எல்.ஐ.சியின் பிமா பசாட் திட்டத்தில் முதலீடு செய்யலாமா?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்.ஐ.சி நிறுவனம் வழங்கும் பிமா பசாட் திட்டம் என்பது ஒரு முறை மட்டுமே தவணை செலுத்தவேண்டிய ஆயுள் காப்பீட்டு பலனை வழங்குவதுடன், குறிப்பிட்ட இடைவெளிகளில் முதலீட்டு ஆதாயமும் வழங்குகிறது.

 

9,12 மற்றும் 15 ஆண்டு கால அளவில் கிடைக்கக்கூடிய இந்த திட்டத்தின் தவணைத் தொகையானது, காப்பீடு பெறுபவரின் வயது மற்றும் கால அளவை பொறுத்து கணக்கிடப்படுகிறது.

நீங்கள் ஆயுள் காப்பீடு திட்டம் மட்டுமே தேவை என நினைத்தால், LIC பிமா பசாட் திட்டம் உங்களுக்கு தேவை இல்லை எனலாம். மாறாக குறிப்பிட்ட இடைவெளிகளில் ஆதாயத்துடன் கூடிய மற்ற பலன்களையும் எதிர்பார்த்தால் பிமா பசாட் திட்டம் உங்களுக்கு கைகொடுக்கும்.

பிமா பசாட் திட்டத்தால் என்ன நன்மைகள் கிடைக்கும்

வாழ்நாள் காலப்பலன் :

வாழ்நாள் காலப்பலன் :

மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பணம் கிடைக்கும். இந்த திட்டத்தின் மூலம் காப்பீடு பெறுபவர், மொத்த காப்பீட்டுத் தொகையில் 15 விழுக்காடு தொகையை மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பலனை பெறுவார்.

முதிர்வுகால பலன்

முதிர்வுகால பலன்

இந்த திட்டத்தின் மூலம் காப்பீடு பெறுபவர், திட்ட முதிர்வு காலம் வரை உயிருடன் இருந்தால், தவணை தொகை மொத்தமும் கிடைப்பதுடன், பற்று உதியும் கிடைக்கும். பற்று உறுதி தொகை எவ்வாறு கணக்கிடப்படும் என்று தெளிவான வழிமுறைகள் தற்போதைக்கு இல்லை என்றாலும், தோராயமாக 1000 ரூபாய் தவணைத்தொகைக்கு 35 ரூபாய் கிடக்கும்.

இறப்புப் பலன்
 

இறப்புப் பலன்

இந்த திட்டத்தின் மூலம் காப்பீடு பெறுபவர், பாலிசி காலத்தில் துரதிருஷ்டவசமாக இறந்துவிட்டால் உறுதி அளிக்கப்பட்ட தொகையும் மற்றும் போனசும் வழங்கப்படும்.

பிரிவு 80Cயின் கீழ்  வருமான வரிச்சலுகை,

பிரிவு 80Cயின் கீழ் வருமான வரிச்சலுகை,

இந்த திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தவணைத்தொகைக்கு இந்திய வருமான வரி சட்டம் 80Cயின் கீழ் வருமான வரிச்சலுகை அளிக்கப்படும்

அதிக தவணைக்கு தள்ளுபடி தொகை

அதிக தவணைக்கு தள்ளுபடி தொகை

முதிர்ச்சி தொகை 50,000 ரூபாய்க்கு அதிகமானால், தவணைத்தொகையில் தள்ளுபடி கிடைக்கும். முதிர்ச்சி தொகை ரூபாய் 50000 - 100000 இடையில் இருந்தால் , தவணைத்தொகையில் 5% தள்ளுபடி கிடைக்கும். முதிர்ச்சி தொகை ரூபாய் 100000 - 2,00,000 இடையில் இருந்தால் , தவணைத் தொகையில் 7% தள்ளுபடி கிடைக்கும். முதிர்ச்சி தொகை இரண்டு இலட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் தவணைத் தொகையில் 8 விழுக்காடு தள்ளுபடி கிடைக்கும்.

கடன் வசதி

கடன் வசதி

பிமா பசாட் திட்டத்தின் கீழ் கடன் வசதியும் உண்டு. தற்போதைய நிலையில் 9 விழுக்காடு ஆண்டு வட்டியுடன் கூடிய, ஆண்டுக்கு இருமுறை பணம் செலுத்தக்கூடிய கடன் வசதி உள்ளது.

காப்பீட்டை சரணடையும் வசதி

காப்பீட்டை சரணடையும் வசதி

ஒருவேளை காப்பீட்டளார், இந்த திட்டத்தில் இருந்து விடுபெற நினைத்தால், ஒரு ஆண்டு முடிவடைந்த நிலையில் தவணைத்தொகையில் 90 விழுக்காடு திரும்ப கிடைக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Should you invest in LIC Bima Bachat?

LIC Bima Bachat plan is a conventional single premium money back policy that offers life cover in addition to return on investment in the form of money-back.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X