பங்கு சந்தையில் லாபத்தை அள்ளுவது எப்படி??

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இன்றைய பொருளாதார சூழ்நிலையில் நம்முடைய சேமிப்புப் பணத்தை வங்கிகளில் மட்டும் முடக்கி வைப்பது அவ்வளவு உசிதமானதல்ல. ஓரளவு பாதுகாப்பாக இருக்கும். ஆனால் கிணற்றில் போட்டது போல் அப்படியேதான் இருக்கும். வருடத்திற்கு ஒரு முறையோ இரு முறையோ கொசுறு மாதிரி கொஞ்சம் வட்டி வரும். அவ்வளவுதான்!

 

பங்கு சந்தைகளில் அதிக ரிஸ்க் இருக்கும் என்பதால், அதில் முதலீடு செய்ய நிறையப் பேர் தயங்கிக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் அவ்வளவு ரிஸ்க்குகளுக்கு இடையிலும், வங்கிகளை விட பங்கு சந்தையில் தான் அதிக வருமானம் கிடைக்கும் என்பதே உண்மை. நீண்டகால முதலீடு என்பதும் கொஞ்சம் கஷ்டம்தான்.

(Read this: How to increase returns from fixed deposits?)

கணிப்பது கொஞ்சம் கஷ்டம்

கணிப்பது கொஞ்சம் கஷ்டம்

பங்கு சந்தையில் நீங்கள் எதில் முதலீடு செய்யலாம் என்பதை உங்கள் ஆலோசகர்கள் உங்களுக்கு எளிதாகக் கூறிவிடுவார்கள். ஆனால் பங்குகளின் விலை குறையும்போது அதற்கு சரியான மாற்று வழியை எத்தனை பேரால் கூற முடியும்? "கொஞ்ச நாள் அப்படியே வைத்திருங்கள், அப்புறம் பார்த்துக்கலாம்" என்று மட்டும்தான் அவர்கள் சொல்வார்கள்.

தன் கையே தனக்கு உதவி

தன் கையே தனக்கு உதவி

இந்த நிலையில், நீங்கள்தான் அதற்குண்டான காரண காரியங்களை ஆராய்ந்து, தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பங்கு சந்தையில் நீண்ட கால முதலீடுகளைத் தேர்ந்தெடுத்து, அதில் வெற்றிகரமாக சம்பாதிப்பதற்கான சில வழிகளைப் பார்க்கலாம்.

பல்துறை முதலீடு
 

பல்துறை முதலீடு

முதலில் உங்கள் சேமிப்பை பல்வேறு வகைகளில் முதலீடு செய்ய வேண்டும். ஸ்டாக்குகள், பாண்டுகள், மியூச்சுவல் பண்டுகள் உள்ளிட்டவற்றை இதற்குத் தேர்ந்தெடுக்கலாம். ஒவ்வொரு முதலீடும் உங்கள் மொத்த முதலீட்டில் 10%தான் இருக்க வேண்டும். முடிந்தால் வெளிநாடுகளில் உள்ள பங்கு சந்தைகளில் கூட நீங்கள் முதலீடு செய்யலாம். ஒரு பங்கு இறங்கு முகத்தில் இருந்தால், ஏறு முகத்தில் உள்ள வேறு பங்குகள் உங்கள் முதலீட்டைக் காப்பாற்றும்.

நீண்ட ஆராய்ச்சி

நீண்ட ஆராய்ச்சி

எந்தப் பங்குகளை வாங்கலாம் அல்லது விற்கலாம் என்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கு நிறைய வெப்சைட்டுகள் தற்போது இணையத்தில் பவனி வருகின்றன. ஆனால் முடிவு மட்டும் உங்கள் கைகளில்தான் இருக்க வேண்டும். அனைத்தையும் நன்றாகப் படித்து ஆய்வு செய்து, பங்குகளைத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். குறைந்தது 5 ஆண்டுகளாவது ஒரு நிறுவனம் சந்தையில் நன்றாக செயல்பட்டு வருகிறதோ அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது.

பங்கு மதிப்புகள் கூடுதா? குறையுதா?

பங்கு மதிப்புகள் கூடுதா? குறையுதா?

மார்க்கெட் இண்டெக்ஸில் உங்களுடைய பங்குகளின் நிலை எப்படி உள்ளது என்பதை ஆழ்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். உங்களுடைய சில பங்குகள் சந்தையில் நன்றாக செயல்பட்டுக் கொண்டிருந்தால், முடிந்தவரை வேகமாக அவற்றை விற்று, அதில் லாபம் பாருங்கள். அதையே நீண்டகால முதலீடாக வைக்க வேண்டுமென்று விரும்பினால், அதே பங்குகளை மேலும் நிறைய வாங்கிப் போடுங்கள். மோசமான பெர்ஃபார்ம் உள்ள பங்குகளையும் உடனுக்குடன் விற்று விடுவது நல்லது. தேவையில்லாமல் அதை வைத்துக்கொண்டே இருப்பது நல்லதல்ல.

வரவுகளை முதலீடு செய்யுங்கள்

வரவுகளை முதலீடு செய்யுங்கள்

டிவிடெண்டுகளை எப்படிக் கையாளுவது என்ற யுக்தியையும் தெரிந்து கொள்ளுங்கள். பங்கு சந்தையில் உங்களுக்குக் கிடைக்கும் சின்னச் சின்ன டிவிடெண்டுகளையும் அதிலேயே முதலீடு செய்யுங்கள். ஒரு 3% டிவிடெண்டு என்ன லாபத்தைக் கொடுத்து விடும்; பேசாமல் அதை சாப்பிட்டு விடலாம் என்று நினைத்து விடாதீர்கள். இதுபோல பல டிவிடெண்டுகள் கிடைத்தால் அதுவே ஒரு தனி டிராக்காக மாறி பின்னாளில் உங்களுக்குக் கைகொடுக்கும்.

தொலைநோக்குப் பார்வை

தொலைநோக்குப் பார்வை

பங்கு சந்தையில் உங்கள் முதலீடுகளை தினந்தோறும் கண்காணித்துக் கொண்டிருப்பது அவசியம்தான். அதற்காக, அடிக்கடி பங்குகளை வாங்குவதும் விற்பதும் நல்லதல்ல. கமிஷன் கொடுத்தே உங்கள் பணம் கரைந்துவிடும். எனவே, பங்கு மார்க்கெட்டின் ஏற்ற இறக்கங்களை நன்கு கணித்து, தேவையானபோது மட்டுமே வாங்க/விற்க வேண்டும். எப்போதாவது பங்கு சந்தை ஆட்டம் கண்டாலும் பயந்து விடாதீர்கள். உங்களுடைய நல்ல பங்குகளைக் கொத்திக் கொண்டு போவதற்கும் சிலர் காத்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

வெற்றி உங்களுக்கே

வெற்றி உங்களுக்கே

அவ்ளோதான்! பங்கு சந்தையில் நீண்டகால முதலீடு செய்யும்போது இந்த விஷயங்களை மட்டும் கருத்தில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள். உங்கள் தேவைக்காகத்தான் நீங்கள் இந்த முதலீடுகளை செய்கிறீர்கள். எனவே, உங்கள் குடும்பத்திற்குத் தேவைப்படும்போது அவற்றை விற்றுக் காசாக்கவும் எப்போதும் தயாராக இருங்கள். வாழ்த்துக்கள்!!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to choose best long term investment options in India?

In the current scenario, keeping your savings in bank account doesn't seem a sound decision as they offer measly interest rates. It could be safe to keep all your savings in your bank account, but amount won't grow adequately over there.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X