஏற்படும். ஆகவே இதை எல்லாம் கருத்தில் கொண்டு பட்ஜெட்டை உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்கிய பட்ஜெட்டில் இருந்து ஒரு பொழுதும் விலகாதீர்கள்.

நிதி திட்டம்

நிதி திட்டம்

நிதி திட்டத்தை மாற்றி அமைக்கவும். உங்களுடைய குழந்தையின் கல்வி மற்றும் திருமணம் போன்ற தருணங்களுக்காக இப்பொழுதே திட்டமிடுங்கள். உங்களுடைய திட்டத்திற்கு தகுந்தவாரு, நிதி திட்டத்தை மாற்றி அமைத்திடுங்கள். பிரசவத்திற்கு பிறகு செலவுகள் மற்றும் சேமிப்புகளைப் பற்றி ஆராயுங்கள். பிரசவத்திற்கு பிந்தய நிதி நிலைமை உங்களுடைய வருங்கால நோக்கங்களை அடைவதற்கு தடையாக இருக்கக் கூடாது.

உயில்

உயில்

குழந்தை பிறந்த பின் உங்களுடைய குழந்தையின் பெயரை உள்ளடக்கி ஒரு புதிய உயிலை உருவாக்கலாம். அவ்வாறு இல்லையெனில் குழந்தையின் நலனுக்காக ஒரு அறக்கட்டளையை உருவாக்கலாம். இவை பெற்றோர் இருவரும் இறந்த பிறகே அமலுக்கு வரும்.

வரி

வரி

சிறு குழந்தையின் பெயரில் முதலீடு செய்யலாம். அவ்வாறு செய்யப்படும் முதலீடு வருவாயை உருவாக்கும் பட்சத்தில் அது பெற்றோரின் வருமானத்தின் ஒரு அங்கமாக கருதப்படும். எனினும் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ 1,500 வரை வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

திட்டமிட்ட நடவடிக்கை

திட்டமிட்ட நடவடிக்கை

ஒரு முறையான மற்றும் திட்டமிட்ட நடவடிக்கை பெற்றோர் வாழ்க்கையின் பல விஷயங்களை கற்றுக்கொள்ள உதவும். சரியாக திட்டமிட்டால் உங்களுடைய பெற்றோர் வாழ்வை சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் அனுபவிக்க முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Financial planning for expecting parents

It's a moment of pride and joy when little one arrives and instantly puts the new parents head over heels with them.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X