என்எஃப்ஒ என்றால் என்ன? இதில் எப்படி முதலீடு செய்வது..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: நிதி மேலாண்மை நிறுவனங்கள் முதன் முறையாக பரஸ்பர நிதி திட்டங்களுக்கான பதிவுகளைத் துவங்குகிறது இத்திட்டங்களை "புதிய நிதி அளிப்புகள்" (NFOs) என கூறப்படுகின்றன. இத்திட்டங்கள் அரசு கடன் பத்திரங்கள், பங்குகள் முதலியவற்றை மக்கள் வாங்குவதன் மூலம் முதலீடுகளை திரட்டச் செய்கின்றன. முதலீட்டை திரட்டப் பயன்படும் ஐபிஒ எனப்படும் முதல் பங்கு வெளியீட்டை ஒத்தவை இந்த புதிய நிதி அளிப்பு திட்டங்கள்.

 

இத்திட்டங்கள் திறந்த அல்லது மூடிய முதிர்வைக் கொண்டவை. திறந்த முதிர்வைக் கொண்ட அளிப்பு ஒரு நாளின் முடிவில் நிகர ஆண்டு மதிப்பை நிர்ணயித்த பிறகும் வாங்கக்கூடியது. ஆனால் மூடிய முதிர்வைக் கொண்ட திட்டகளில் அவ்வாறு முதலீடு செய்ய இயலாது. அவ்வாறு முதலீடு செய்ய விரும்புவோர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட தொகையில் (பொதுவாக 10 ரூபாய்) இந்த திட்டங்களில் முதலீடு முடியும்.

என்எஃப்ஒ என்றால் என்ன? இதில் எப்படி முதலீடு செய்வது..

திட்ட செயல்பாடு..

பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்யுமுன் திட்டக் கையேட்டை கவனமாகப் படிப்பது அவசியம். புதிய நிதி அளிப்புத் திட்டங்கள் இதற்கு விதிவிலக்கல்ல. கையேட்டில் உள்ள நிபந்தனைகளை படித்துப் புரிந்து கொண்டபின் அதில் நீங்கள் சேர விரும்பினால், உங்கள் நிதி ஆலோசகரிடம் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும். விண்ணப்பதோடு கிடைக்கும் திட்ட முக்கிய விவர ஆவனத்தையும் (Key Informatio Memorandum) நீங்கள் படித்து அறிந்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் கட்டணத்தை திட்ட வழங்கும் நிறுவனத்திடம் ஒப்படைத்தால் அவை பதிவாளர் மற்றும் மாற்று முகவரிடம் சென்று சேரும். இந்த பதிவு மற்றும் மாற்று முகவரின் செயல் வாடிக்கையாளர்களுக்கு நிதி நிர்வாக பரிவர்தனைகளில் உறுதுணையாக இருக்கும்.

இந்த முகவர்கள் தேவையான விவரங்களை பதிவு செய்து தேவையான கட்டணத்துக்கான காசோலையுடன் நிதி நிறுவனம் கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு அனுப்பிவைப்பர். அந்த காசோலை பணமாக்கப்பட்டவுடன் அந்த வாடிக்கையாளர்களுக்குண்டான நிதி எண்ணிக்கைகளை வங்கி அவர்களுக்கு வழங்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are new fund offers (NFOs)?

New Fund Offer (NFO) is a mutual fund scheme that is opened for subscription for the first time by the asset management company (AMC).
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X