வெள்ளி நாணயங்கள், நகைகளுக்கு ஹால்மார்க் அவசியமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் தங்கத்திற்கும், வெள்ளிக்கும் எப்போதும் டிமாண்ட் அதிகம் தான், குறிப்பாக விழாக்காலம், அறுவடைக் காலம் வந்துவிட்டால் போதும் பெரு நகரங்கள் முதல் இந்திய நகரங்கள் வரையில் அனைத்துத் தரப்பு மக்களும் தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கிக் குவிப்பது ஒரு வாடிக்கையாகவே வைத்துள்ளனர்.

இந்த நிலையில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், நகைகள் வாங்கும் போதும் அனைத்து தரப்பினரும் முக்கியமான கவனிப்பது அதன் தரம் மற்றும் கடையின் நம்பகதன்மை.

மெய்டன் ஃபார்மாசூட்டிகல்ஸ் நிறுவன மருந்தால் என்ன பிரச்சனை.. WHO எச்சரிக்கைக்கு என்ன காரணம்? மெய்டன் ஃபார்மாசூட்டிகல்ஸ் நிறுவன மருந்தால் என்ன பிரச்சனை.. WHO எச்சரிக்கைக்கு என்ன காரணம்?

தங்கம் மற்றும் வெள்ளி

தங்கம் மற்றும் வெள்ளி

இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளியின் தரத்தை உறுதி செய்யவும், நாடு முழுவதும் தர மேம்பாட்டை உறுதி செய்ய மத்திய அரசு அனைத்து ஆபரணக் கடைகளுக்கும், நகைகளுக்கும் ஹால்மார்க் தரத்தை நடைமுறையாக்கியுள்ளது.

ஹால்மார்க்

ஹால்மார்க்

ஜூன் 1, 2022 முதல் அனைத்து நகை கடைகளும் ஹால்மார்க் தரத்திலும், ஹால்மார்க் முத்திரையுடன் தான் விற்பனை செய்ய வேண்டும் என்ற உத்தரவையும் மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இதைக் கடைப்பிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் அனைத்து நகை கடைகளும் இதைப் பின்பற்றி வருகிறது.

வெள்ளி-க்கு ஹால்மார்க்

வெள்ளி-க்கு ஹால்மார்க்

இந்தக் கட்டப்பாட்டைப் பல மாநிலங்கள், நகரங்கள் எதிர்த்துவந்தாலும் படிப்படியாக மத்திய அரசு அனைத்து நகைக்கடைகளிலும் இதைக் கட்டாயமாக்கியுள்ளது. இந்த நிலையில் வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்களுக்கு ஹால்மார்க் முத்திரை அவசியமா..?

அவசியம் இல்லை

அவசியம் இல்லை

Bureau of Indian Standards (BIS) விதிகளின் படி ஹால்மார்க் முத்திரை அல்லது தரம் என்பது தங்கத்திற்கு மட்டும் தான், வெள்ளிக்கு ஹால்மார்க் முத்திரை அவசியம் இல்லை. இதனால் வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்களுக்கு ஹால்மார்க் முத்திரை அவசியம் இல்லை.

தரம் பிரிவுகள் உண்டு

தரம் பிரிவுகள் உண்டு

ஆனால் ஜூன் 14, 2018ல் மத்திய அரசு வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்களுக்கும் ஹால்மார்க் முத்திரை வேண்டும் எனக் கூறியிருந்தது, ஆனால் அதைக் கட்டாயமாக்கவில்லை. இதனால் நகை கடைக்காரர்கள் தங்களின் தயாரிப்புகளின் தரத்தை உறுதி செய்ய வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்களுக்கும் ஹால்மார்க் முத்திரை அச்சிடலாம்.

இந்திய வெள்ளி ஹால்மார்க் தரம்

இந்திய வெள்ளி ஹால்மார்க் தரம்

இந்திய வெள்ளி ஹால்மார்க் IS 2122:2014 விதிகள் படி இந்தியாவில் 990, 970, 925, 900, 835, 800 தர பிரிவில் வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்களை விற்பனை செய்யலாம். இதில் 990 ரக ஹால்மார்க்-ல் 99 சதவீதம் வெள்ளி இருக்கும். இதுவே 800 ரக ஹால்மார்க்-ல் 80 சதவீத தூய்மையான வெள்ளி மட்டுமே இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Does silver jewellery, coins have hallmark mandatory rules; 6 purity level of silver

Does silver jewellery, coins have hallmark mandatory rules; 6 purity level of silver
Story first published: Thursday, October 6, 2022, 20:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X