தந்தேராஸ் தினத்தன்று தங்கம் வாங்குவது அதிருஷ்டகரமானதாகக் கருதப்படுவது ஏன்?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

'தந்தேராஸ்' என்கிற வார்த்தை இரண்டு சமஸ்கிருத வார்த்தைகளிலிருந்து உருவாக்கப்பட்டது. 'தன்' என்றால் செல்வம் என்று பொருள். ஹிந்து நாட்காட்டியின் படி 'தேராஸ்' என்பதற்கு 13 வது நாள் என்று பொருள். தீபங்களின் திருநாளான தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகத் தந்தேராஸ் கொண்டாடப்படுகிறது.

ஆனால், இது நமது நாட்டில் தங்க நகைகள், நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகள் வாங்குவதற்கான மிகப்பெரிய தருணம் என்பது உங்களுக்குத் தெரியுாமா?

தந்தேராஸ் தினத்தன்று தங்கம் வாங்கும் சம்பிரதாயம் எப்படி நடைமுறைக்கு வந்தது என்பதை மிகச்சரியாகத் தெரிந்து கொள்ள இதைப் பற்றி ஆழ்ந்து தோண்டி அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

புராணக் கதை

ஒரு பழைய புராணக் கதையின் படி, மன்னர் ஹிமாவின் மகனுக்கு அளிக்கப்பட்ட சாபத்தைப் பற்றிய சுவாரஸ்யமான கதை தந்தேராசுடன் இணைக்கப்பட்டுள்ளது. அரசன் ஹிமாவின் மகனுக்கு அளிக்கப்பட்ட சாபத்தின் படி அவன் தனது திருமணத்திற்குப் பின்பு 4 வது நாள் மரணமடைவான்.

ரகசிய வேண்டுகோள்

இந்தச் சாபத்தைப் பற்றித் தெரிந்து கொண்ட இளவரசனின் மனைவி தனது கணவனைச் சாபத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள ஒரு திட்டத்துடன் முன்வருகிறாள். அவர்களுடைய திருமணமான 4 வது நாளன்று தூங்க வேண்டாமென அவள் தனது கணவனுக்கு வேண்டுகோள் விடுக்கிறாள்.

தீபமும், தங்கமும்

அவள் அனைத்துத் தங்கம் மற்றும் இதர ஆபரணங்கள் மற்றும் நாணயங்களை அவளது கணவனின் படுக்கையறை கதவின் முன் குவித்தாள். மேலும் அவள் வீடு முழுவதும் முடிந்த அளவு நிறையத் தீபங்களை ஏற்றினாள். பின்னர் அவள் தனது கணவனின் அருகில் அமர்ந்து அவன் தூங்கி விடாமல் தடுப்பதற்காக இரவு முழுவதும் பலவேறு கதைகளைச் சொல்லிக் கொண்டும் பாடல்களைப் பாடிக் கொண்டும் இருந்தாள்.

பாபு வடிவில் எமன்

விரைவில், யமதர்ம ராஜன் அரசன் ஹிமாவின் மகனைத் தேடி பாம்பு வடிவில் வந்தான். ஆனால் பல்வேறு ஆபரணங்கள், விளக்குகள் மற்றும் நாணயங்களின் ஒளி அவரது பார்வையை மறைத்ததால், அவரால் அரண்மனை படுக்கையறைக்குள் நுழைய முடியவில்லை.

திரும்பிச் சென்ற எமன்

மாறாக, அவர் அந்த ஆபரணக் குவியல்களின் உச்சியில் ஏறி அமர்ந்து ஹிம அரசனின் மகனது மனைவி பாடிய பல்வேறு காதுக்கினிய பாடல்களைக் கேட்கத் தொடங்கினார். காலைப் பொழுது விடிந்ததும் யமதர்ம ராஜன் இளவரசனுக்கு எந்தத் தீங்கும் செய்யாமல் அங்கிருந்து வெளியேறினார்.

தந்தேராஸ் ‘எம தீப் தான்’

அப்போது முதற்கொண்டு தந்தேராஸ் ‘எம தீப் தான்' என்றும் அறியப்படுகிறது. மரணத்தின் கடவுளான யமதர்ம ராஜனின் நினைவாக, மக்கள் அன்று இரவு முழுவதும் தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள். தாந்தேராஸ் தினத்தன்று மக்கள் தங்க ஆபரணங்களையும், நாணயங்களையும் வாங்குவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். தந்தேராஸ் அனைவருக்குமான ஒரு பண்டிகையாகும்.

முக்கியமான நாள்

ஆனால் தங்கத்தில் முதலீடு செய்யும் வியாபாரிகளின் ஒட்டுமொத்த சமூகத்திற்கு மிக முக்கியமான ஒரு நாளாகும். தந்தேராஸ் பொதுவாக லக்ஷ்மி பூஜைக்கு ஒரு நாள் முன்னதாக வருகிறது.

லக்ஷ்மி தேவி அருள்

மேலும் லக்ஷ்மி தேவி தனது பக்தர்களின் மீது தனது அருளைப் பொழியும் ஒரு நாள் என்று சொல்லப்படுகிறது. அன்றைய தினத்தில் புதிய பொருட்கள் அல்லது தங்கம் வாங்குதல், செல்வம் மற்றும் செழிப்பின் அதிதேவதையான லக்ஷ்மி தேவியை வரவேற்கும் ஒரு வழியாகக் கருதப்படுகிறது.

குபேர வழிபாடு

மேலும், செல்வத்திற்குக் கடவுளான குபேரனையும் இந்த நாளில் வழிபடுகிறார்கள். உண்மையில், பக்தர்கள் தந்தேராஸ் தினத்தன்று குபேர லக்ஷ்மி பூஜை செய்கிறார்கள். அன்றைய தினத்தில் தங்கம் வாங்குதல் ‘செல்வம்' நல்ல அதிருஷ்டத்தின் அறிகுறியாக நம்பப்படுகிறது. அதனால் தான் மக்கள் கடவுள் லக்ஷ்மி தேவி அல்லது கணேசரின் உருவப்படங்கள் பொறித்த தங்க நாணயங்களை அன்றைய தினத்தில் வாங்குகிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Why Dhanteras considered as auspicious day to buy gold?

Why Dhanteras considered as auspicious day to buy gold?
Story first published: Monday, October 16, 2017, 11:35 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns