ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் ஃபிக்ஸட் மெச்சூரிட்டி திட்டம்- ஒர் பார்வை

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் ஃபிக்ஸட் மெச்சூரிட்டி திட்டம்- ஒர் பார்வை
ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட், 1092 நாட்கள் மெச்சூரிட்டி காலத்தைக் கொண்ட "ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் ஃபிக்ஸட் மெச்சூரிட்டி திட்டம் - தொகுதி 69-1092 நாட்கள் திட்டம் - எல்" என்ற புதிய கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்துக்கான நியூ ஃபண்ட் ஆஃபர் (NFO) விலை யூனிட்டுக்கு 10 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சப்ஸ்க்ரிப்ஷனுக்காக இந்த என்எஃப்ஓ திறந்து வைக்கப்பட்டுள்ளது; இதற்கான கடைசி நாளாக செப்டம்பர் 12ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

செபியிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆஃபர் ஆவணத்தில், நுழைவுக் கட்டணம் ஏதும் இல்லையென்றும், இத்திட்டம் பங்குச் சந்தை அல்லது வேறு ஏதேனும் எக்ஸ்சேஞ்ச் ஒன்றில் பட்டியலிட திட்டமிடப்பட்டுள்ளதால் வெளியேறு கட்டணம் ஏதும் இதற்கு விதிக்கப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இத்திட்டத்திலிருந்து வெளியேற நினைக்கும் முதலீட்டாளர்கள் பங்கு சந்தை மூலம் தாராளமாக வெளியேறிக் கொள்ளலாம் என்று இது பரிந்துரைப்பதாக அர்த்தமாகிறது.

 

குறைந்தபட்ச விண்ணப்பத் தொகை 5000 ரூபாயாகவும் அதற்குப் பின்னானவை ஒவ்வொன்றுக்கும் 10 ரூபாயால் பெருக்கினால் வரக்கூடிய தொகையாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குமுலேட்டிவ் மற்றும் டிவிடென்ட் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் இருக்கக்கூடிய இருவகை ஆப்ஷன்கள் ஆகும்.

இத்திட்டத்தின் செயல்பாடு க்ரிஸில் -இன் குறைந்த கால பாண்ட் ஃபண்ட் இன்டெக்ஸுக்கு எதிராக மட்டக்குறியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான நிதி மேலாளர் ஆக திரு.அவினாஷ் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.

இத்திட்டத்திற்கான காலவரையறை நிறைவடைவதற்குள் மெச்யூர் ஆகக்கூடிய நிலையான வருமான பெரும்செக்யூரிட்டிகள் அடங்கிய போட்ஃபோலியோவில் முதலீடு செய்வதன் மூலம் வருமானத்தை பெருக்க வேண்டும் என்ற இத்திட்டத்தின் குறிக்கோளை நிறைவேற்றும் வண்ணம் இதன் சொத்து ஒதுக்கீடு அமைந்திருக்கும். எனவே இத்திட்டம் சுமார் 50 முதல் 100 சதவீதம் வரையிலான சொத்தை கடன் பிணையங்களுக்கும், சுமார் 0 முதல் 50 சதவீதம் வரையிலான சொத்தை பணச்சந்தை சாதனங்களுக்கும் ஒதுக்கீடு செய்யவுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ICICI Prudential launches - ICICI Prudential Fixed Maturity Plan-Series 69-1092 Days Plan

ICICI Prudential Mutual Fund has launched a new close ended debt scheme named "ICICI Prudential Fixed Maturity Plan-Series 69-1092 Days Plan L" with maturity period of 1092 days from the date of allotment.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X