மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் இது ரொம்ப முக்கியம்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: சமீப காலங்களில் பங்கு மார்க்கெட்டுகள் நல்ல ஆரோக்கியமான முறையில் வளர்ந்து கொண்டிருக்கின்றன.

 

அது போலவே, மியூச்சுவல் ஃபண்ட்கள் திட்டங்களும் புதிது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றின் முக்கியத்துவம் மற்றும் லாப விகிதங்கள் கருதி, அதில் முதலீடு செய்பவர்களும் பெருகி வருகின்றனர்.

இந்த மியூச்சுவல் ஃபண்டில் பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளைப் பற்றித் தெளிவாகப் புரிந்து கொண்டால் முதலீட்டாளர்களுக்கு எளிதாக இருக்கும். அத்தகைய சில சொற்றொடர்களை இப்போது பார்க்கலாம்.

நெட் அசெட் வேல்யூ (NAV)

நெட் அசெட் வேல்யூ (NAV)

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் பொதுச் சலுகையை அளிக்கும்போது, அதன் மதிப்பு ரூ.10ஆக இருக்கிறது. அந்த முதலீட்டுத் தொகை அதிகரிக்கும்போது, அதன் மொத்த மதிப்பும் அதிகரிக்கிறது. அதுதான் நெட் அசெட் வேல்யூ (NAV). அது ரூ.11ஆகவோ, ரூ.12ஆகவோ, சில சமயம் ரூ.9ஆகவோ கூட இருக்கும். அந்த மதிப்பிற்குத்தான் அதை விற்க முடியும்.

அசெட் மேனேஜ்மெண்ட் கம்பெனி (AMC)

அசெட் மேனேஜ்மெண்ட் கம்பெனி (AMC)

ஒரு நிறுவனம் பல மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை வைத்திருக்கும். அதற்குப் பெயர்தான் அசெட் மேனேஜ்மெண்ட் கம்பெனி (AMC). உதாரணத்திற்கு, ரிலையன்ஸ் கேப்பிட்டல் அசெட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தால் நிறுவப்பட்ட ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டம்தான் ரிலையன்ஸ் குரோத் ஃபண்ட்.

போர்ட்ஃபோலியோ மேனேஜர்கள்
 

போர்ட்ஃபோலியோ மேனேஜர்கள்

ஒரு மியூச்சுவல் ஃபண்டில் போடப்பட்டிருக்கும் பணத்தை பங்கு மார்க்கெட் உள்ளிட்ட பல வர்த்தகங்களில் வாரி இறைத்து, அதைப் பல்கிப் பெருக்குபவர்கள்தான் போர்ட்ஃபோலியோ மேனேஜர்கள்!

எண்ட்ரி அண்ட் எக்ஸிட் லோட்

எண்ட்ரி அண்ட் எக்ஸிட் லோட்

ஒவ்வொரு முறை நீங்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போதும் இதைக் கவனிக்க வேண்டியது அவசியம். லோட் இருக்கும் வேளையில், நீங்கள் ஃபண்டுகளை விற்றால் NAVக்குக் குறைவாகவே கிடைக்கும்; ஃபண்டுகளை வாங்கும்போது, NAVயைவிட அதிகம் கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். குறிப்பு: இது முதலீட்டாளர்களுக்கு நல்லதே இல்லை!

போர்ட்ஃபோலியோ

போர்ட்ஃபோலியோ

பங்கு மார்க்கெட் மற்றும் கடன் திட்டங்கள் இணைந்து உருவாவதுதான் போர்ட்ஃபோலியோ. உதாரணமாக, ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஆட்டோ, ஐடிபிஐ வங்கி மற்றும் சில அரசுப் பத்திரங்கள் ஆகியவற்றின் பங்குகளை ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் வாங்கினால், அவற்றைக் கூட்டாகச் சேர்த்து போர்ட்ஃபோலியோ என்று அழைக்கலாம்.

அசெட்ஸ் அண்டர் மேனேஜ்மெண்ட் (AUM)

அசெட்ஸ் அண்டர் மேனேஜ்மெண்ட் (AUM)

முதலீடு செய்யப்பட்ட பணம் அனைத்துமே அசெட்ஸ் அண்டர் மேனேஜ்மெண்ட் (AUM) என்று அழைக்கப்படுகிறது. மார்க்கெட் நிலைமைகளுக்கேற்பவும் முதலீடுகளின் அளவுக்கேற்பவும் இது ஏறவோ இறங்கவோ செய்யும்.

சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் ப்ளான் (SIP)

சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் ப்ளான் (SIP)

ஓபன் எண்டெட் மியூச்சுவல் ஃபண்டுகளின் மூலம் மாதா மாதம், காலாண்டு ஆகியவை போன்றவற்றில் சிறு சிறு முதலீடுகள் செய்யும் முறைக்குப் பெயர்தான் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் ப்ளான் (SIP).

 நியூ ஃபண்ட் ஆஃபர் (NFO)

நியூ ஃபண்ட் ஆஃபர் (NFO)

பொதுவாக ரூ.10 மதிப்பில் அறிமுகப்படுத்தப்படும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திற்குத்தான் நியூ ஃபண்ட் ஆஃபர் (NFO) என்று பெயர்.

டெப்ட் டெடிக்கேட்டட் ஸ்கீம்

டெப்ட் டெடிக்கேட்டட் ஸ்கீம்

மியூச்சுவல் ஃபண்டில் இது ஒரு ரிஸ்க் குறைவான திட்டமாகும். பங்கு மார்க்கெட்டுகள் மற்றும் ஈக்விட்டி திட்டங்களில் பணத்தை முதலீடு செய்து ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் இந்தத் திட்டத்தில்தான் பணத்தைப் போட்டு வைப்பார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

9 mutual fund terms every mutual fund investor should know

The stock markets are booming and investment in mutual fund schemes are soaring. The Indian investor is increasingly looking at mutual funds as an important investment avenue. Here are 9 mutual fund terms that mutual fund scheme investors should know. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X