வட்டி விகிதம் மற்றும் ஈட்டம் (ஈல்ட்) இடையேயான வேறுபாடுகள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: பல சமயங்களில் இவை இரண்டும் ஒன்றுதான் என நாம் தவறாக புரிந்துகொண்டாலும் கூட, வட்டி விகிதம் மற்றும் ஈட்டம் இரண்டிற்குமிடையே லேசான வேறுபாடு உள்ளது. வட்டி விகிதத்தை விட ஈட்டம் உயர்வாக இருப்பதால், நிதி நிறுவனங்கள் மற்றும் கம்பனிகள் மென்மேலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், ஈட்டத்தொகையை முன்னிலைப்படுத்தி காட்டுகின்றன. இந்த இரண்டு சொற்களுக்கும் இடையிலான நுணுக்கமான வேறுபாட்டை வாடிக்கையாளர்கள் பின்வரும் விளக்க கட்டுரையின் முலம் அறிந்து கொள்ள முடியும்.

வட்டி விகிதம்

நிலையான வைப்பு, தொடர் வைப்பு நிதி, வருங்கால வைப்பு நிதி போன்ற முதலீட்டுகளின் அசல் தொகையின் மீது, ஒரு குறிப்பிட்ட கால அடிப்படையில் கணக்கிடப்படும் வருமானத் தொகை வட்டி விகிதம் எனப்படும். எளிமையாக கூறினால், முதலீட்டுத் தொகையின் மீது கூடுதலாக கிடைக்கும் தொகையை சதவிகிதத்தில் குறிப்பிடுவது வட்டி விகிதமாகும். கடன் மற்றும் சேமிப்பு ஆகிய இரண்டிலும் இந்த கோட்பாடு உள்ளது.

வட்டி விகிதம் மற்றும் ஈட்டம் (ஈல்ட்) இடையேயான வேறுபாடுகள்!!

வட்டி விகிதம் என்பது ஒரு முதலீட்டிலிருந்து பெறக்கூடிய வருமானம் ஆகும், இதில் வேறு காரணிகளை கருத்தில் கொள்ளபட மாட்டாது. உதாரணமாக, 4% வட்டி விகிதத்துடனான ஒரு மாற்றத்தக்க கடனீட்டு பத்திரத்திலிருந்து, ஆரம்ப முதலீட்டுத் தொகையை விட மேலதிகமாக 4% வருமானம் கிடைக்கும். அதேபோல், 11% ஆண்டு வட்டி விகிதத்தில் கடன் பெற்றிருந்தால், கடன் தொகைக்கு மேலாக 11% வட்டித் தொகையாக செலுத்த வேண்டும். பொதுவாக பொருளாதார கட்டமைப்பு அல்லது கடன் வழங்கும் விகிதம் ஆகியவற்றை தெளிவுபடுத்திக் காட்டுவதற்காக வட்டி விகிதம் பயன்படுத்தப்படுகிறது.

ஈட்டம்

வரி அனுகூலங்கள் போன்ற காரணிகளை கருத்தில் கொண்டு, ஒரு முதலீட்டிலிருந்து கிடைக்ககூடிய வருமானத் தொகை ஈட்டம் எனப்படும். ஒரு முதலீட்டிலிருந்து பெறக்கூடிய ஒரு துல்லியமான ஆதாயத் தொகை ஈட்டமாகும், இது சதவிகிதத்திலோ (%) அல்லது நாணய முறையிலோ குறிப்பிடப்படும். வட்டித் தொகைகளை கூட்டுவதின் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட முதலீட்டுத்திட்டத்திலிருந்து கிடைக்ககூடிய ஈட்டம் அதிகரிக்கிறது. ஆகவே, ஒரு வருடகாலத்திற்கு 4% வட்டி விகித்துடான ஒரு முதலீட்டு திட்டம் ரூ.400 ஈட்டத்கொகையைக் கொடுக்கும்.

வட்டி விகிதம் மற்றும் ஈட்டம் (ஈல்ட்) இடையேயான வேறுபாடுகள்!!

உதாரணமாக: ஒரு வங்கியில் வைப்பு வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒருமுறை சேர்க்கப்படுகிறது. ஆகவே, ஆண்டு வட்டி விகிதம் 10% காலாண்டுக்கொருமுறை உங்களுக்குக் கிடைத்தால், மூன்று மாதங்களுக்குப் பின்னர் வங்கி வட்டித்தொகையை உங்கள் ஆரம்ப முதலீட்டில் சேர்க்கும் போது உங்கள் ஈட்டம் உயரும். ஆகவே, நான்காவது மாததிலிருந்து ஆரம்ப முதலீட்டுத்தொகை மீது 10% ஆண்டு வட்டி கணக்கிடப்படுவதால், இந்த வட்டி உங்கள் ஈட்டத்தை மேலும் அதிகமாக்கும். இந்த அடிப்படையில் பார்க்கையில் வட்டிவிகிதத்தை விட ஈட்டம் எப்போதும் உயர்வாக இருக்கும்.

எனவே, இந்த இரண்டுக்குமிடையிலான முக்கிய வேறுபாடு என்னவென்றால், முதலீட்டிலிருந்து கிடைக்கும் இலாபம் ஈட்டம் ஆகும். இந்த இலாபம் கிடைப்பதற்கான காரணி வட்டி விகிதம் ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is the difference between interest rate and yield?

Though misunderstood to be same on different grounds, there exists a slight difference between interest rates and yield. Often, financial institutions and companies highlight the likely yield from an investment as it comes out be higher than interest rates in order to lure more and more investors.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X