இந்தியாவில் வரியில்லா கடன் பத்திரங்களை வாங்குவது எப்படி?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவில் வருமான வரி செலுத்தும் பலர், தங்களது முதலீட்டுக்கான லாபத்தில் வரி விலக்கு பெறவரியில்லா கடன் பத்திரங்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

 

ஆனால் பலருக்கு இதை எங்கு எவ்வாறு வாங்குவது என்பதைக் குறித்த அனுபவம் இருப்பதில்லை.

சில வருடங்களுக்கு முன் வரிச் சேமிப்பு கடன் பத்திரங்களை வழங்கிய பல நிறுவனங்கள் இருந்தன. உதரணமாக இந்தியரயில்வே நிதி நிறுவனக் கடன் பத்திரங்கள், ஹட்கோ நிறுவன கடன் பத்திரங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையப்பத்திரங்கள் இன்னும் பல..

இந்த வரிச் சேமிப்புப் பத்திரங்களின் செயல்படு, நன்மைகள், லாப அளவு பற்றி இங்குப் பார்க்கலாம்...

வரிப் பயன்

வரிப் பயன்

நீங்கள் ஒரு வரிச் சேமிப்புப் பத்திரத்தை வாங்கும்போது அதில் இருந்து கிடைக்கும் வட்டிக்கு வரிச் செலுத்துவதில் இருந்துவிளக்கு உண்டு. இதன் மூலம் வருமான வரியைக் கணக்கிடும்போது இந்த வட்டித் தொகையை மொத்த வருமானத்தில்சேர்க்க வேண்டியதில்லை.

உதாரணம்

உதாரணம்

நீங்கள் ஒரு வங்கியில் டெபாசிட்டை தொடங்கி அதன் மூலம் பத்தாயிரம் ரூபாய் வட்டி வருமானால் அதனை மொத்தவருமானத்தில் கணக்கில் கொள்ளவேண்டும்.

ஆனால் வரிச் சேமிப்புப் பத்திரங்கள் வாங்கினால் அதனைக் கணக்கில் கொள்ள வேண்டியதில்லை.

எனவே இதன் மீது நீங்கள் எந்த வரியையும் செலுத்த வேண்டியதில்லை என்பது தெளிவாகிறது.

 

எங்கு வாங்கலாம்?
 

எங்கு வாங்கலாம்?

இவற்றை நீங்கள் பங்குகளை வாங்க பயன்படுத்தும் அதே வணிகக் கணக்கின் மூலம் வாங்கலாம். உங்கள் முகவரைஅழைத்து இதற்கான ஆணையைக் கொடுக்கலாம் அல்லது நீங்களே கூட ஆன்லைனில் கணக்கு வைத்திருந்தால் அதன்மூலம் வாங்கலாம்.

கவனிக்க வேண்டியவை

கவனிக்க வேண்டியவை

இது போன்ற பத்திரங்களை வாங்கும் போது அவற்றின் விலை, வட்டி விகிதம், கணக்கு முடிவு நாள் ஆகிய விவரங்களைச்சரிபார்த்து வாங்குவது நல்லது.

ஆய்வு

ஆய்வு

மேலும் www.nseindia.com என்ற இணையத் தளத்தில் சென்று நீங்கள் வாங்க விரும்பும் பத்திரத்தை குறித்த தகவல்களைப்படித்து அறியலாம்.

அதற்கான தொடர்பை க்ளிக் செய்த பின்னர் மேற்கூறப்பட்ட உங்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களும்கிடைக்கும்.

 

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

இதில் மிகவும் முக்கியம் அதன் விலையும் வட்டி விகிதமும். உதாரணமாக 8.1 சதவிகித வட்டியுடன் 1,000 ரூபாய்மதிப்புடைய ஒரு பத்திரத்தை 1100 ருபாய் கொடுத்து நீங்கள் வாங்கும் போது உங்களின் வட்டி வருவாய் குறைந்து போகவேவாய்ப்புள்ளது.

உங்களுக்கு 8.1 சதவிகித வட்டி கிடைக்கலாம் என்றாலும், நீங்கள் முதலில் வாங்கியவரைப் போல் அல்லாமல் 1,000ரூபாய்க்கு பதிலாக 1100 ருபாய் செலுத்த வேண்டியுள்ளதால் உங்களுடைய மொத்த வருவாய் அதிகளவில் குறையும்.

 

மதிப்பீடு

மதிப்பீடு

இந்தியாவில் பட்டியலிடப்பட்ட பத்திரங்களில் AAA மதிப்பீட்டினை பெற்றவை பெரும்பாலும் அரசு நிறுவனபத்திரங்களாகும்.

முதிர்வு காலம்

முதிர்வு காலம்

இத்தகைய பத்திரங்களின் முதிர்வு காலம் பொதுவாக வெளியிட்ட நாட்களிலிருந்து 10, 15 அல்லது 20 வருடங்களாகஇருக்கும்.

முடிவுரை

முடிவுரை

எனவே அடுத்த முறை நீங்கள் பத்திரம் வாங்கும் போது அனைத்து விவரங்களையும் நன்கு ஆராய்ந்து முக்கியமாக விலைமற்றும் வட்டி விகித விவரங்களைத் தெரிந்து கொண்டு பின்னர் முடிவெடுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Where And How To Buy A Tax Free Bond In India?

There are many individuals who wish to purchase a tax free bond in India to save tax on interest amount. Many do not have an idea on how to go about purchasing the same.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X